முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் எழுத கணினி அவசியமா?

 எழுதுவதற்கான கருவி, அது கணினியோ பெரிய மேஜையிடப்பட்ட தனியறையோ அவசியமில்லை. அக ஊக்கமும் கனவும் வழிநடத்தினாலும் உங்களால் ஒரு பக்க காகிதங்களில் கூட கதையெழுதலாம், ஆசோகமித்திரன் செய்ததைப் போல. உள்ளங்கை அளவுள்ள செல்போனிலே ஒரு பெரிய புத்தகத்தை சிறுக சிறுக எழுத முடியும். மனுஷ்யபுத்திரன் கடந்த இரு ஆண்டுகளாக பிரசுரித்துள்ள ஆயிரம் பக்க கவிதைத்தொகுப்புகள் முழுக்க முழுக்க திறன்பேசியில் ஒற்றை விரலால் அவர் எழுதியவையே. அண்மையில் சுரேஷ் பிரதீப் முழுக்க முழுக்க திறன்பேசியில் எழுதிய நாவலொன்றை பிரசுரித்தார். இன்று ஜப்பானில் வெளியிடப்படும் பாதிக்கு மேற்பட்ட பெஸ்ட் செல்லர்கள் திறன்பேசியில் எழுதப்பட்டவையே.

 அது மட்டுமல்ல, இன்று நீங்கள் எழுதும் அவசியம் கூட இல்லை - கூகிள் டாக்ஸ் போன்ற செயலிகள் குரலை எழுத்தாக்கும் வசதியை அளிப்பதால் நீங்கள் பேசியே கூடஎழுதமுடியும். இவ்வளவு சௌகரியங்கள் இருக்கையில் நம்மை எழுதவிடாமல் தடுப்பவை அறிவின் போதாமையையும் தயக்கமும் தாம். அவற்றைப் பெற நீங்கள் நாவல் வகுப்பில் சேர வேண்டும். வகுப்பில் சேரவும் உங்களுக்குத் தேவை வெறுமனே ஒரு திறன்பேசியும் இணையத் தொடர்பும் மட்டும் தான். சில சோதிடர்கள் வெற்றிலையில் மை தடவி அதில் கடந்த, எதிர்காலங்களைப் பார்ப்பதைப் போல நீங்கள் உங்கள் கைப்பேசியில் காலாதீதமான படைப்புகளை உருவாக்கிப் பார்க்கலாம்


தொடர்புக்கு 9790929153




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...