முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்த்திக் டயல் செய்த எண்


கார்த்திக் டயல் செய்த எண்குறும்படம் எனக்குப் பிடிக்கவில்லை - “விண்ணைத்தாண்டி வருவாயாபடத்தில் இருந்து மாறுபட்டு எதுவும் இதிலில்லை. ஒளிப்பதிவு, இசை என ரொம்ப சாதாரணமாக, அமெச்சூராக இருக்கிறது. ஆனால் ஜெஸ்ஸியின் பாத்திரம் வழக்கமான சிக்கல்களும் தன்னை மறைத்து வேறொன்றாய் முன்வைக்கிற தளுக்கும் கொண்டதாக இருக்கிறது; தனக்காக துன்பப்படும் கார்த்திக் மீதான அவளது பிரியமும் பயமும் இப்போதும் இருக்கிறது என இப்படம் சொல்கிறது.

 ஜெஸ்ஸியின் காதல் ஒருவித சுயவதை என நினைப்பேன், இந்த குறும்படம் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. கார்த்திக் ஆண்மையுடன் திமிறும்போது அவனை மேலும் சீண்டிப்பார்க்கிற, அவன் பிடிவாதம் கொள்ளும் போது, துணிச்சலுடன் நடக்கும் போது (alpha male) அவனுக்கு உடன்படுகிற ஜெஸ்ஸி அவன் சற்றே பின்வாங்கும் போது, தயங்கி யோசிக்கும் போது (beta male) அவனிடமிருந்து பிரிந்து விடுகிறாள், பின்னர் அவனுக்காக ஏங்கவும் தன்னையே வதைக்கவும் செய்கிறாள் என்பதேவிண்ணைத்தாண்டி வருவாயாபடத்தில் நான் அவதானித்த உளவியல். (அப்படம் பற்றி நான் எழுதிய போதெல்லாம் இதையே தான் சொல்லியிருக்கிறேன்.) இப்படத்தில் கார்த்திக் முழுக்க முழுக்க beta maleஆக இருக்கிறான். தன்னிரகத்துடன், தயக்கத்துடன் வாழ்க்கை குறித்த நிறைய குழப்பங்களுடன். நியாயமாக ஜெஸ்ஸி அவனை இப்போது ஒரு குழந்தையையைப் போன்றே நடத்துகிறாள். அவன் லவ் யூ சொல்லுஎனும் போது அது ஒரு குழந்தை முத்தம் கேட்பது போல அவளுக்குத் தோன்றுகிறது. “ லவ் யூ சொன்னா கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சுருவாங்களா?” என அவனை கலாய்க்கிறாள். அவன் வேறொரு மனநிலையில் கெத்தாகப் பேசியிருந்தால் அவள் அவனை நடத்தும் விதமே வேறு
 கார்த்திக்கின் இந்த அவதாரம் 96 படத்தின் ராமை நினைவுபடுத்துகிறது என்பது ஒருதுயரம்’ (ராமை எனக்குப் பிடிக்காது. அவன் ரொம்ப மட்டமான beta male.). கௌதம் மேனன் கார்த்திக் பாத்திரத்தை இன்னும் சற்று சிக்கலானதாக, எதிர்பாராமை கொண்டதாக, உரையாடலினூடே சிறு திருப்பங்கள் (அவன் ஆல்பாவில் இருந்து பீட்டாவுக்கும், இதிலிருந்து அதற்குமாக உருமாறுகிற தன்மையில்) அமைத்து உருவாக்கி இருக்கலாம். இப்படம் சூடு பிடித்திருக்கும். ஆனால் இப்போதைக்கு கார்த்திக்கை பார்த்து ஜெஸ்ஸி மட்டுமல்ல நாமும் தான்போய் உன் வேலையைப் பாருஎன சொல்லும்படி இருக்கிறது.
மனுஷ்ய புத்திரன்கார்த்திக் டயல் செய்த எண்படத்தை பகடி செய்த எழுதிய கவிதை இதை விட நன்றாக, சமகாலத்தன்மையுடன் உள்ளது - அதில் வரும் கார்த்திக் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த, காதல் வெறும் விளையாட்டு எனும் சமயோஜித புத்தி கொண்ட பின்நவீன காதலனாக இருக்கிறான். அவனுக்கு காதலி இருக்கிறாள். கார்த்திக்கிடம் முன்பு ஜெஸ்ஸி நடந்து கொண்டதைப் போன்றே அவள் இப்போது கார்த்திக்கை நடத்துகிறாள். அவளை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால் அவளே எதார்த்தம் என்பதால் தன்னை போனில் அழைத்து ஆறுதலுக்காக, பழைய காதல் நினைவில் குளிர்காய அழைக்கிற ஜெஸ்ஸியை அவன் புரிந்து கொண்டு இறுதியில் அவளை பிளாக் செய்தும் விடுகிறான்
அந்த கார்த்திக்கும் இந்த கார்த்திக்கும் வேறுவேறுதான் - அவன் இவனாக முடியாது. அவன் அவன் 90களின் குழந்தை. எனக்கு இவனைப் பிடிக்கவில்லை.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...