முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரும்புத் தடிகளால் கொல்லப்படும் இந்திய ராணுவத்தினர்



கல்வான் பள்ளத்தாக்கில் சீன எல்லைப்படை வீரர்களால் தாக்கப்பட்டு இந்திய ராணுவத்தினர் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் வினோதம் இவர்களை துப்பாக்கிச் சூட்டில் சாகவில்லை, முட்கம்பி சுற்றப்பட்ட இரும்புத் தடிகளால் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர் என்பது. மேலும் பலர் இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடியதில் கடும் உறைகுளிர் சீதோஷ்ணத்தால் பாதிக்கப்பட்டும், கல்வான் நதியில் குதித்து தப்பிக்க முயல்கையில் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டு (மீண்டும் இதே தடியால் தான்) கொல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றனபாபு எனும் ஒரு கர்னலும் பலியாகியிருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இந்த தாக்குதலில் காயம்பட்டுள்ளனர். சிலர் உயிருக்குப் போராடி வருகிறார்கள். சீன ராணுவம் சிலரைக் கைப்பற்றிக் கொண்டு போய் கொன்றிருக்கிறார்கள்; பேச்சுவார்த்தைப் பிற்கு சிலரை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள்.

 நான் இப்போதுதான் முதன்முதலாய் ராணுவத்தினர் ஏதோ கல்லூரி மாணவர்களைப் போல கைத்தடிகளால் பரஸ்பரம் தாக்கிக் கொள்வார்கள் என்பதைக் கேள்விப்படுகிறேன். புகைப்படங்களில் அவர்கள் சதா ஏந்தியிருக்கும் விலையுயர்ந்த துப்பாக்கிகள் எங்கே? வெடிகுண்டுகள், டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் எங்கே? இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் கூட குண்டாந்தடியால் வில்லன்கள் தாக்க வருவதில்லை. குறைந்தது அருவாளாவது ஏந்தி வருகிறார்கள். இயக்குநர் ஹரி இப்படி படப்பிடிப்புக்காக சொந்தமாக பல அருவாக்களை எப்போதும் வைத்திருப்பார் என்று சொல்கிறார்கள். நம் ராணுவத்திடம் இது கூட இல்லையா? கேங்ஸ்டர் படங்களில் பட்பட்டென எடுத்து சுடுகிறார்களோ அவை கூட இல்லையா?

இங்கு தான் நாம் வெளியுறவுத் துறையின் கருணையற்ற அணுகுமுறையை, தமது அரசியலுக்காக போர் வீரர்களை (கூடவே பொதுமக்களையும்) பலிகொடுக்கும் போக்கை கவனிக்க வேண்டும். அதற்கு முன்பு இந்த கல்வான் பள்ளத்தாக்கு லடாய் என்ன, அதன் வரலாற்றுப் பின்னணி என்னவென அறிய வேண்டும்.


இந்த கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சீனா பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது. அகாய் சீனா என்பது ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியே; ஆனால் அறுபதுகளில் சீன ஒரு சாலையை அமைத்து இதை எடுத்துக் கொண்டது. இந்தியா சீனா நாடுகளைப் பிரிப்பதே இந்தப் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடுதான். அண்மைக் காலமாக இந்தியா இந்த எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் சில பாதுகாப்பு கட்டுமனங்களை அமைத்து வருகிறார். இது சீனாவை எரிச்சல்படுத்துகிறது; அவர்கள் தமது ராணு ரோந்தை அங்குள்ள ஏரியில் படகுகள் வழி அதிகப்படுத்த இந்தியாவும் தன் பங்குக்கு ரோந்தை உக்கிரமாக்கியது. அடுத்து ஒரு பக்கம் இந்தியா-சீனா பேச்சுவார்த்தையும் இருநாட்டு ராணுவத்தினர் இடையில் சிறிய அளவிலான மோதல்களும் ஒரே சமயம் நடந்து வந்தன. கல்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் சீனா அமைத்த ஒரு முகாம் தான் இப்போதுள்ள பஞ்சாயத்தின் துவக்கப்புள்ளி. அதை அகற்ற சீனா ஒப்புக்கொள்ளாததால் இந்திய ராணுவம் இறங்கி அதை நீக்கியது. அடுத்து சீன ராணுவத்தின் ஆரம்பத்தில் சொன்ன அந்த குண்டாந்தடித் தாக்குதலைத் தொடுத்துள்ளது.


