முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லி தேர்தலும் மத்தியில் உள்ள ஜுராசிக் பார்க்கும்

பொதுவாக மாநில தேர்தல்களில் வாக்காளர்கள் தேசப்பிரச்சனைகள், லட்சியவாத நிலைபாடுகளை பொருட்டாகக் கொள்வதில்லை. அம்மாநிலத்தின் அப்போதையும் நிலையும் செண்டிமெண்டுமே வாக்காளர்களை செலுத்தும். தில்லி தேர்தலில் பாஜக தோற்றால் அது அரசுக்கு பின்னடைவாகவே இருக்கும், ஆனால் அதற்காக அவர்களின் அரசியல் மூர்க்கம், கண்மூடித்தனமான வேகம் குறையும் என நான் நம்பவில்லை. 

இது மோடியின் அரசு. என்ன கெட்ட பெயர் வந்தாலும் அவருக்கே. ஆனால் ஆட்சியை பின்னிருந்து நடத்துவதோ அமித் ஷா. ஆக மோடிக்கு பெயர் கெட்டுப் போனாலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அது தன்னை பெருமளவில் பாதிக்காது என ஷா நினைக்கலாம். அப்படியே பாதித்தாலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன் பாகிஸ்தான் ஆதரவுடன் மற்றொரு கார்கிலையோ தீவிரவாத தாக்குதலையோ நடத்தி நாட்டின் மொத்த கவனத்தையும் தன் பால் சாதகமாகத் திருப்பி தேசிய வெறியை, பாதுகாப்பு குறித்த பதற்றத்தை அதிகப்படுத்தி, ஹீரோயிசத்தை நிலைநாட்டி, என்.பி.ஆர், ராணுவ அடக்குமுறையின் நியாயத்தைக் காட்டி தேர்தலை ஷா வெல்ல நினைப்பார்.
தில்லி மாநிலத் தேர்தல் அல்ல, ஒட்டுமொத்தமாக இந்நாட்டு மக்களின் விழிப்புணர்வு மட்டுமே நம்மை இனிக் காப்பாற்றும். அதற்கு எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கைகோர்க்க வேண்டும். அதுவரை எதுவும் இந்த ஜுராசிக் பார்க்கை தடுக்க முடியாது. 
கேஜ்ரிவால் கூட. அவர் ஜெ.என்.யுவில் மாணவர்கள் தாக்கப்பட்ட போது கோழைத்தனமாக நடந்து கொண்டார். அவரை எனக்கு ஒரு முதல்வராகப் பிடிக்கும். ஆனால் பாஜகவை முழுமூச்சாக எதிர்க்கும் துணிவை அவர் அண்மையில் காட்டவில்லை என்பதால் இந்த தேர்தலில் அவரால் மைய அரசுக்கு எதிரான கோபத்தை அறுவடை பண்ண முடியுமா எனவும் தெரியவில்லை. நம் எதிர்க்கட்சிகளின் அரசியல் இப்படி மூட்டமாக தெளிவற்று இருப்பது வருத்தத்துக்கு உரியது. 

கருத்துகள்

சிகரம் பாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
தேர்தலை நமக்கான அரசை அமைக்கும் வாய்ப்பாக நாம் கருத வேண்டும். ஒரே கட்சிக்கு ஆதரவும் விசுவாசமும் கொண்டிருந்தால் எப்படி?

தெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கி - 01
https://newsigaram.blogspot.com/2020/02/any-do-reminder-in-whatsapp.html

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...