முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதத்தை வெறுப்பது (2)


Image result for atheism quotes
கடந்த காலம் இல்லாத ஒரு வாக்கியத்தை கற்பனை பண்ணுங்கள். “நான் சிந்திக்கிறேன்” - இதுநிகழ்காலம்எனும் போதே இதற்கு ஒரு துவக்கப் புள்ளியும் உண்டல்லவா? கடந்த காலத்தில் காலூன்றி அல்லவாசிந்திக்கிறேன்எனும் வினைச்சொல் தோன்றுகிறது. நான் இதற்கு முன் சிந்திக்கவில்லை, இப்போதேசிந்திக்கிறேன்என்பதல்லவா இதன் மறைபொருள். மொழிக்குள் காலத்தின் இருமை நமக்கு மிகப்பெரிய சவால். எதிர்க்கலாச்சாரமும் இப்படி ஒரு மரபான கலாச்சாரத்தை எதிர்த்தே தன்னை நிலைநிறுத்துகிறது.

 காலத்தை கடப்பது அசாத்தியம் என உணரும் போது மேலும் மூர்க்கமாய் பதின்வயதினன் அதனோடு மோதுகிறான். அப்போது தற்காலிகமாகவேனும் அவன் தன்னைகாலத்தை கடந்தவனாகஉணர்கிறான். “பிக்பாஸின்ஒரு அத்தியாயத்தை பார்த்து ரசித்த பின் உடனடியாய் நாம் அதே அத்தியாயத்தின் உணர்ச்சிகர தருணங்களை பகடி பண்ணும் மீம்களை, கிண்டல் கேலிகளையும் யுடியூபில் பார்த்து ரசிக்கிறோம். இரண்டு முரணான நிகழ்ச்சிகள் - மிகை உணர்ச்சியை கொண்டாடும் ஒன்றும், அதை மறுத்து கேலி பண்ணும் மற்றொன்றும் - இணைந்து நமக்கு இரண்டு எதிரெதிர் மனநிலைகளையும் அடைய, அதன் வழி அவற்றை கடந்து செல்ல உதவுகிறது. இதுவே காலத்தை கடந்து செல்லும் பேருவகை, இதை நாம் ஒரு ஜோக்குக்காக சிரிக்கும் போதே அதிகமாக உணர்கிறோம் என்கிறார் மார்ட்டின் ஹைடெக்கர். ஒரு ஜோக் என்ன சொல்ல வருகிறது என தெரியாமலே தான் அதற்காக சிரிக்கிறோம். அதன் அர்த்தத்தை அறியாத நொடியில் நாம் கடந்த காலத்தின் லட்சுமண ரேகையை கடந்து செல்கிறோம். ஏனென்றால் நம்மை காலத்துடன் கட்சிப் போடுவது மொழி உருவாக்கும் அர்த்தங்கள். அர்த்தம் அனர்த்தமாகும் போது கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இடைப்பட்ட ஒரு காலாதீதத்தில் உறைகிறோம். ஆனால் காலத்தின் கட்டமைப்புகளை மீறுவது கலை, பண்பாட்டு அனுபவங்களுடன் நின்று போவதில்லை. அது அரசியலிலும் நடக்கிறது.

