முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சிகளை முறைப்படுத்துவதன் அவசியம்

மனுஷ் இப்படிச் சொல்வதால் குறைகள் கவனம் பெறும். அது முக்கியம்   யாராவது இந்த நிகழ்வுகளை முறைப்படுத்த வேண்டும். இலக்கிய விசயங்களில் கடும் விமர்சனங்களே மிகவும் சரியான அணுகுமுறை என நினைக்கிறேன். எழுத்தாளர் எப்போதும் வெளியாளாகவே இருக்க வேண்டும். கவலை, பொறுப்பு, சொற்களில் கவனம் எல்லாம் இருக்கக் கூடாது. தார்மீகக் கோபமும் உண்மையும் மட்டும் போதும். அவ்விதத்தில் தமயந்தியின் விமர்சனம் எனக்குப் பிடித்திருந்தது. 

திமுக அரசின் முயற்சிகள் சிறப்பானவை, பாராட்டுக்குரியவை. ஆனால் அவர்களுடைய செயல்பாடுகளில் கோளாறுகள் தோன்றும்போது தட்டிக்கேட்க வேண்டும். அதில் மிகை இருந்தாலும் நல்லதே. மிகையை மட்டுமே நாம் பொருட்படுத்துவோம். மென்மையாக சொன்னால் யார் காதிலும் விழாது. 

 - அபிலாஷ்

%%%%

 
(...)

 மாவட்ட தோறும் புத்தக கண்காட்சிகள் ஒரு பெரும் திருவிழா போல நடந்து வருகின்றன.  பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளின் சங்கமமாக இந்த கண்காட்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் முன்பு ஒருபோதும் தமிழ்நாட்டில் நடந்ததில்லை. 38 மாவட்டங்களில் ஒரு வருடத்தில் எத்தனை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்கின்றன, மொத்தமாக எத்தனை லட்சம் வாசகர்கள் வருகிறார்கள்,  ஆயிரத்திற்கு மேற்பட்ட உரைகள் ஒரு வருடத்தில் புத்தக கண்காட்சிகள் மட்டும் நிகழ்த்தப்படுகின்றன என்பதை எல்லாம் பண்பாட்டு நிகழ்வாக பார்க்க வேண்டும்.

 சில குறைகளும் வருத்தங்களும் இருக்கலாம்.  அவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த குறைகளுக்காக ஒட்டுமொத்த புத்தக கண்காட்சி இயக்கத்தை எதிர்மறையாகப் பார்த்து எழுதும் போக்கு அவ்வளவு நியாயமற்றதில்லை என்று நினைக்கிறேன். 

தினமும் ஒரு நவீன எழுத்தாளர், ஒரு மேடைப் பேச்சாளர், ஒரு இலக்கிய விமர்சகர் என்ற அளவில் மேடைகளை அமைக்கலாம். அதில் நடைமுறையில் எந்தக் சிக்கலும் இல்லை. பிரபலமான பேச்சாளர் பேசினால்தான் கூட்டம் கூடும் என்பது கற்பனை. அத்தகைய பேச்சாளர்கள் பேசிய பல புத்தகக் கண்காட்சி அரங்குகளில் வெறும் ஐம்பது பேர் அமர்ந்திருக்கும் காட்சியை எல்லாம் கண்டிருக்கிறேன். 

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள புத்தகக் கண்காட்சிகளிலும் உள்ள புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்களுக்கும் யாரெல்லாம் தமிழிலில் நல்ல எழுத்தாளர்கள் என ஒரு கையேடு அச்சிட்டு அனுப்பலாம் என்று நினைக்கிறேன். அரசாங்கம் பெரும் நிதிச் செலவில் நல்லெண்ணத்தோடு நடத்தும் புத்தகக் கண்காட்சிகளுக்கு சில பொறுப்பற்ற நபர்கள் கெட்ட பெயரைத் தேடித் தருகிறார்கள்.

ஒருவருடத்தில் நான்கைந்து புத்தகக் கண்காட்சிகளில் பேச எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் அதிகம். ஒரு கவிஞன், பிரபல முகம், மேடைகளில் சிறப்பாக பேசக்கூடியவன், பொது நூலகத்துறையை சேர்ந்தவன், ஆளும் கட்சியைச் சேர்ந்தவன் என இத்தனை தகுதிகள் இருந்தாலும் அந்த மாவட்ட கமிட்டியில் என்னை அறிந்த யாராவது இருந்தால்தான் அழைப்பார்கள். நான் எங்கும் எந்த முன்னுரிமையும் பெற்றதில்லை.

நான் புத்தகக் கண்காட்சிகளில் பேசுகிற இடங்களில் எல்லாம் அங்கு அழைக்கப்படாத படைப்பாளிகளின் படைப்புகள் குறித்தே பேசுகிறேன்.

அதே சமயம், இவ்வளவு பெரிய ஒரு அறிவுசார் பண்பாட்டு நிகழ்வினை பேச அழைக்கப்படுபவர்களை மட்டும் மையமாக வைத்து முற்றிலும் ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்குவது ஏற்புடையதல்ல.

எல்லாவற்றையும் தொடர் முயற்சியால் செழுமைப்படுத்தலாம். ஜனநாயகப் பண்பு நம் அனைவருக்குமே தேவை. 

(...)

- மனுஷ்யபுத்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...