முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யார் யாருக்கெல்லாம







ஆன்லைன் நாவல் வகுப்புக்கான கட்டண கழிவு குறித்து ஒரு தெளிவுபடுத்தல். கீழ்வருவோருக்கு 50%:
1) எனக்கு நெருக்கமான நண்பர்கர்களுக்கு (என்னுடன் நட்பு பாராட்டும் நல்லுள்ளத்துக்கு)
2) மாற்றுத்திறனாளிகளுக்கு (என்னுடைய அடையாள அரசியல்)
3) ஏழை மாணவர்களுக்கு (அவர்களுக்கு சுயசம்பாத்தியம் இல்லை என்பதால்)
4) உடற்சிக்கலாலோ வேறு காரணங்களாலோ பொருளாதார பிரச்சினைகளில் இருப்பவர்கள்.
நான்காவதாக ஒரு பிரிவினர் உண்டு. ஏற்கனவே புனைவு எழுதி பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு 100%. அதற்கு நடைமுறை காரணங்கள் ஒன்று உண்டு:
அவர்களுக்கு ஏற்கனவே கதையெழுதத் தெரியும். என்னுடைய பாடத்திட்டம் எழுதத் தெரியாத, சொந்தமாக பாணியோ, இலக்கிய பின்னணியோ இல்லாத மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. நிலைப்பெற்று விட்ட படைப்பாளி ஒருவருக்கு என்னால் எந்த அடிப்படையை சொல்லித் தர முடியும் எனத் தெரியவில்லை என்பதால் அவரிடம் கட்டணம் வாங்க மனம் வரவில்லை.
அடுத்து நிலைப்பெற்று விட்ட ஒரு கதைசொல்லியை என்னால் மாணவராக நடத்த முடியுமா? சொன்னால் கேட்பார்களா? தெரியவில்லை. என்னுடைய பாணி மாணவர்களை நுண் நிர்வாகம் செய்வது. (என்ன எழுதுகிறார்கள், எப்போது எவ்வளவு எழுதுகிறார்கள், என்ன நினைக்கிறார்கள் என ஒவ்வொன்றும் எனக்குத் தெரிந்து கொண்டு அவர்களை கடைசி வரை நெறிப்படுத்த முயன்றபடி இருப்பேன். சில நேரங்களில் அவர்களுடைய எழுத்தில் அவர்களை விட அக்கறை காட்டுவேன்.) ஒரு சக எழுத்தாளரிடம் அதை செய்ய மாட்டேன். அவர்களிடம் விலகியே இருந்தாக வேண்டும் என்பதால் வேலை குறைவு. வேலை குறைவு என்பதால் என்னைப் பொறுத்தமட்டில் வேலையே இல்லை. அதனால் கட்டணம் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன்.
அவர்கள் தாராளமாக வந்து கலந்து கொள்ளலாம். நான் அவர்களுக்கு உதவ முடியுமா என பார்ப்பேன். ஒத்து வந்தால் தயக்கத்துடன் இறங்கி வருவேன். ஆனாலும் எல்லை மீறாதபடி பார்த்துக் கொள்வேன்.
தோட்டத்துக்கு நீர் பாய்ச்சும் போது ஒரு காட்டுச்செடியும் தலையசைப்பதைப் போல என் வகுப்பில் அவர்கள் இருந்து கொள்வார்கள். அவர்களுடைய இருப்பு எனக்கும் உதவும். அவ்வப்போது அவர்களுடைய கருத்துக்களையும் அனுபவங்களையும் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம்.
அதே நேரம் எழுத்தாளர்கள் அல்லாத நண்பர்களை மாணவர்களாக கருதுவதில் மேற்சொன்ன சிக்கல்கள் இராது.
இதை நான் தெளிவுபடுத்த காரணம் முழு கட்டணம் செலுத்தி சேர்வோர் மேற்சொன்ன நிபந்தனைகளை எண்ணி குழப்பமடையக் கூடாதென்பதே. இந்த உலகில் எல்லாமுமே நிபந்தனைக்குட்பட்டது தானே. என் வகுப்பில் மாணவராக இருப்பதும் உட்பட.
பி.கு: வகுப்பு குறித்து மேலதிக தகவல்களுக்கு - 9790929153

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...