மதத்தை மறுப்பதும் வெறும் விடலைத்தனமான கலகம் அல்ல - அது நமது இருப்பின் ஆத்மார்த்தமான அடியொழுக்கமான உயிர்வாழும் விழைவு. இங்கு உயிர்வாழ்தல் என்பது ஒவ்வொரு நொடியும் புதிதாக மலர்வது. ஆனால் இதன் துயரம் ஒன்றையும் நான் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த கலகவாதிகள் வயதாக ஆக தம் கலக வாழ்வின் அநிச்சயத்தை, அநிச்சயம் ஏற்படுத்தும் பயத்தை, பதற்றத்தை உணர்கிறார்கள். உறவில், வேலையில், தம் உடல்நிலையில், சமூகத்தில், பொருளாதாரத்தில் எதையொன்றையும் அவர்களால் பற்றிக் கொள்ள முடியாது போகிறது. இன்று உள்ளது நாளை இருக்காது என்பதே நிதர்சனமாகிறது அப்போது அவர்களுக்கு பற்றுகோல் தேவையாகிறது. இப்போது அவர்கள் கடந்த காலத்தை கொண்டாடும்மரபின் மைந்தர்கள்ஆவார்கள். அவர்கள் 80s kids ஆகிஅழகியை”, “ஆட்டோகிராபைபார்த்து உருகுவார்கள். 90s kids ஆகி நினைவேக்கம் சொட்டும், கதையே இல்லாத “96” போன்ற படங்களை ஓட வைப்பார்கள். Millennium kids ஆகி பெண்களைத் தூற்றும் சூப் பாய்ஸ் பாடல்களை ரசிப்பார்கள். வாட்ஸ் ஆப் குரூப்களில் தம் நினைவுகளை புதுப்பித்து பழைய காதலிகளிடம் சொல்லாமல் சொல்லி தவிப்பார்கள். அரசியல் களத்தில், இன்னொரு பக்கம், இவர்கள் இந்துத்துவாவை, தேசியவாதத்தை சார்ந்திருக்க தொடங்குவார்கள். கடந்த காலத்தை உதறிச் செல்வதே உயிர்த்திருத்தல் என நினைத்தவர்கள் பின்னுக்கு போவதே உயிர்த்திருத்தல் என இப்போது கருதுவார்கள். எப்படி கற்பனைக்கு அகப்படாத எதிர்காலம் கட்டற்றதோ அவ்வாறே நமது கடந்த காலம், வரலாறு, தொன்மம், புராதன நம்பிக்கைகள் என ஒவ்வொன்றுமே ஒரு அகப்படாத இருப்பு, அகப்படாத எதுவும் கட்டற்ற சுதந்திரத்தை நல்குவது, சமகாலத்தின் கட்டுப்பாடுகளை உடைக்க வல்லது என இவர்கள் நம்பத் தொடங்குவார்கள். தமக்கு உவகை அளிக்கும்படி கடந்த காலத்தை கற்பனை பண்ணி, அதை மீட்பதற்காக அணிசேர்ந்து முழங்குகுவார்கள். இதுவே இன்று நினைவேக்க பெருமூச்சுகளின் காலமாக, காவிப்படைகளின் மிகப்பெரிய எழுச்சியின் வரலாற்று கட்டமாக உருமாற ஒரு முக்கிய காரணம்

நம் காலத்தில் மிக அதிகமாய் நினைவேக்கம் கொள்பவர்கள் தம் இளமைக் காலத்தில் தம் சமூகத்தை, நடைமுறைகளை வெறுத்தவர்கள்; மாற்றத்துக்காக ஏங்கினவர்கள். இன்று மதவாதத்தை மிகப்பெரிய அளவில் முன்னெடுப்பவர்களில் ஒரு பகுதியினர் ஆரம்பத்தில் இருந்தே தம் மனத்தின் ஆழத்தில் இறைநம்பிக்கை அற்றவர்களாக, மதத்தை ஒரு கலாச்சார சின்னமாக, அடையாளமாக மட்டுமே காண்பவர்களாக இருக்கிறார்கள். கடவுளை நம்புகிறவன் குஜராத் வன்முறையை எப்படி நிகழ்த்தியிருக்க முடியும்? கடவுளை நம்புகிறவன் எப்படி காந்தியை சுட்டுக் கொன்றிருக்க முடியும்? கோட்ஸேயைப் பற்றி ஆய்வு செய்யும் ஆஷிஸ் நந்தி அவர் அடிப்படையில் ஒரு நாத்திகர், இந்து புராதன சடங்குகளை பின்பற்றாதவர், மாட்டுக்கறிவை விரும்பி உண்டவர் என்கிறார். முழுக்க முழுக்க மேற்கத்திய நாத்திகத்தை, பகுத்தறிவுவாதத்தை பின்பற்றியவர்களிடம் இருந்தே வலதுசாரி அரசியல் தோற்றம் கொண்டது என்பதில் எந்த விநோதமும் இல்லை. விடலைகளின் உலகம் சிலநேரம் மதத்தை ஆவேசமாய் மறுப்பதில் துவங்கி அதை விட வெறியுடன் அதை இறுகப் பற்றிக் கொள்வதில் தான் போய் முடியும்

மிகையின்றி எப்படி காலத்தின் தளைகளை அறுப்பது என இவர்களுக்குத் தெரியாது என்பதே அடிப்படையான பிரச்சனை. அதுவே நம் வரலாற்றுத் துயரம். மனித அன்பின், பிடிப்பின் பின்னுள்ள முரண்களை அறிந்து அதன் வழி காலத்தை வெல்ல அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. பீங்கான்கள் விற்கும் கடையில் யானை புகுந்தது போல அவர்கள் ஒரு தத்துவக்குழப்பத்துடன் நம் வரலாற்றுக்குள் வருகிறார்கள்.


மதத்தை அதன் சாரத்தில் வெறுத்து கைவிடுகிறவர்களே மதவாதிகள் ஆவது நம் காலத்தின் மிகப்பெரிய நகைமுரண்

நன்றி: உயிர்மை, ஆகஸ்ட், 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...