முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணுக்குத் தெரியாமல் பேட்டரியை கொல்லும் ஆப்கள்

Image result for phone charge draining fast



நான் ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் எல்லாம் தெரிந்தவன் அல்ல. பேஸ்புக் எட்டிப் பார்க்கவும் பாட்டுக் கேட்கவும் மட்டுமே போனை பயன்படுத்துவேன். போன் பேட்டரி இரவில் சார்ஜ் போடும் வரை தாங்கும். சமீபத்தில் என் போன் திரை நொறுங்கியது. அதோடு பேட்டரியும் நீரிழிவு நோயாளி போல் அடிக்கடி பசித்து சோர்ந்து கொண்டே வந்தது. ரெண்டு மணி நேரம் இணையத்தில் புழங்கினாலே 60%க்கு குறைந்து விடும். அதோடு பாட்டும் கேட்டால் மதியத்துக்குள் 20% வந்து விடும். பகல் முழுக்க தாங்க வேண்டும் என்றால் இரண்டு முறை சார்ஜ் செய்ய வேண்டும். 

சரி போன் பழசாகி விட்டது; பேட்டரி கடைசி கட்டத்தில் இருக்கிறது என நினைத்து புது போன் வாங்கினேன். ரெட்மி 5.
இந்த ரெட்மி பற்றின விமர்சனங்களில் பேட்டரி இரவு வரை தம் கட்டும் என பலரும் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் போன் என் கைக்கு வந்த பின் அதன் பேட்டரி நிலை சற்று பலவீனமாகவே தென்பட்டது. மதியத்துக்குள் 30% வந்து விட்டது. எனக்கோ செம கடுப்பு. வாங்கின சில நாட்களிலே போன் பேட்டரி இப்படி தள்ளாடி விழுகிறதே! ஒருவேளை பழுதான பேட்டரியா? புகார் தெரிவித்து போனை திரும்ப அனுப்பிவிட  வேண்டுமா?
பிறகு, நான் எப்படி சார்ஜை போனில் சேமிப்பது என கொஞ்சம் இணையத்தில் படித்தேன். இணையம் தந்த அறிவுறுத்தல் படி செட்டிங்ஸ் போய் ஆப்களுக்கு பின்னணியில் இயங்குவதற்கான அனுமதியை சோதித்தேன். நான் தினமும் நான்கு ஆப்களுக்கு மேல் பயன்படுத்துவது இல்லை எனிலும் இருபதுக்கு மேல் ஆப்கள் பின்னணியில் ஓடுவதை கவனித்தேன். அவை அப்படி ஓடுவதை என்னால் பார்க்க முடியாது; ஆனாலும் அவை மாயமாய் இயங்குகின்றன. இப்படி அவை இயங்குவதற்கான அனுமதியை ரத்து செய்தேன். ஆப்களில் வாட்ஸ் ஆப் தவிர பிற ஆப்கள் அறிவிக்கைகள் அனுப்பும் அனுமதியையும் மறுத்தேன். அடுத்து ஜி.பி.எஸ்ஸை ரத்து செய்தேன்.
இதன் பிறகு போன் சற்று அமைதியானது. அதோடு பேட்டரியின் உடல்நிலையில் ஆச்சரியப்படும்படியாய் மேம்பட்டது. முன்பு, இரவு வை பையை அணைத்து விட்டு போனை வைத்தால் காலையில் 20% சார்ஜ் குறைந்திருக்கும். ஆனால் இந்த மாற்றங்களுக்குக் பின் வெறும் 2% மட்டுமே குறைந்தது. அது மட்டுமல்ல, 12 மணிநேரம் கழித்து சார்ஜ் 70% இருக்கிறது.  இணைய அலைச்சல், கேமிங், முகநூல் எட்டிப் பார்த்தல், பாட்டுக் கேட்டல் என போனை வழக்கமான படியே பயன்படுத்தினேன்.
ஒரு ஸ்மார்ட் போனில் கணிசமான சார்ஜை உறிஞ்சுவது அதில் நான் பயன்படுத்தாத ஆப்களின் வெளித்தெரியாத செயல்பாடே என்பது இப்போதும் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நாம் மூன்று ஆப்களை நாள் முழுக்க பயன்படுத்துகிறோம் என்றால் முப்பது ஆப்கள் நம் போனுக்குள் குடித்தனம் பண்ணி, நம் சமையலறையில் இருந்து திருடித் தின்று, நம்மை பயன்படுத்துகின்றன. அவற்றை அடித்து தூங்கச் செய்தால் போன் நமக்காக மட்டும் பயன்படுகிறது. சார்ஜும் நின்று வேலை செய்கிறது.

கருத்துகள்

ஸ்ரீராம். இவ்வாறு கூறியுள்ளார்…
உபயோகமான தகவல்கள்.

ரெட்மி செல் சூடாகும் என்கிற கம்பிளெயின்ட் இருக்கிறதே... அதைச் சரி செய்து விட்டார்களா?

உங்கள் செல்லிலிருந்து UIDAI எண்ணையும். Distress எண்ணையும் நீக்கி விட்டீர்களா? இரண்டும் நாம் அறியாமல் தானாகவே வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் எண்கள்.
ஆர். அபிலாஷ் இவ்வாறு கூறியுள்ளார்…
இரண்டு பிரச்சனைகளும் என் போனில் இல்லை :)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...