முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (4)



Image result for bigg boss tamil

வெளிப்படையாய் அளந்து முன்வைக்கப்படும் வேலை ஒரு கொடுமையாய் நமக்குத் தெரிவதில்லை. துப்பாக்கிக்கு அடுத்தபடியாய் பயங்கரமான ஆயுதம் தகவல்கள்.  தகவல்கள் கடுமை தெரியாமல் ஒரு வேலையை ஒரு சுலப விளையாட்டாய், விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் செய்து முடிக்க வேண்டிய விளையாட்டாய் மாற்றுகின்றன.

வேலையும் விளையாட்டையும் ஒன்றாக மாற்றுவன கண்காணிப்பு கேமராக்கள். நம் அலுவலகங்களிலும் பிக்பாஸ் வீட்டிலும் இந்த கண்காணிப்பு உணர்வும், கண்காணிப்பின் வழி நம்மைப் பற்றி தொகுக்கப்படும் தகவல்களும் நம்மை ஏய்க்கின்றன.
இந்த வெளிப்படைத் தன்மை ஆயுதத்தை எப்படி முறியடிக்க முடியுமா?
முடியும்! அதற்கு கண்காணிப்புக் கேமரா முன் நாம் நடிக்கத் துவங்க வேண்டும். வேலையிடங்களில் வேலை பார்ப்பதாய் கச்சிதமாய் நடிக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டிலும் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் இதை நுட்பமாய் சாமர்த்தியமாய் செய்து பிக்பாஸுக்கே ஆப்படிப்பதைக் காணலாம்.
பிக்பாஸ் இவர்களைப் பற்றி அடிக்கடி சொல்லும் புகார் இவர்கள்வெளிப்படையாய் இல்லை”, “போலியாக இருக்கிறார்கள்என்பது. அதற்கு பதிலளிக்கும் பங்கேற்பாளர்கள் தாம்உண்மையாகவேஇருப்பதாய் உறுதியளிக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளிப்படையாய் இருப்பதாய் நடித்து வெளிப்படைத் தன்மையின் ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள். உதாரணமாய், தாம் அணிந்திருக்கும் மைக்குக்கு கேட்காமல், கண்காணிக்கும் படக்கருவிகளுக்குத் தெரியாமல் அவர்கள் சைகையில் பேசினால் முணுமுணுத்தால் பிக்பாஸிடம் மாட்டிக் கொள்வார்கள். பிக்பாஸை சமாளிக்கத் தெரியாமல் அவர்கள் திணறுகிறார்கள் என்பதை அது காட்டும். ஆனால் மைக்கில் கேட்க வேண்டும் என்றே, கேமராவில் தெரிய வேண்டும் என்றே அவர்கள் சத்தமாய் மிகையுணர்ச்சியுடன் நடந்து கொள்கையில் இவர்களை எப்படி குற்றம் சாட்டுவது, கண்டிப்பது என பிக்பாஸுக்கே குழப்பம் ஏற்படுகிறது. பிக்பாஸ் இரண்டாம் பருவத்தில் நான் பங்கேற்பாளர்களிடம் மிகவும் ரசித்த விசயம் இது.
கடைசியாய், பிக்பாஸ் நம் பாஸாகவும் தெரியும் காரணம்:
அது இருவருமே இரும்புக்கை மாயாவிகள் என்பது. கார்ப்பரேட்டுகளில் சதா பாஸ் நம்மை கண்காணிப்பதாய், மதிப்பிடுவதாய் ஒரு பிம்பம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் அவர் மாயமாய் இருப்பார்; அந்த மாயமே நம்மை தொடர்ந்து அச்சுறுத்தி ஓடி ஓடி வேலை செய்யத் தூண்டும்! ஒவ்வொரு முறை நமக்கு இந்த மாயமான் விளையாட்டு கசப்பை தரும் போதும், அழுத்தம் தாள முடியாது போகும் போதும், பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் கண்காணிப்பு கேமரா முன் நின்று புலம்புவது போல், நாம் நமது அணித் தலைவர்கள் அல்லது மனிதவளத் துறை அதிகாரிகளிடம் சென்று உணர்வுகளைக் கொட்டுகிறோம். அவர்கள் நம்மிடம் சொல்வார்கள்: “கவலைப்படாதீங்க, பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்.” நாம் மனதுக்குள் சொல்லிக் கொள்வோம்: “அதானே கவலையே!”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...