Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

உளவியல் நூல்கள்: ஒரு பார்வை (3)





உங்களுக்கு லக்கான் பிடித்திருக்கிறது என்றால் அடுத்து டெலூஸ் (Deleuze), ஸிஸெக் (Zizek) போன்ற உளவியலாளர்களைப் படிக்கலாம். டெலூஸ் நமது சுயம், அனுபவம் போன்றவை பின்நவீன காலத்தில் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவியல், உளவியல், ஜியாமெட்ரி, எந்திரவியல் என பல துறைகளில் இருந்து கருத்தாக்கங்களை எடுத்து விளக்கினார். ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அப்புத்தகம் என்பது எழுதப்பட்டதா அல்லது எழுதப்படும் நிலையில் இருப்பதா? புத்தகம் என்றால் அட்டையிட்ட, குறிப்பிட்ட பக்க எண்ணிக்கை கொண்ட, அச்சிடப்பட்ட ஒரு பொருள். ஆனால் நாம் ஒரு புத்தகத்தை திறந்து புரட்டு போதும், அதை படிக்க ஆரம்பிக்கும் போது அவை இருவேறு புத்தகங்களாக உள்ளன. முதல் நிலையில் அது வெறும் காகிதத் தொகுப்பு, அது என்னவென்றால் புத்தகம் என அடையாளப்படுத்தலாம். ஆனால் இரண்டாம் நிலையில் அதை வாசிக்கும் போது அதனுள் இருக்கும் குறிப்பான்களைக் (ஆப்பிள் என்றால் அதன் ஒலி அல்லது தோற்றம் ஒரு குறிப்பான், ஆப்பிள்தன்மை அதன் உள்ளீடு - ஒரு குறிப்பீடு) கொண்டு புரிந்து கொள்ள முயல்கிறோம். ஒரு காகம் வருகிறது, பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கிறார் ... காகம் என்பது ஒரு குறிப்பான் தான். ஆனால் அதற்கு என சாரம் இல்லை. ‘காகத்தன்மைஇல்லை. இருக்கிறது, ஆனால் அது என்னவென நமக்குத் தெரியாது. நாம் காகத்தைப் பார்க்கிறோம், அதைப் பற்றிப் படிக்கிறோம், ஆனால் அது காகம் என நாம் அறிவது அதைப் பற்றின பல மனப்பதிவுகளுடன் ஒப்பிட்டே. ‘ஒரிஜினல் காகத்தையாருமே பார்த்ததில்லை. அப்படியேவடை சுடும் பாட்டியின்ஒரிஜினலை நாம் பார்த்ததில்லை. ஒரு காகம் ஓராயிரம் காகங்களைப் பிறப்பிக்கிறது. இதை டெலூஸ் மீள் நிகழ்தல் (repetition) என்கிறார். இப்படி ஒன்று மீள மீள நிகழும் போது அது ஒன்று போல இருப்பதில்லை. இதை அவர் வேற்றுமை (difference) என்கிறார். ஒரு விசயம் திரும்பத் திரும்ப ஒன்று போல் அல்லாமல் செய்யப்படுவதே அதன் இருப்பு என்கிறார். அதனால் தான் ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அது ஏற்படுத்தும் உணர்வலைகள், கிளர்த்தும் எண்ணங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன. அவை புத்தகத்தை தொகுத்து ஒற்றை அடையாளமாக மாற்றத் தடையாக உள்ளன. விமர்சனம் எனும் பெயரில் நாம் அதன் வேறுபாடுகளை மறந்து, அந்த நூல் நிச்சயமற்று நிலையற்று மீள மீள நிகழ்வதை மறந்து, ஒற்றை அர்த்தம் ஒன்றை வடிக்கிறோம். .தா., ஹெரால்ட் புளூம் இப்படி மேற்கத்திய இலக்கியத்தில் உள்ள மகத்தான, ஈடு இணையற்ற படைப்புகளை cannon எனும் பெயரில் தொகுத்து எழுதியிருக்கிறார். இது உண்மையை ஒளித்து பொய்யை நிறுவும் ஒரு முயற்சி தான்


