முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி – பந்து வீச்சு




2003 உலகக்கோப்பை இறுதிப் போட்டி நினைவிருக்கும். அதுவரை தொடரில் நன்றாக வீசி வந்த நம் வேகவீச்சாளர்கள் பதறி விதிர்விதிர்த்து மோசமாக வீசினர். 12 வருடங்களுக்கு பிறகு அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நம் வேகவீச்சாளர்கள் அதே போல் பதறி குழம்பிப் போய் பந்து வீசினர். ஷாமி, மோஹித் ஆகியோர் இத்தொடர் முழுக்க ஒரு குறிப்பிட்ட நீளத்தில் தொடர்ந்து வீசினதால் மட்டுமே நன்றாக வீசி விக்கெட்கள் வீழ்த்தினர். ஆனால் இன்றோ ஆஸ்திரேலியா ஆடுவதற்கு முன்பே அவர்கள் நிதானம் இழந்து பயப்பட துவங்கினர். அதனால் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தும் மிகை ஆர்வத்தில் ஒரே ஓவரில் பல பந்துகளை வீச முயன்று சொதப்பினர்.


 இன்றைய ஆட்டத்துக்கான ஆடுதளம் சற்றே மெத்தனமானது. ஆனால் இலங்கை ஆஸ்திரேலியா காலிறுதி ஆட்டம் நடந்த அன்று அளவுக்கு மெத்தனம் அல்ல. இந்த தளத்தில் 300க்குள் ஆஸ்திரேலியாவை நாம் சுருட்டியிருக்க முடியும். சற்று நிதானமாக அமைதியாக வீசியிருக்கும் பொருட்டு. ஆனால் நம் பந்து வீச்சாளர்கள், களத்தடுப்பாளர்கள் யாருமே இன்று உள்ளமைதியுடன் இல்லை.
இருந்தும் கூட அஷ்வின், ஷாமி ஆகியோர் அவ்வப்போது நன்றாக வீசியதால் மேக்ஸ்வெல், வாட்ஸன் ஆகியோரை சரியான நேரத்தில் வீழ்த்த முடிந்தது. வார்னர், கிளார்க் போன்றோரின் விக்கெட்டுகள் அதிர்ஷ்டத்தில் கிடைத்தன. மேக்ஸ்வெலின் விக்கெட் கிடைத்ததும் நம் வீரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகமானது. அடுத்து எட்டு ஓவர்கள் நன்றாக வீசினார்கள். அமைதியும் நிதானமும் பந்து வீச்சில் தாளமும் திரும்பியது. இறுதி சில ஓவர்கள் மீண்டும் பதற்றத்தில் மோசமாய் வீச ஜான்சனின் காட்டு சுற்றலில் இருபது ஓட்டங்கள் கூடுதலாய் கொடுக்க நேர்ந்தது.
மேக்ஸ்வல் மட்டும் வெளியேறாமல் 48 ஓவர்கள் வரை ஆடியிருந்தா ஆஸ்திரேலியா 370இல் இருந்து 400 வரை எட்டி இருக்கும். அவ்விதத்தில் 328க்குள் சுருட்டியது என்பது ஒரு சின்ன சாதனை தான்.
இப்போதும் கூட இந்த 329 இலக்கை நம்மால் விரட்டி அடைய முடியும். ஆனால் அதற்கு நாம் நிதானமாக ஆட வேண்டும். முதல் இருபது ஓவர்கள் விக்கெட் கொடுக்க கூடாது. நூறு ஓட்டங்கள் எடுத்தால் கூட போதும். ஜான்சன், ஸ்டார்க்கை கடந்தால் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல வீச்சாளர்கள் இல்லை. ஆஸ்திரேலியாவின் வியூகம் எப்போதுமே முதல் இருபது ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகள் எடுப்பது தான். அதனால் தான் அவர்கள் மட்டையாட்டத்தை வலுவாக வைத்து பந்து வீச்சை பலவீனமாக கொண்டுள்ளார்கள். அவர்களின் திட்டத்தை முறியடித்து நிதானமாக ஆடினால் நாம் நிச்சயம் வெல்ல முடியும். ஆனால் பந்து வீச்சில் காட்டின பதற்றத்தை மட்டையாட்டத்திலும் காட்டினால் நாம் 20 ஓவருக்குள் 90 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் கொடுத்திருப்போம். பிறகு தோனியும் ரெய்னாவும் ஜடேஜாவுமாக நத்தை ஓட்டம் ஓடி 80 ஓட்டங்களுக்கு ஆஸ்திரேலியாவிடம் தோற்போம். 2003 இறுதி ஆட்டம் மீண்டும் மறு ஒளிபரப்பானது போல் இருக்கும்.
இன்று எந்த இந்தியா மட்டையாடுகிறது எனப் பார்ப்போம். நடுக்கமுற்ற இந்தியாவா அமைதியான இந்தியாவா? 2011 இறுதிப் போட்டியில் இறங்கின இந்தியாவா 2003இல் களமிறங்கின இந்தியாவா?
இப்போதைக்கு நம் வெற்றி வாய்ப்பு 60-40 தான். அரை இறுதி போட்டிகளில் பதற்றமாவது இயல்பு தான். நியுசிலாந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பதற்றமாக பந்து வீசியது. ஆனால் மட்டையாட்டத்தில் அமைதியும் நிதானமும் கொண்டிருந்தது. அதனால் வென்றது. இந்தியா என்ன பண்ணுகிறது என பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...