’’ மனுஷ்ய புத்திரன் நாலாந்தர மான வணிக எழுத்துகளை இலக்கியம் என்ற பெயரில் பதிப்பிக்கிறார்” . என ஜெயமோகன் கூறியிருக்கிறார். ஒருவருக்கு எதிரான எந்த ஒரு அவதூறும் அவரை முன்னெடுப்பதற்கான ஒரு நல்வாய்ப்பையும் சேர்த்தே அளிக்கிறது. ஜெயமோகனின் இந்த கூற்றை எடுத்துக் கொள்வோம். இது உண்மையா? எனக்குத் தெரிந்த கடந்த பத்து வருடங்களில் தமிழில் வெளிவந்த மிக முக்கியமான புனைவு நூல்களை உயிர்மையும், தமிழினியும் சேர்த்து கொணர்ந்துள்ளன. முக்கியமான கட்டுரை நூல்கள், ஆய்வு நூல்கள், மொழியாக்கங்கள் காலச்சுவடில் இருந்து வந்துள்ளன. கவிதைகளை பொறுத்த மட்டில் உயிர்மை, காலச்சுவடு, புதிய எழுத்து ஆகிய பதிப்பகங்களை சொல்லலாம். உயிர்மையில் பெரும்பாலான முக்கிய தமிழ் எழுத்தாளர்களின் நூல்களும் வந்துள்ளன. அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தவற்றை ஒரு பட்டியல் போடுகிறேன்.