அமேசானில் ஒரு புத்தகம் ஆர்டர் பண்ணி இருந்தேன். விற்பனையாளரான முகேஷ் நேற்று அழைத்து "நீங்க தான் எழுத்தாளர் அபிலாஷா? உங்கள் கட்டுரைகளை விரும்பிப் படிப்பேன்" என அன்புடன் விசாரித்தார். கூடுதலாக தான் மனுஷ் கவிதைகளின் தீவிர வாசகன் என்றும், கடந்த புத்தகக் கண்காட்சியின் போது மனுஷ் தன் கவிதை நூலை தன்னை வைத்து வெளியிட செய்ததாகக் கூறினார். அருமையான மனிதர். இன்று நான் ஆர்டர் செய்திருந்த நூலுடன் பா.ராவின் புத்தகம் ஒன்றையும் அன்பளிப்பாக இணைத்திருந்தார். இப்படியான வாசக நண்பர்கள் அமேசான் விற்பனையாளர்கள் இடையே பெருகினால் என்னென்ன கிடைக்குமோ, தினமும் ஒரு பொருளை ஆர்டர் பண்ணி பல பரிசுகள் வந்தால் எப்படி இருக்கும் என உடனே அந்த ஒரு பகற்கனவு பிறக்கிறது.
ராயல்டி இல்லாவிட்டால் என்ன, நீங்கள் இருக்கிறீர்களே என் தங்கங்களே!

Comments