முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகை சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம்?



இடம்: காவல் நிலையம்

வேலை: முதல் தகவல் அறிக்கையை தயாரிப்பது


“யோவ் ரிப்போர்ட் ரெடியா?”

“ஆமாங்கய்யா. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிரலாம். நீங்க சொன்ன மாதிரி தற்கொலைன்னே போட்டுட்டோம்.”

“அந்த பொண்ணோட அம்மா என்னவோ தனக்கு எல்லாம் தெரியுங்கிற மாதிரி என் பொண்ணை அடிச்சு கொன்னுட்டாங்கன்னு கேமரா முன்னாடி ஒப்பாரி வைச்சுது. அப்போ நாம என்னா .... ? அசிங்கமா போச்சுய்யா. முதல்ல, தற்கொலைக்கு தூண்டினவங்கன்னு அந்த அம்மா மேலேயே கேஸைப் போடுறோம்.”

“ஐயா சொந்த அம்மாவா?”

“ஆமா, அப்போ தான் அது படிஞ்சு வரும். இனி மீடியாவுக்கு போக மாட்டேன்னு சமரசம் பண்ணிக்கும். அப்புறமா கழற்றி விட்டுரலாம்.”

“என்ன காரணமுய்யா?”

“அவள் கட்டிக்க இருந்தாளே ஹேம்நாத் அவனை விட்டு பிரிஞ்சு வந்திருன்னு இந்தம்மா தினமும் மெண்டல் டார்ச்சர் கொடுத்திருக்கு. ஓக்கேவா?”

“சரிய்யா.”

“அடுத்தது, தற்கொலைக்கு தூண்டின பிரதான குற்றவாளி நம்பர் 2 அந்த ஹேம்ராஜ்.”

“அதுக்கு என்ன காரணமுய்யா?”

“இதே தான் - என்னை கண்டிப்பா நீ கட்டிக்கணமுன்னு இந்தாளு மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறான். எப்படி?”

“சூப்பர் ஐயா. ஆனா நம்பும்படியா இல்லியே?”

“அந்தம்மாவை மட்டும் குற்றவாளி ஆக்கினா நாம் இந்தாளு கிட்ட பணத்தை வாங்கிட்டு தப்பா ரிப்போர்ட் கொடுக்குறோமுன்னு வந்திரும். அதான் அந்தாளையும் குற்றவாளி ஆக்குறோம். குற்றம் சாட்டுறவனும், சாட்டப்பட்டவனும்  இப்போ உள்ள வந்தாச்சு. எப்படி?”

“கோர்ட்டில....?”

“அதான் தற்கொலைன்னு ஆயிருச்சில்ல, அப்புறம் இவங்களை கோர்ட் விடுதலை பண்ணுனா என்னய்யா?”

“சூப்பருங்கய்யா.. ஐயா எனக்கு ஒரு சந்தேகம்.”

“கேளு.”

“தற்கொலைன்னா என்னய்யா?”

“தானே தன்னை கொலை பண்ணிக்கிறது.”

“ஐயா நான் சொல்றது தப்புன்னா மன்னிச்சிருங்க.”

“சொல்லுய்யா கேட்போம்.”

“தன்னையே கொல்லுறதும் கொலைதான்.”

“ஆமா, தற்கொலை.”

“ஆமாங்கய்யா. அப்படி கொல்லுறவங்க தானே கொலையாளி? இப்போ முதல் குற்றவாளி அந்த கொலையாளி தானே. அதனால இந்த ரிப்போர்ட் படி பிரதான குற்றவாளி எண் 1 சித்ரா தான். எப்படிங்கய்யா?”

“அடடா, நான் கூட இப்படி யோசிக்கலையே? மூணு பேரு சம்மந்தப்பட்டிருக்காங்க. அந்த அம்மாவும், ஹேம்நாத்தும் தப்பிச்சா கூட இந்த பொண்ணை விடக் கூடாது.”

“விட மாட்டேனுய்யா. சித்ரா கொலைக் குற்றவாளி துப்புத்துலக்கு. விரைவில் கைதுன்னு நியூஸ் கொடுத்திருவோம்யா.”

“முதல்ல போய் டீயும் வடையும் வாங்கிட்டு வா.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...