அண்மையில் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தனக்கு மிகவும் பிடித்த பெண் என்று பெண்ணின் ரீல்ஸைக் காட்டினார். மிகையான சிரிப்புடன் படு கவர்ச்சியாக அப்பெண் நடப்பது, குனிவது, கோலமிடுவது, ஜாகிங் போவது என பல காணொளிகள். அவரிடம் இது செய்யறிவால் உருவாக்கப்பட்டது, இப்பெண்ணே இல்லை என்று சொன்னதும் அவர் அதிர்ந்துவிட்டார். அதன்பிறகு என்னிடம் சிறிது நேரம் பேசவே இல்லை. இன்று இன்னொரு பக்கத்தை பேஸ்புக்கில் பார்த்தேன். இதே செய்யறிவு படைப்புகள். ஒடிசாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரில் நடத்துகிறார்கள். அப்பெண் பேசுவது, பாடுவது, ஆடுவது என காணொளிகள். வேறேதோ பக்கத்தில் இருந்து எடுத்த இளம்பெண்ணின், வயதான பெண்ணின் படங்களுடன் இதையும் இணைத்து குடும்பச் சித்திரங்களையும் பதிவேற்றியிருந்தார்கள். ஒவ்வொரு படத்துக்கும் ஆயிரக்கணக்கில் விருப்பக்குறிகள், காணொளிகளுக்கு அதைவிட அதிகம். மென்பொருளுக்கு சந்தா கட்டி இப்படியான காணொளிகளையும் பக்கங்களையும் உருவாக்கி பேஸ்புக்கில் பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள். சில நிமிடங்களில் முடிகிற காரியம். அதில் ஒரு வருமானம். இதை உண்மையென நம்பி என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறாயா, இதுதான் ...