முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என்கவுண்டர் என்பதே போலி இல்லையா?


திருப்பதி வனப்பகுதியில் நடந்த 20 பேர் என்கவுண்டர் பற்றின சேதிகளை கேட்கும் போது எனக்கு மேற்கண்ட கேள்வி தான் எழுகிறது. இந்த என்கவுண்டர் சம்மந்தமாக மீடியா முன்வைக்கும் கேள்விகளான 20 பேரும் வெறும் உள்ளாடைகளுடன், ஒரு மாத பழைய சந்தனக்கட்டைகளுடன் படுக்க வைக்கப்பட்டுள்ளது, ஒரே போல் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் சுடப்பட்டிருப்பது, அங்கு 5 கிலோமீட்டர் சுற்றளவில் சந்தன மரங்களே இல்லாதது ஆகியவை இந்த என்கவுண்டர் காவல்துறையால் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தின் குறையை தான் மீண்டும் மீண்டும் விமர்சிக்கின்றன. ஒருவேளை இந்த என்கவுண்டர் இன்னும் நம்பத்தகுந்த முறையில் “சித்தரிக்கப்பட்டிருந்தால்” சரியா? அப்போது நம் மனசாட்சி உறுத்தப்பட்டிருக்காதா?

 ஒருவேளை அவர்கள் ஆடைகளுடன் வெவ்வேறு போஸ்களில், புதுசாக (போலிசாராலே) வெட்டப்பட்ட சந்தனக்கட்டைகளுடன், வெவ்வேறு இடங்களில் சுடப்பட்டிருக்க வேண்டுமா? அவர்களின் ஆயுதங்கள் என்ற பெயரில் சில கத்திகள், துப்பாக்கிள் அங்கு சிதற விடப்பட்டிருக்க வேண்டுமா? அவர்களால் தாக்கப்பட்டதாய் சில காவலர்கள் போலிக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் “அனுமதிக்கப்பட்டிருக்க்க” வேண்டுமா? அப்படி நடந்திருந்தால் ஒருவேளை இவ்வளவு தீவிரமான மீடியா கவனமும் பரபரப்பும் ஏற்பட்டிருக்காதோ?

 இந்த என்கவுண்டரின் சிறப்பே இது நம்மை எளிதாக கடந்து செல்ல அனுமதிக்காதபடி கொடூரமாக நடந்துள்ளது என்பது. நம்மைச் சுற்றி இன்னும் நாசூக்காய், சாமர்த்தியமாய் திட்டமிட்ட என்கவுண்டர்கள் நடக்கின்றன. அவை சரியாக களம் அமைக்கப்பட்டு நடிக்கப்பட்டதாலே போதிய மீடியா கவனம் பெறவில்லையோ?


அடிப்படையில் நாம் எல்லாவகை போலீஸ் சூடுகளையும் கடுமையாய் விமர்சித்து எதிர்க்க வேண்டும். நம்பத்தகுந்தபடியாய் சித்தரிக்கப்படுகிற என்கவுண்டர்களையும் தான். என்கவுண்டர் என்பதே போலி எனத் தெரிந்தும் கூட நாம் நம் பாசாங்கை அடித்து நொறுக்கும் இந்த வகையான வெளிப்படை என்கவுண்டர்களை மட்டும் வேறுவழியில்லாமல் எதிர்த்து கொந்தளிப்பது எந்த வகையில் நியாயம்? இது போன்று மோசமாக செட் செய்யப்பட்ட மற்றொரு என்கவுண்டர் நடப்பது வரை மீண்டும் கண்மூடி இருக்கப் போகிறோமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.