முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்கு கலவை சாதம் பிடிக்காது



தமிழ் ஹிந்துவின் நடுப்பக்க இலக்கியஅரசியல்பற்றி காலச்சுவடு கண்ணன் தொடர்ந்து எழுதி வருகிறார். ஒருதலைசார்பாக அதன் ஆசிரியக் குழுவினர் உள்ளார்கள் என்பது அவரது பார்வை

இதை இரண்டு விதமாகப் பார்க்கலாம்:


1) குழு அரசியல்: இலக்கியத்தில் குழு அரசியல் நல்லதே என்பது என் பார்வை (ஹிந்து நடுப்பக்கத்தில் சில எழுத்தாளர்கள் புறக்கணிப்படுகிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருந்தாலும் தப்பில்லை.) ஏனெனச் சொல்கிறேன். எந்த ஆசிரியக் குழுவுக்கும் தனக்கான அழகியல் பார்வை, அரசியல், தனக்கான இலக்கிய மதிப்பீடு, தேர்வு மதிப்பீடு இருக்க வேண்டும். அப்போதே ஆழமான தீவிரமான விவாதங்கள் சாத்தியமாகும். காழ்ப்புணர்வும், குறுகின மனப்பான்மையும் நிச்சயம் கூடாது. ஆனால் அதே நேரம் ஒரு வலுவான நம்பிக்கையும் பார்வையும் கொண்டுள்ளது, அதை வைத்து என்ன மாதிரியான கட்டுரைகள், யாரைப் பற்றி வர வேண்டும் என முடிவெடுப்பதில் தப்பில்லை.


 சிறுபத்திரிகையாளர்கள் தம்முடன் நெருக்கமான நட்பில் இருக்கிற, தாம் அதிகமாய் மதிக்கிற சீனியர்களுக்கு கூடுதலாக இடமளிப்பார்கள். இது ஒரு சிறுபத்திரிகைமரபு’. சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் ஹிந்துவில் மட்டுமல்ல எங்கிருந்தாலும் இதுவே நடக்கும். இப்போது புகார் சொல்லும் கண்ணன் நாளை ஹிந்து தமிழ் நடுப்பக்க எடிட்டரானால் என்ன நடக்கும்? அவர் தான் தொடர்பில் இருக்கும், தன் பத்திரிகையான காலச்சுவடில் எழுதுகிறவர்களுக்கே முன்னுரிமை கொடுப்பார். இது தெரியாமல் இருக்க ஒன்றிரண்டு வெளியாட்களையும்மேடையேற்றி சால்வை போர்த்துவார்’. அவரால் மனுஷ்யபுத்திரனையும், ஜெயமோகனையும் அப்போது அவரால் அங்கு எழுத வைக்க முடியுமா? முடியாது. ஏனென்றால் காலச்சுவடிலும் ஒருஇலக்கியக் குழுவாதம்உள்ளது என்பதை இருபது வருடங்களுக்கு மேலாக அதைப் படித்து வருகிறவன் என்கிற முறையில் என்னால் சொல்ல முடியும். அவர்களாக யாருக்கும் தடைச்சுவர் எழுப்புவதில்லை என்றாலும், ஒரு சிலரே திரும்பத் திரும்ப எழுதுவது நடந்து விடுகிறது.


நான் இவ்விசயத்தில் புகார் சொன்னதில்லை. அப்படி ஒரு நியாயமானஒரு பக்கசார்புஉள்ளது ஒரு பத்திரிகைக்கு தனித்துவமான அடையாளத்தை அளிக்கும்,

இதுவே ஆழமான விவாதங்களை முன்னெடுக்கும் என நினைக்கிறேன்

தமிழ் ஹிந்துவில் சீனியர், ஜூனியர் எழுத்தாளர்கள் பலரும் - என்னையும் உள்ளிட்டு - எழுதியிருக்கிறோம். படைப்புகளை வாங்குவதில் ஹிந்துவுக்கு பாகுபாடுகள் இல்லை. ஆனாலும் தமிழ் ஹிந்துவின் நடுப்பக்கத்தை கவனிக்கும் கவிஞர்களுக்கு விக்கிரமாதித்யனும், வண்ணதாசனும் முக்கியமெனில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் தப்பில்லை.

ஆனாலும் ஒரு பிரச்சனை வருகிறது.