சீனாக்காரர்கள் துப்பாக்கியை ஏன் பயன்படுத்தவில்லை என்று கேட்டால் ஏன் இந்திய வீரர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களைப் போல அமெச்சூராக சண்டைபோட்டு ஓடினர் என்பது விளங்கும். இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் துப்பாக்கி பயன்படுத்துவது தமது தரப்பு நியாயத்தை பலவீனமாக்கும் என வெளியுறவுத் துறைகள் நினைக்கின்றன. ஆனால் சீனா முதலில் தாக்குதல் தொடுத்த நிலையில் இந்தியா ஏதோ மாணவப் போராளிகள் போலீசிடம் அடிவாங்குவதைப் போல நடந்து கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் தாராளமாக துப்பாக்கிகளை எடுத்து பயன்படுத்தி இந்த தாக்குதலை முறியடித்திருக்கலாம். நூற்றுக்கணக்கான இந்திய வீரர்களையும் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் பாருங்கள் நமது வெளியுறவுத் துறையிடம் இருந்து, பிரதமர் ஜியிடம் இருந்து ராணுவத்தலைமைக்கு இதற்கு அனுமதி சுலபத்தில் கிடைக்காது. எப்படி ஒக்கிப் புயலினால் கடலில் தத்தளித்த மீனவர்களை நமது கடற்படை நாட்கணக்காய் காப்பாற்றவில்லையோ அதேபோல ராணுவ வீரர்களை இம்முறை சாக விட்டிருக்கிறார்கள்; அவர்கள் துரத்தப்பட்டு நதியில் மூழ்கடிக்கப்பட்ட போதாவது கூடுதல் ஆயுதமேந்திய ராணுவப்படைகளை அவர்களின் உதவிக்கு அனுப்பியிருக்கலாம், ஆனால் ஜி அனுப்பவில்லை. கடைசியில் அவர்கள் குளிரிலும் மருத்துவ உதவியின்றியும் செத்துப் போனார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் ஜியின் அரசியலும் முடிவெடுப்பதில் தீர்மானமான நிலைப்பாடு இல்லாததுமே. விளம்பரத்தில் அவர் காட்டுகிற முனைப்பும் தீர்மானமும் இப்போதெல்லாம் நிர்வாகத்தில் இருப்பதில்லை. ரொம்ப யோசித்து யோசித்து தனக்கு அரசியல் அனுகூலம் கிடைக்கும் முடிவு எது எனத் திட்டமிட்டு மக்களுக்கு ஆபத்து விளைவிக்கிற ஒரு முடிவாக எடுக்கிறார். இப்போதுகூட பாருங்கள் ஜி இதை வைத்து என்ன டிராமா பண்ணி தான் நல்லப் பெயர் வாங்கலாம் என தன் செயலாளர்கள், மந்திரிகளுடன் ஆலோசனை பண்ணிக் கொண்டிருப்பார்.


அன்புள்ள ஜி, தயவு செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி நான்கைந்து பனை மரங்களை சாய்த்த ஏவுகணைகளையாவது அடுத்த முறை நம் ராணுவம் கொல்லப்படும் போது பயன்படுத்துங்கள். ஆனால் இந்த முறை ஒரு நூறு பனை மரங்களாவது சாயணும். ஜெய் ஹிந்த்!


பின்குறிப்பு: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாத தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவே இந்த எல்லைக்கோட்டு பிரச்சனைகளை ஜி வளர்க்கிறார் என சிலர் சொல்வதில் உண்மை இருக்குமா இல்லையா என்பதை அடுத்த சில நாட்களில் ஜி எடுக்கும் முடிவுகளில், “மித்ரோஎன விளித்து ராணுவ உடையில் தோன்றிப் பேசுவாரா இல்லையா என்பதில் தெரிந்து விடும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...