அடுத்து ஸிஸெக் - இவர் லக்கான், மார்க்ஸியம், ஹெகல் என கலந்து கட்டி சமூக அரசியல் நிகழ்வுகளை விமர்சிப்பவர். சமகால உளவியல்-தத்துவ உலகில் சூப்பர் ஸ்டார்



இருத்தலியல் உளவியல் என ஒரு துறையும் உண்டு - இதில் வாழ்க்கை அர்த்தமற்றது, சாரமற்றது எனும் புள்ளியில் இருந்தே விவாதத்தை ஆரம்பிக்கிறார்கள். மனிதனின் துன்பங்களுக்கு, அவநம்பிக்கைகளுக்குக் காரணம் வாழ்க்கை அர்த்தமற்றது, அதனால் நிச்சயமற்றது, அதனாலே அவநம்பிக்கையை ஏற்படுத்துவது எனும் தொடர் விளைவுகளே. பௌத்தம் இந்த தொடர் சங்கிலியை உடைத்தால் மனிதன் விடுதலை அடைவான் எனும் போது, உளவியலில் இந்த சங்கிலிகளை ஓரிடத்தில் நிலையாக அறைந்து வைக்க ஒரு ஆணி - ஒரு அர்த்தம் - அவசியம் எனப் பேசினார்கள். குறிப்பாக யூதர்களின் வதைமுகாம்களில் மக்கள் மரணம் கண்முன்னால் தோன்றும் போது எப்படி வாழ்க்கையில் நம்பிக்கை வைத்து முன்னகர்ந்தார்கள் எனும் கேள்வியை வைத்தே இது தோன்றியது. இந்த உளவியல் வகையை தோற்றுவித்தவர் பெயர் விக்டர் பிராங்கிள் [Viktor Frankl] (1905-97). இவர் வதைமுகாம் ஒன்றில் சிறைவைக்கப்பட்டு மீண்டு வந்தவர். உளவியலாளரான இவர் எப்படி அந்த வதைமுகாமினர் நம்பிக்கையுடன் வாழ்க்கையை தொடர்ந்தார்கள், ஏன் தற்கொலை செய்யவில்லை எனக் கேட்டார். இம்மக்கள் வாழ்க்கை குறித்த பல நம்பிக்கைகளை அன்றாடத்தில் கற்பனையாய் உருவாக்கி அவற்றை நம்பினார்கள் எனக் கண்டுப்பிடித்தார். நவீன காலத்தில் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு அவநம்பிக்கையால் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை கண்டுபிடித்து அளித்தாலே சரியாகி விடும் எனக் கூறினார். இந்த முறைமையை logotherapy என்றார்கள். இவரது முக்கிய நூல் 

Man’s Search for Meaning. 


