முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வறியாத விரல்கள்


 

இந்நேரம் ஆசானின் ஓய்வறியாத விரல்கள் இவ்வாறு எழுதிக்கொண்டிருக்கும்...

"சுந்தர ராமசாமியின் இல்லத்தில் வைத்துதான் வேங்கடாசலபதியைச் சந்தித்தேன். கெச்சலான இளைஞர். வரலாறு, பண்பாட்டு நகர்வுகள் குறித்த ஆர்வம் கொண்டவர். சுந்தரராமசாமி மீது அபாரமான பற்றுக் கொண்டவர். பாரதியையும் வ.உ.சியையும் ஆய்வுபூர்வமாக விரிவாக தமிழுக்கு அறிமுகப்படுத்தும் துடிப்பு இருந்தது. கல்விப்புல கண்ணோட்டம் கொண்ட கூர்மையான மன அமைப்பு. என்னைப் பார்த்ததும் நீண்ட நேரமாக பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் துளைத்துக் கொண்டிருந்தார் ... வேங்கடாசலபதி தமிழில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தாலும் அவரை யாரும் பொருட்படுத்தவில்லை. நானே அவரது எழுத்துக்கான தடத்தை வரைந்தளித்து திசையையும் உருவாக்கினேன். நான் தான் அவரைப் பற்றி பலரிடம் எடுத்துச் சொல்லி பல இடங்களிலும் எழுதி அவருக்கான இடத்தை அமைத்துக்கொடுத்தேன். ...
அண்மையில் சாகித்ய அகாடெமியின் விருதுக்குழுவின் இறுதிக் கட்ட பரிசீலனையில் வந்த பெயர்களில் பொருட்படுத்தத்தகாத ஒருவருக்கு விருதைக் கொடுத்த சிலர் தவறான வழியில் முயன்றுகொண்டிருப்பதாக தகவல் வந்தது. தமிழின் முக்கிய விமர்சகரும் படைப்பாளியுமான சிலர் என்னை அங்கிருந்தே அழைத்து நீங்களே எதையாவது செய்து தமிழ் இலக்கியத்தைக் காப்பாற்றுங்கள் என்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்திலும் அறிவுச்சூழலிலும் முக்கியமான பெயர்கள் யாரென முடிவெடுக்கிறவனாக, பலருக்கும் விருதளித்து அங்கீகரித்தும் விருதுகளைப் பெற்றுத் தந்தும் திசையை அமைக்கிறவனாக இது எனது கடமை என்றனர். அதனாலே நான் உடனே என் போனை எடுத்து...
இப்படித்தான் சலபதிக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது. இதைக்கூட இந்நேரம் நாம் பிரஸ்தாபித்திருக்க மாட்டேன். ஆனால் சில அறிவிலிகளும் அற்பப் பதர்களும்..."
அதைப் படிக்கும் தமிழ் அறிவலகம்: ஓ மை காட்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...