2) தமிழ் ஹிந்து ஒரு சிறுபத்திரிகை அல்ல. அது ஒரு பொதுவான, வெகுமக்கள் படிக்கிற நாளிதழ். அங்கு கராறான இலக்கிய அரசியல் நிலைப்பாடுகள் கூடாது. ஆனால் இந்த சிறுபத்திரிகை ஆட்களை நீக்கி விட்டு அங்கு நீங்கள் இலக்கிய வாசிப்போ நிலைப்பாடோ இல்லாத பொதுவான எடிட்டர்களைக் கொண்டு வந்து எல்லாரும் புழங்குகிற கடற்கரையாக ஒரு நடுப்பக்கத்தை மாற்றினால் என்னவாகும்? அது அந்தப் பகுதியை கலவை சாதமாக ஆக்கி விடும். அதற்கென ஒரு தனித்துவம் இல்லாமல் பண்ணி விடும்


இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு சமரசம், ஒரு நடுநிலை சாத்தியமா? அவசியமா? இல்லை. ஆனால் ஒரு நிதானம், சமநிலை இருக்கலாம். அது போதும். எந்த சார்பும் இருக்கக் கூடாது என நினைத்து ஒரு பத்திரிகை முகமழிந்து போய்விடக் கூடாது.


காலச்சுவடு கண்ணனின் தொடர்தாக்குதல்கள் நியாயமற்றவை. காலச்சுவடு எழுத்தாளர்களைப் பாராட்ட, முன்னெடுக்க ஏன் தமிழ் ஹிந்து நடுப்பக்க பயன்படுத்தப்படவில்லை என அவர் கேட்கிறார் (அவர் தரும் விடுபட்ட எழுத்தாளர்களின் பட்டியல் இப்படித்தான் இருக்கிறது.) வண்ணதாசனைக் கொண்டாடுகிறீர்கள் ஏன் அம்பையை கைவிட்டீர் எனக் கேட்கிறார். இது ஒரு ஆணாதிக்க மனப்பான்மை என வைரமுத்துவுக்கு தமிழ் ஹிந்துவினர் அண்மையில் வெளியிட்ட சிறப்பு நடுப்பக்கக் கட்டுரைகளை வைத்து குற்றம் சாட்டுகிறார்.


 இப்படி இலக்கியத்தில் நாம் அரசியலைத் தேடுவதானது எங்கள் ஊரில் சொல்வதைப் போல மலத்தில் அரிசியைத் தேடுகிற வேலையாகி விடும். வைரமுத்து மீது மீ டூ குற்றச்சாட்டு வந்தால் அவரை இருட்டுக்கொட்டடியில் அடைத்து விட வேண்டுமா? முச்சந்தியில் நிறுத்தி கல்லெற வேண்டுமா? ஆம் என்பது பதில் எனில், ஒரு எழுத்தாளனின் சமூக ஒழுக்கம் அல்லது அதன் மீதான நம்பிக்கையும் பிம்பமுமே இலக்கிய வரையறை ஆகிடும். இதுவும் சரிதான் எனில், ஒருவர் சமூகத்தில் ஒழுக்க நீளத் எனப் பெயரெடுத்த ஒருவர் மட்டுமே - அவர் எதையும் எழுதாவிடினும் - மிகச்சிறந்த எழுத்தாளர் என அர்த்தமாகி விடும். எனில் யாரும் எழுதவே வேண்டாமே?


நுண்ணுணர்வு இல்லாதவர்களே சின்மயி போன்றோரின் சுயநல நோக்கிலான அரசியலை வைத்து இலக்கியவாதிகளை சிலுவையில் அறைவார்கள்

வைரமுத்துவைக் கொண்டாடினால் தப்பு? ஏனென்றால் சின்மயி போன்ற சில மாமிகளுக்கு அவரைப் பிடிக்கவில்லை. வண்ணதாசனைக் கொண்டாடினால் அது குழுவாதம். இனி ஒருவரைப் பாராட்டுமுன்னர் பக்கத்திலேயே நூற்றுக்கணக்கான பிற படைப்பாளிகளைப் புகழ்ந்தும் ஒரு நாலு வார்த்தை எழுதி விட வேண்டுமா


அரசியல் சரிதன்மையா இலக்கிய நம்பிக்கைகளா? நான் இலக்கியத்தின் பக்கமே நிற்பேன்

ஏனென்றால், தனிப்பட்ட முறையிலும் எனக்கு கலவை சாதம் பிடிக்காது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...