அடுத்து இதே உளவியலை இருத்தலிய, சமூகவியல், மார்க்ஸிய பொருளாதாரத்தின் பாதையில் வைத்து அலசியவர் எரிக் புரோம் (Erich Fromm) [1990-80]. இவர் வரலாற்றின் போக்கை நிலப்பிரபுத்துவம், முதலீட்டியம் எனப் பிரிக்கிறார். நிலப்பிரபுத்துவ காலத்தில் மக்கள் அடிமைகளாய், அறியாமையில் இருந்தாலும் அவர்கள் தாம் யார் எனும் நிச்சயத்துடன் இருந்தார்கள் (அதாவது லோகோதெரப்பியில் வரும் இருத்தலின் அர்த்தம்). ஆனால் முதலீட்டிய சமூகத்திலோ சமூதாயங்கள் உடைந்து, கிராமத்தில் இருந்து மக்கள் நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து தனிமனிதர்கள் தோன்றுகிறார்கள். இந்த தனிமனிதர்கள் நிலையான ஒரு குறிப்பிட்ட ஊரை சேர்ந்தவன், சமுதாயத்தை சேர்ந்தவன், தொழில் அடையாளத்தைக் கொண்டவன் என தம்மைக் குறிக்க முடியாது. அவர்கள் ஒரு எந்திரத்துடான தம் உறவால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவார்கள், அவர்கள் பணத்தின் மதிப்பால் மதிப்பிடப்படுவார்கள். ஆனால் மார்க்ஸ்மூலதனம்நூலில் பணத்தின் மதிப்பு என்பது அரூபமாய் இருப்பதாலே அது ஏற்றத்தாழ்வுகளுக்கு, அநீதிக்கு வழிவகுப்பதாய் சொல்கிறார். அதே போல தொழிலில் இருந்து தொழிலாளி அந்நியப்படுவதைப் பற்றியும் (உழைப்பின் மதிப்புக்கான நியாயமான பங்கு மறுக்கப்படுவதால்) அவர் பேசியிருக்கிறார். இது மனித மனத்தில் ஏற்படுத்தும் நிச்சயமின்மைகளை, அதனாலான அவநம்பிக்கையை, அழுத்தத்தை, நெருக்கடியைப் பற்றி விரிவாக அலசியவர் புரோம். ஆனால் மார்க்ஸில் இருந்து சற்று விலகி அவர் நிலப்பிரபுத்துவ அடிமை வாழ்வை ஒரு சுதந்திர வாழ்வாகக் கண்டார்; இங்குதான் இவரது உளவியல் இருத்தலியல் தத்துவத்தின் பாதையை எடுக்கிறது. இவரது ரொம்ப பிரசித்தமான நூல் Fear of Freedom (இது Escape of Freedom என்றும் அறியப்படுகிறது). இதன் தலைப்பே வித்தியாசமானது, இவரது கோட்பாட்டின் அடிப்படையைக் காட்டுவது. மனிதன் சுதந்திரத்தை விரும்பினாலும் அது அவனுக்கு ஊறானது, அவன் சுதந்திரத்தைக் கண்டு அஞ்சுகிறான், இந்த அச்சமே அவனை மனச்சிக்கல்களை நோக்கித் தள்ளுகிறது என்றார்.

 கிறித்துவத்தில் உள்ள மன ஊக்கம் / மனத்திட்பம் (will) எனும் கருத்தாக்கத்தையே அவர் உளவியலில், இருத்தலியலில் வைத்து வித்தியாசமாக அர்த்தப்படுத்துகிறார். நான் எப்படி வாழ வேண்டும், என்ன தேர்வுகளை எடுக்க வேண்டும் எனும் கேள்விகள் கடும் பதற்றத்தை ஏற்படுத்துபவை. ஒரு எழுத்தாளனுக்கு தன் கதையின், நாவலின் ஒரு அத்தியாயத்தை எழுதும் முன் எப்படி எழுதப்போகிறோம் எனும் தேர்வு கடும் நெருக்கடியை அளிக்கும். நுகர்வோனாக நாம் அனுதினமும் நுட்பமாக ஒரு பதற்றத்தில் இருக்கிறோம். அந்த பதற்றத்தை பின்னர் ஒரு இன்பமாக மாற்றிக் கொள்கிறோம். திருமணம் பெண்கள் பலருக்கும் நெருக்கடியான சந்தர்ப்பம். அதற்குப் பதிலாக யார் வசமாவது முடிவெடுக்கும் உரிமையை கொடுத்து விடலாம் என புரோம் சொல்வதில்லை; மாறாக 1) வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை உண்டு பண்ணி அதன் முன் நம் தேர்வுகளை ரத்து பண்ணிடலாம் என்கிறார்; 2) நெருக்கடியின் காரணம் இதுவே எனப் புரிந்ததும் மனம் லகுவாகி விடும் என்கிறார்.


எரிக் புரோமின் எழுத்துக்கள், குறிப்பாகவிடுதலை நோக்கிய அச்சம்எனக்கு மிகுந்த ஆறுதலாக அமைந்த புத்தகம். நான் கடுமையான சோர்வில் இருக்கும் போதெல்லாம் புரோமின் சிந்தனைகளை அசைபோடுவேன், மனம் லேசாகி விடும்.

ஆனால் தத்துவத்தில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் புரோம் எழுத்திலுள்ள குறைகள், போதாமைகள் தென்பட்டன, அவர் சற்று அலுக்கத் தொடங்கினார் என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும், இன்றும் எனக்கு ஒரு மன இறுக்கம் ஏற்பட்டால் நான் நாடுவது அவரது நூலையே

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...