முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுள் இருக்கிறார் என்பது எப்படி கடவுள் மறுப்புவாதமாகிறது?


 


நாகார்ஜுனரின் “மூலமத்யமகாகாரிகா” நூலின் முக்கியமான அவதானிப்புகளில் ஒன்று இறைநம்பிக்கையாளர்களின் (குறிப்பாக வைதீக பக்தர்களின்) கடவுள் குறித்த கருத்துரு எவ்வளவு அபத்தமானது என அவர் நிறுவுகிற இடம். குறிப்பாக முதல் அத்தியாயத்தில் வரும் இந்த ஆறாவது சுலோகத்தை பாருங்கள்.

“For neither an existent nor a nonexistent thing
Is a condition appropriate.
If a thing is nonexistent, how could it have a condition?
If a thing is already existent, what would a condition do?”

“இருக்கிற அல்லது இல்லாத ஒன்றுக்கு
ஒரு நிலை தேவையிருக்காது.
ஒன்று இல்லையெனில், அதற்கு நிலை இருக்காது அல்லவா?
அது ஏற்கனவே இருக்கிறதெனில், அதற்கு ஒரு நிலையின் அவசியம் என்ன?”


முந்தின சில சுலோகங்களில் நிலைகள் சாராம்சமானவையாய் இருக்கக் கூடும் எனும் வாதத்தை முறியடிக்க முயன்ற நாகார்ஜுனர் இப்போது மீண்டும் நிகழ்த்தப்படும் விசயங்களின் சாராம்சம் பற்றி பேச வருகிறார்.
இங்கு முக்கியமான குறிப்பு ‘இருப்பது’, ‘இல்லாதது’ என்பதற்கு நிஜத்தில் இருப்பது, இல்லாதது எனப் பொருள் இல்லை. சாராம்சமாக இருப்பது, சாராம்சமாக இல்லாதது என்றே புரிந்து கொள்ள வேண்டும் (சம்ஸ்கிருதத்தில் சத் - அசத் போன்ற சொற்கள் இதற்கு பயன்படுகின்றன.) இப்போது படித்தால் இந்த சுலோகம் உங்களுக்கு தெளிவாக விளங்கும்:
ஒன்று சாராம்சமானதாய் உள்ளதென்றாலோ இல்லையென்றாலோ அதற்கு ஒரு நிலை அவசியமில்லை. ஒன்று சாராம்சமாய் இல்லையென்றால் அதற்கு என ஒரு சாராம்சமான நிலை இருக்க முடியாது தானே என பின்னோக்கி வாதிட்டு நிறுவுகிறார் நாகார்ஜுனர். அதே போல ஒன்று சாராம்சமாய் இருக்கிறதென்றால், அது காலத்தைக் கடந்து இருப்பது, அதனாலே அது ஏற்கனவே இருக்கிறது எனப் பொருளாகி விடும். ஏற்கனவே இருக்கிற ஒன்றை மற்றொன்று நிகழ்த்த முடியாது, எனில் அதற்கு நிலையே இருக்க முடியாது தானே எனக் கேட்கிறார்.
இந்த வாதத்தை நாம் கடவுளைப் பெற்றது யார் எனும் கேள்வியின் பின்னணியில் இருந்து பார்த்தால் இன்னும் ஆழமானதாக ஆகும் - கடவுள் இருப்பதும் இல்லை, இல்லாமல் ஆவதும் இல்லை என (கீதையில் கண்ணன் சொல்வதைப் போல) கூறப்படுவது உண்மையெனில், கடவுளுக்கு நிலைகளே இருக்க முடியாது. எனில் கடவுள் சாத்தியமே இல்லை என ஆகிறார். நிலைகளால் மட்டுமே ஒன்று சார்புநிலையில் தோன்ற முடியும் என்பது நாகார்ஜுனரின் அடிப்படையான வாதம். நிலைகளே இல்லாத ஒன்று இருக்கவே முடியாது தானே? எனில் கடவுள் தோற்றமும் முடிவும் அற்றவர், சாராம்சமானவர் எனச் சொல்வது கடவுள் இல்லை என்பதற்கு சமானமானது என நாகார்ஜுனர் இங்கு நிறுவுகிறார்.
கடவுளுக்கு நிலையே இல்லை எனில் அவர் தன்னையே தோற்றுவித்தாரா? கடவுள் தன்னையே தோற்றுவித்தார் எனில் அவர் நிலையா அல்லது நிகழ்வா? அவர் நிலையும் நிகழ்வுமெனில் எவ்வளவு அபத்தம்? கடவுள் காலத்துக்கு அப்பாலானவர், காலதீதமானவர் எனில் காலத்தை யார் ஏற்படுத்தியது? (காலத்துக்கு அப்பால இருப்பதற்கும் அங்கு காலம் இருக்க வேண்டுமல்லவா?) கடவுளே காலத்துக்கு வெளியே நின்று காலத்தையும் உண்டாக்கினார் எனில் கடவுள் காலத்தின் நிலையாகிறார், எனில் அவர் சாராம்சமற்றவர் ஆகிறார். இப்படி இந்த சுலோகம் மற்றும் இதற்கு முந்தையவற்றின் வாதத்தை கடவுளின் இருப்பை அலச பயன்படுத்தும் போது பல ஓட்டைகள் புலப்படுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...