முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெயரில் சாதியை ஒழிப்பது



ஒரு பழைய “நீயா நானாவின்” டிரைலரைப் பார்த்தேன். சாதியை ஒழிப்பதில்கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை இது விவாதிக்கிறது. சாதியை வெளிப்படையாகபெயரொட்டாக வைத்துக் கொள்ளும் கேவலமான வழக்கம் கேரளாவில் பலருக்கும் உண்டு. இது ஏன், தமிழகத்தில் இது ஏன் இல்லை என நிகழ்ச்சியில் கரு.பழனியப்பனின், நடிகை பார்வதி நாயரும்விவாதிக்கிறார்கள்.
டிரைலரில் இந்த குறுவிவாதத்தைக் கண்ட போது எனக்குள் எண்ணம் நாம் இந்தளவுக்கு மேம்பட்டு தான்இருக்கிறோமா எனும் கேள்வி எழுந்தது. 
“நீயா நானா” போன்ற நிகழ்ச்சிகளில் பெயரில் சாதி வைப்பதில்லை என தமிழர்கள் பெருமையடித்தாலும்கொடூரமான சாதிப் படுகொலைகள், ஆணவக் கொலைகள் இங்கே தான் அதிகமாக நடந்துள்ளன. தாழ்த்தப்பட்டவர்களை பொதுவெளியில் வைத்து வெட்டுவது, கொன்று ரயில்பாதையில் கிடத்துவது, காலனிக்குதீ வைப்பது போன்ற அநீதிகள் நம்மூரில் அதிகம். மேலும், சாதிக்கொரு கட்சியையும் நாமே அங்கீகரிக்கிறோம்; அந்த சாதியின் அடிப்படையிலே இன்றும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏன் இத்தகையசீரழிவுகளை கேரளாவில் நாம் காண்பதில்லை?


ஒரு காரணம் அங்கே சாதியை சமூகம் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்பது; அதாவது சாதிஅமைப்பு இறுக்கமாக இருக்கும் போது சமரசம் நிலவும். ஆனால் தமிழகத்தில் போல இளகலாக இருக்கும்போது அதற்குள் அசைவுகளும் மேல்நோக்கிய பாய்ச்சல்களும் நடக்கும். அப்போது எதிர்ப்பும் வன்முறையும்வெடிக்கும். தமிழகத்தில் உள்ள நிலைமை “நான் உன் சாதியை கேள்விக்கு உட்படுத்த மாட்டேன், நீ என்னைமாற்றவோ என்னை விமர்சிக்கவோ முயலாதே. நீ என் பெண்ணைத் தொடாதே நானும் உன் பெண்ணைத் தொடமாட்டேன்; அது மட்டுமல்ல நீ உன் எல்லைகளைத் தாண்டினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்; உன்உயிரைப் பறிப்பேன், உடைமைகளை எரிப்பேன், குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வருவேன்.” எனும்சமரச ஒப்பந்தம். இது ஒரு அச்சுறுத்தலும் தான். தமிழகத்தில் இந்த அச்சுறுத்தல் மிக மௌனமாக ஆனால்பட்டவர்த்தமாக படமெடுத்தாடுகிறது.
 இங்கு முழுமையாக வெளிப்படையாக நாம் சாதியை ஏற்க முடியாமல் தவிக்கிறோம். இதுவே பின்னர் சாதிமோதல்கள் / தாக்குதல்கள் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு வழிவகுத்தது - அதாவது தமிழர்கள் அரைகுறைமுற்போக்காக இருப்பதே சாதி வன்முறைக்கு வழிவழ்குத்துள்ளது. எது சாதியை பெயரில் உதறத் தூண்டியதோஅதுவே சாதிக்காக கத்தியை தூக்கவும் வைத்தது.
 மேலும் நாம் பெயரில் ஒழித்து விட்டு அரசியல் களத்தில் வெளிப்படையாக அதை வைத்து அறுவடைபண்ணினோம். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ராமதாஸும் அன்புமணியும். அவர்கள் தம் பெயருக்கு ஒட்டாகசாதியை வைப்பதில்லை. ஆனால் அவர்களின் அரசியல் முழுக்க முழுக்க வன்முறையால் சாதியைமுன்னெடுப்பதும், அச்சத்தால் மக்களை பிரித்து பயன்படுத்துவதும். தொண்ணூறுகளில் இப்படியான சாதிஅரசியல் ஒரு மோசமான அலையாக எழுந்து சமூகத்தை அலைகழித்தது. சாதிப்பெயரை வைத்துக் கொள்வதைவிட நாம் இதற்காகத் தான் அதிகமாக வெட்கப்பட வேண்டும்.

இதையெல்லாம் பார்க்கும் போது நாம் மலையாளிகளை விட மேலும் இல்லை, மோசமும் இல்லை எனப்படுகிறது! அது மூடின புண், நாம் திறந்தநிலைப் புண்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...