முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாதொரு பாகனை பதிப்பித்தவர் யார்?



நேற்றிரவு சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் ஒரு வேடிக்கையான விசயம் நடந்தது. இந்து முன்னணியின் ராஜேஷ் என்பவர் தொடர்ந்து “மாதொரு பாகன்” நாவல் பெண்களை மிகவும் ஆபாசமாய் சித்தரித்த நாவல் என கதறிக் கதறி திட்டிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன் “மாதொரு பாகன் நாவலின் பதிப்பாளர் யார்?”. அவர் சற்றும் கூச்சமில்லாமல் “எனக்குத் தெரியாது” என்றார். “நீங்கள் படிக்காத நாவல் பெண்களை கொச்சைப்படுத்துகிறது என எப்படி அபாண்டமாய் பழி சுமத்தலாம்?” எனக் கேட்டேன். அவர் உடனே மிகுந்த தன்னம்பிக்கையுடன் “அதெல்லாம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது பெண்களை இழிவு படுத்தும் மிக கேவலமான நாவல்” என உச்சஸ்தாயில் கத்த துவங்கினார்.

 எப்படித் தான் படிக்காத நாவல் பற்றி ஒரு நிலைப்பாட்டுக்கு அவர் வந்து சேர்கிறார் என நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். அவர் திருதிருவென விழித்தார். அடுத்து “சிம்புவும் இப்படித் தாங்க பீப் பாடல்னு ஒண்ணு” என்று சினிமா சர்ச்சைக்கு தாவினார்.
 சல்மான் ரஷ்டி, தஸ்லிமா நஸ்ரின், (நக்கீரனில் எழுதின கட்டுரைக்காக) மனுஷ்யபுத்திரன், ஹெச்.ஜி ரசூல் ஆகியோர் வலதுசாரிகளால் வேட்டையாடப்பட்ட போதும் அவர்கள் யாருமே எழுதப்பட்ட படைப்பை படித்திருக்கவில்லை தான். தாம் எதுவும் படிக்காமல் கூச்சலிடுகிறோம் என அம்பலம் ஆவதிலும் இவர்களும் எந்த அவமானமும் இல்லை. கடவுள் இவர்களை ஒரு வித்தியாசமான டிஸைனில் படைத்திருக்கிறார். ஆனால் பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் அடுத்த முறை ஒரு படைப்பு சர்ச்சைக்கு உள்ளாகும் போது அதை கண்டிக்கிறவர்களிடம் புத்தகம் பற்றின அடிப்படையான கேள்விகளைக் கேளுங்கள் (பதிப்பாளர் யார், பிரதான பாத்திரங்கள் யாரெல்லாம், கதைக்களம், கதை என்ன, சர்ச்சைக்குரிய பத்தி கதையில் எந்த இடத்தில் வருகிறது போன்று). அவர்கள் படிக்கவில்லை என்பதை அம்பலப்படுத்துங்கள். கோமாளிகளின் முகத்திரையை கிழிக்க வேறு வழியில்லை. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

சாருவும் கெர்ட் வொனெகெட்டும்

  எனக்கு சாருவின் நகைச்சுவையில் உள்ள கட்டற்ற தன்மை பிடிக்கும். அதை ஒரு அபத்த நகைச்சுவை என்று சொல்லலாம். அதில் ஒரு குழந்தைமை எப்போதும் இருக்கும். குறிப்பிட்ட நபர்களை, நம்பிக்கைகளை பகடி செய்வது அவரது நோக்கமாக இருக்காது. யாருமே பார்க்கவோ பேசவோ விரும்பாத ஒன்றைப் பகடி செய்வார். அந்த ஒன்று சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும். அதை ஒரு எதிர்மறை கடப்புநிலைப் பொருள் (negative transcendent) என்றோ நிகழாத இன்மை (unrealized emptiness) என்றோ சொல்லலாம். எதிர்மறை கடப்புநிலைப் பொருள் என்றொன்றைப் பற்றி யாரும் சொல்லியிருக்கவில்லை. குந்தர் ஆண்டர்ஸ் இதை எதிர்காலத்தில் தொழில்நுட்ப ஆதிக்கத்தால் நாம் நமது முன்னேற்றத்தால் நம்மைதே கடந்து அழிவை நோக்கிப் போவோம் எனும் பொருளில் பயன்படுத்தினார். நான் இதை வெற்றுக்குறிப்பான் எனும் பொருளில் பயன்படுத்துகிறேன். சாரு தொடர்ந்து ஆன்மீகம், தன்னைக் கடந்த மகத்தான அனுபவங்கள் குறித்து எழுதுவார். அதனூனே தான் அவரது இந்தப் பகடியும் நிகழும். அவரது எழுத்தின் அடிநாதமே சொல்ல வரும் விசயத்தைக் கடந்த உணர்வுநிலையை நமக்குத் தருவதுதான். இதுவே அதன் கடப்புநிலைத்தன்மை. ஆனால் அவர் நகைச்சுவை என்று வ...