முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“மீ-டூ – சில விமர்சனங்கள்” – நூல் வெளியீடு



நண்பர்களே! இம்மாதம் 29இல் தேவநேய பாவாணர் அரங்கில் வெளியாகும் எனது மற்றொரு நூல் “மீ-டூ – சில விமர்சனங்கள்”.
கடந்த இரு மாதங்களில் மீ-டூ சர்ச்சை தலைவிரித்தாடிய சந்தர்பங்களில் நான் தொடர்ந்து அது குறித்து எனது மாற்றுப் பார்வையை வெளியிட்டு வந்ததை அறிவீர்கள். எனது பிளாகிலும், மின்னம்பலம், தீராநதி ஆகிய இதழ்களிலும் தொடர்ந்து எனது விமர்சனங்களை பிரசுரித்தேன். இந்த இயக்கம் ஆண்-பெண் பிளவை அதிகப்படுத்துவதாக, வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதாக, மறைமுக ஒழுக்கவாதத்தை முன்னிலைப்படுத்துவதாக, கும்பல் மனப்பான்மையையும், விசாரிக்காமல் ஆராயாமல் ஒருவரை கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் ஆவேசத்தையும் ஊக்குவிப்பதாக எப்படி செயல்படுகிறது, இந்த சிக்கல்களின் அரசியல்-பண்பாட்டு வேர்கள் என்ன என இந்நூலில் விவரித்திருக்கிறேன்.

எந்த ஒரு சமூக-அரசியல் இயக்கத்தின் பிரச்சனைகளை, அது ஏற்படுத்தும் ஆபத்துகளை வெளிப்படையாய் பேச வேண்டியது ஒரு படைப்பாளியின் பொறுப்பு. இந்த மீ-டூ இயக்கத்தினால் நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும் ஒரு எழுத்தாளனாய் யாரும் பேச விரும்பாததை, தவிர்க்க விரும்புவதை பேச வேண்டியவனாக நான் இருப்பது முக்கியம் – இதை நான் என் நண்பர்கள் பலரிடமும் உரையாடும் போது உணர்ந்தேன். அவர்கள் என் கருத்துக்கு இணையாக சிந்திப்பவர்கள், ஆனால் (1) எதற்கு வம்பு, நாம் ஏன் பெண்ணியவாதிகளிடம் உதைபட வேண்டும் என ஒதுங்கிச் செல்பவர்கள்; (2) ஒரு இயக்கத்தின் குறைகளை, பிரச்சனைகளை அதன் நன்மைகளைக் கருதி பேசாமல் விட்டு விடுவது அவசியம் என லட்சியவாத தரப்பை எடுப்பவர்கள்.
இந்த புத்தகம் வழி நான் இந்த மௌனிகளின் குரலாக இருந்திருக்கிறேன். எனக்கு அது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு குறுகிய காலத்தில் ஒரு சமூகப் பிரச்சனையை ஒட்டி நான் எழுதிய முதல் புத்தகம் இது.
இந்நூலை பிரசுரிக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் வாங்கி, இதை வெளியிட்டுப் பேசப் போகும் எழுத்தாளர் சரவண கார்த்திகேயனுக்கும் இதைப் பற்றி விவாதிக்க இருக்கும் வாசக நண்பர்களுக்கும் நன்றிகள்.
வாங்க சந்திப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...