முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை - சரவணன் சந்திரன்

https://youtu.be/Gmc6g3lyeGw 

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்று சொல்வார்கள். ஓரளவிற்கு அது உண்மைதான். என்றாலும், எல்லா நேரங்களிலும் பொன்மொழி அடிப்படையிலேயே வாழ்வு நகர்கிறதா என்ன? காலத்துக்குக் காலம் ஒவ்வொன்றுமே மாற்றம் கண்டபடியேதானே இருக்கிறது?

அறைக்கு வெளியே வைத்தே, "டேய் செல்போன்ல பார்த்ததை எல்லாம் உள்ள பண்ண நினைக்காத அவங்க விருப்பமும் முக்கியம்" எனப் பையனிடமோ, "ஏம்மா இங்க பாரு. மொத நாள் கூடக் குறைய இருக்கும்தான். அதுக்காக நாளைக்கு காலையிலயே ஆண்மை இல்லாதவன்னு கோர்ட் வாசல்ல போயி நின்னிடாத" எனப் பெண்ணிடமோ சொல்கிற மாதிரிதான் காலம் இருக்கிறது.
இயற்கை உந்துதல் சார்ந்த இதிலேயே, நாசுக்குகளைச் சொல்லித்தர வகுப்புகள் இப்போது வந்து விட்டன. அதே போலத்தான் எழுத்து சார்ந்த வகுப்புகளும். கவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியுமா? என்பது போன்ற கேள்விகள் இப்போது எழுகின்றன.
முழுக்க முடியாதுதான். ஆனால் என்னளவில் ஒரு விஷயத்தைக் கோடிட்டுக் காட்ட முடியும். இதுமாதிரியான வகுப்புகளின் வழியாகத் தயக்கத்தை உடைக்க முடியும். அது உடைந்து விட்டால் அப்புறம் உன்பாடு. என்னையே எடுத்துக் கொண்டால், நான் முதலில் எழுதியது நாவல்தான். ஐந்து முதலைகளின் கதை நாவல் வெளியீட்டு விழாவில் வைத்து, "முதல்லயே நாவல்தானா? சிறுகதைலாம் எழுதி பார்க்கலையா?" என்று குரலைத் தாழ்த்திக் கேட்டார் நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர். அவர் பல வருடங்களாகச் சிறுகதை எழுதுகிறார். ஆனால் நாவல் எழுதவில்லை இன்னும்.
காரணம், தயக்கம்தான் என்பதை உறுதியாகச் சொல்வேன். அந்தத் தயக்கத்தைச் சுற்றி ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டார், அவ்வளவுதான். ஏற்கனவே எழுத்து சார்ந்த துறையில் இருந்ததால் அந்தத் தயக்கத்தை என்னால் எளிதில் உடைக்க முடிந்தது. அப்புறம் என்னுடைய இயல்பான குணம். எதையும் நேருக்கு நேர் நின்று அச்சமின்றி உற்றுப் பார்ப்பது. அதனால் சாத்தியமாகி விட்டது. சரஸ்வதி கிருபையும் உண்டு.
எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தர் மிக நன்றாக எழுதுகிறார். அவ்வபோது எனக்கு அனுப்பி வைப்பார். அவரிடம் சொல்வதற்கு நாவலுக்குண்டான வாழ்க்கை ஒன்றும் இருக்கிறது. எழுதச் சொன்னால், "நாவலா? நானா? அது எப்படி முடியும்?" என்கிறார் படபடப்பாக. அந்த வடிவத்தைக் கண்டு அச்சப்படுகிறார். அந்த அச்சம் அவரிடம் இருந்து கழன்று கொள்கிற அன்று நிச்சயமாக நாவலை எழுதத் துவங்கி விடுவார்.
இதுமாதிரியான வகுப்புகளின் வழியாக அந்தத் தயக்கத்தையும் அச்சத்தையும் ஓரளவிற்குக் களைந்து விட முடியும் என்பதே என் கருத்து. பேயைப் பற்றித் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தாலே பேயைப் பற்றிய பயம் நிச்சயம் போய்விடும். அதற்காக தயக்கமும் அச்சமும் போய்விட்டது எனச் சும்மா நினைத்துக் கொண்டு குண்டுச் சட்டியில் குதிரையையும் ஓட்டி விட முடியாது. எந்த ஒரு விஷயத்தைச் செய்வதற்குமே ஆழ்ந்த பயிற்சியும் உழைப்பும் மிக முக்கியம். வெறும் கயிற்றில் முழம்போட முடியாது. முழம்கை வேண்டும் அதற்கு.
இப்போது எழுத்தாளர் அபிலாஷ் நாவல் குறித்த வகுப்பு ஒன்றை இணையம் வழியாக நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார். அபிலாஷை பொறுத்தவரை அவர் அடிப்படையில் ஆசிரியர் என்பதால் ஒரு விஷயத்தை எளிதாக விளக்கி விட முடியும். கூடவே எல்லா மொழி ஆக்கங்களையும் கூடுமான அளவிற்குப் படிக்கிறவர். தத்துவம் சார்ந்த படிப்பும் அவரிடம் இருக்கிறது.
அந்த வகுப்பில் நிச்சயம் பல்வேறு நாவல்கள் குறித்து பிரித்துத் தொகுத்துப் பேசுவார். இதன் வழியாக நாவல் என்கிற வடிவத்தின் மீது அச்சமற்ற ஒரு பிடிமானம் கிடைக்கக் கூடும். மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கை எட்டிப் பார்க்கையில், கம்பி வேலிப் பிடிமானம் இருக்கிற மாதிரி.
சந்தேகங்களைக் கேட்க முடியும். அதன் வழியாக உள்ளுக்குள் உருவாக்கி வைத்து இருக்கிற, ஒரு விஷயம் குறித்த தயக்கம் சார்ந்த கருத்துக்கள் உடைபடவும்கூடும். அந்தக் கருத்து உடைந்தால் போதும். முதலிலேயே சொன்ன மாதிரிதான். அதற்கப்புறம் உங்கள் பாடு. உள்ளுக்குள் திரண்டு வருகிற அந்த ஒன்றின் பாடு. எந்த விதை பொத்துக் கொண்டு மேலேறி வந்து விருட்சமாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் உரத்தை ஏந்திப் பெற்றுக் கொள்ளலாம், தப்பில்லை. தீவிரமாகப் பரிந்துரைக்கிறேன்.
(இந்த வகுப்பில் இணைய விரும்புகிறவர்கள் அபிலாஷின் பக்கத்திற்குச் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்).

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.