
இதை நான் எனக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.ஒரு சத்தியப்பிரமாணம் போல் எல்லா மொழிபெயர்ப்பு விரும்பிகளும் தங்கள் கரம் நீட்டி சொல்லிக் கொண்டு பிறகு பெயர்த்தலை ஆரம்பிக்க வேண்டியது எனத் தோன்றுகிறது.அபிலாஷூக்கு என் ப்ரியமும் பாராட்டுகளும் இதற்காக மாத்திரம்அல்ல.
| ஆத்மார்த்தி |
இன்றைக்குத் தான் 90களின் தமிழ் சினிமா
என்ற உங்கள் புத்தகத்தை ஒரே மூச்சாக வாசித்து முடித்தேன்.தமிழில் தமிழ் சினிமா
குறித்த இல்லா நூல்களின் வரிசையில் ஒரு விள்ளலை நிசமாக்கி இருக்கிற முக்கியமான
நூல் இது எனச் சொல்லத் தோன்றுகிறது.தமிழில் அரிய வகையான எழுத்தாளர்களின்
எழுத்தாளர் வரிசையில் மிகச் சொற்பமான பேர்களே நெடுங்காலமாய் இருந்துவருவதை
சலிப்புடனான எதிர்பார்த்தலோடு அவ்வப்போது திரும்பிப் பார்க்கிறவன் நான்.அந்த வகைமை
வரிசையில் அபிலாஷ் பெயரை இயல்பாக எழுதத் தோன்றுகிறது.சாக்பீஸ் சிற்பத்தை
வடிக்கிறாற் போன்ற பொறுமையும் நுட்பமும் அளவு குறித்த பதட்டமின்மையும் சொல்ல
வந்ததை சிக்கனமாய் சொல்லி விடுகிற லாவகமும் எனப் பல விஷயங்களுக்காக அந்த நூல்
முக்கியமானதாய்ப் படுகிறது.அபிலாஷூக்கு வாழ்த்துகள்.
Comments