முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (1)



ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனும் தமிழக அரசின் முடிவு ஏற்படுத்தி இருக்கிற நெருக்கடியை அறிவோம். வரும் காலங்களில் ஒன்றாம் வகுப்புக்கே இவர்கள் பொதுத்தேர்வு நடத்தினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இது அரசின் அறிவீனத்தின் விளைவு என பார்ப்பது மேம்போக்கானது என நினைக்கிறேன்; ஏனென்றால் நாம் வந்து அடைந்துள்ள இந்த நிலைக்கு நாமும் கல்வி நவமுதலாளித்துவ சந்தையில் தொடர்ந்து பண்டமாக்கப்பட்டு வருவதற்கும், எங்கும் வியாபித்துள்ள நுகர்வு மனநிலைக்கும் ஒரு தொடர்பு உள்ளது. நாமே நம் வாலில் நெருப்பு வைத்து விட்டிருக்கிறோம்; அது இப்போது நம் தலையை எட்டி உள்ளது. வரும் நாட்களில் நம்மை முழுக்க அது முழுங்கி விடும்


முதலில் ஏன் தொடர்ந்து தேர்வுக்கு இவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள் என யோசிக்க வேண்டும். இதற்கு சொல்லப்படும் நியாயம் கல்வியின் தரம் வீழ்ந்து விட்டது என்பது. இந்த ஒரு பிலாக்கணத்தை வைத்து உயர்கல்வியில் செமஸ்டர் முறையை முதலில் கொண்டு வந்தார்கள். வருடத்துக்கு ஒருமுறை தேர்வு எழுதிய மாணவர்கள் இப்போது இரன்டு முறை எழுதினார்கள். பின்னர் continuous internal assessment (தொடர் உள்மதிப்பீட்டுத் தேர்வு) எனும் முறையை கொண்டு வந்தார்கள். இப்போது மாணவர்கள் வருடத்திற்கு நான்கு மடங்கு அதிக தேர்வுகள் எழுதினார்கள்
தேர்வுகள் கல்வி கற்றலை தீவிரமாக்கும் என வெளியில் இருந்து பார்க்கும் போது தோன்றலாம். ஆனால் நிஜத்தில் இது கல்விக்கு எதிரானது - கவனித்து விவாதித்து படித்து உள்வாங்கும் கால அவகாசம் மாணவர்களுக்கு இல்லாமல் போகிறது. படிக்கும் காலத்தில் கலை / இலக்கிய செயல்பாடுகளில் ஈடுபடுவது, சக மாணவர்களுடன் ஊர் சுற்றுவது, நேரடி அனுபவங்கள் மூலம் வாழ்க்கையை அறிவது, சமூக அரசியல் போராட்டங்களில் ஈடுபடுவது கிட்டத்தட்ட அசாத்தியம் ஆகும். தொடர் உள்மதிப்பீடு என்பது தொடர்ந்து மாணவர்களின் திறனை மதிப்பிடுவது எனும் நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் நடைமுறையில் அதுவு மற்றொரு தேர்வாக முடிந்து போகிறது. சில கல்லூரிகளில் தேர்வுக்கான ஒரு தயாரிப்புத் தேர்வையும் நடத்துகிறார்கள்; அத்தேர்வின் மதிப்பெண்ணையும் தொடர் உள்மதிப்பீட்டு மதிப்பெண்ணாக எடுத்தும் கொள்கிறார்கள். ஒரு செமஸ்டர் ஐந்து மாதங்கள் என்றால் விடுமுறைகள் போக நான்கு நான்கரை மாதங்கள் வகுப்புகள் நடக்கும் என வையுங்கள். இப்போது ஒவ்வொரு மாதமும் மாணவர்கள் ஏதாவது ஒரு தேர்வுக்காக படிக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. படிப்பை மதிப்பிட தேர்வு எனும் நிலை மாறி தேர்வுக்காக தேர்வு எனும் நிலை ஏற்பட்டு விட்டது.


தேர்வு என்பது எப்படிப் பார்த்தாலும் கல்வியின் தரத்தையோ அறிவையோ மதிப்பிடும் கருவியாக முடியாது - ஐந்து மாதங்களில் நீங்கள் உள்வாங்கும் விசயங்களை இரண்டு மணிநேரத் தேர்வில் காட்ட முடியாது. தொடர் மதிப்பீடும் மற்றொரு தேர்வு ஆகும் பட்சத்தில் அங்கும் மதிப்பெண் வாங்கும் முனைப்பே முக்கியமாக படிப்பே எந்திரமயமாகிறது. இந்த தேர்வு என்பதை கண்டுபிடித்த பைத்தியக்காரன் யார் என நான் இப்போதெல்லாம் சபிக்காத நாளில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...