கடந்த மூன்று வருடங்களாய் தினமணி இளைஞர் மணியில் வெளிவரும் “வாங்க இங்கிலிஷ் பேசலாம்” தொடரின் இரண்டாம் பாகம் இது. பிஸ்கெட்டை டீயில் தோய்த்து சாப்பிடும் பழக்கம் எப்படி ஏற்பட்டது, அப்படி சாப்பிடுவதற்கான ஆங்கில சொல் என்ன, on a leash எனும் பிரயோகம் எப்படி நாய் வளர்ப்பில் இருந்து தோன்றியது, Sorrow, grief இரண்டுக்குமான வித்தியாசம் என்ன, LIC Express Death-claim
Settlement Counter என்பதில் hyphen இல்லாவிடில்
அர்த்தம் எப்படி தடாலடியாய் மாறும் என பல விசயங்களை இந்த நூல் உங்களுக்கு சொல்லித் தர காத்திருக்கிறது.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கருத்துகள்