முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"அச்சே தின்" - ஒரு அறிமுகம்

 


இந்த புத்தகத்தை நான் சிறுகுறிப்புகளாக கடந்த சில ஆண்டுகளாக எழுதி வந்தேன். ஆனால் ஒரு முழு புத்தகமாக தொகுக்கும் போது ஒரு பயம் எட்டிப்பார்த்தது. அந்த பயம் ஒரு பெரும் அச்சமாக உருவெடுத்தது

நான் இந்நூலை எழுத ஆரம்பித்த போது இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் கண்டிக்கப்படுவதும் மிரட்டப்படுவதுமே நடந்தது, அது பின்னர் விசாரணை, சிறைவாசம், படுகொலைகள் என பலவிதமான தண்டனைகளின் வடிவெடுத்தது, இப்போது எதிர்க்கிறவர்கள் எல்லா இடங்களில் இருந்தும் முழுமையாக காணாமல் அடிக்கப்படுகிறார்கள். இந்துத்துவத்தை எதிர்க்கிறவர்கள் இன்று தேசத்தை எதிர்க்கிறவர்களாக, ஒரு பொது துரோகியாக கட்டமைக்கப்படுகிறார்கள்; மக்கள் இந்த கட்டமைத்தலை எந்தளவுக்கு உள்வாங்கி உள்ளார்கள் என்றால் அதைத் தமது இயல்பான சுபாவமாக மாற்றிக்கொண்டுள்ளார்கள். நான் இப்போது வாழ்ந்து வரும் மாநிலத்தில் இந்த அரசை விமர்சிக்கிறவர்களை முன்பை விட மிக மிகக் குறைவாகவே காண்கிறேன். முன்பு வெளிப்படையாக சாடியவர்கள் இன்று அமைதி காக்கிறார்கள். அவர்கள் தம்மை யாரோ கண்காணிப்பதாக உள்ளுக்குள் பதறுகிறார்கள். அரசின் கண்காணிப்பை அவர்கள் தமக்குள் உணர ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தம்மையே கண்காணிக்கிறார்கள். அவர்கள் தெரியாமலே சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டால் உடனே தம்மைச் சுற்றி ஒரு கவலையுடன் பார்க்கிறார்கள். பாதியிலேயே பேச்சை முறிக்கிறார்கள். நானும் மெல்ல மெல்ல இந்த மௌனத்தில் ஆழ்ந்துவிட்டேன்

இது ஒரு தனிமனித மௌனம் அல்ல, இது ஒரு கூட்டு மௌனம். இந்த சமூகம் மெல்ல மெல்ல பாஜக முகமூடிகளுக்கு ஏற்ப தன் முகத்தை மாற்றத் தொடங்கியுள்ளது. அது மெல்ல மெல்ல பாஜகவின் குரலை மிமிக்றி செய்வதே தனக்குப் பாதுகாப்பு எனும் நினைக்கத் தொடங்கியுள்ளது. மோடியை எதிர்ப்பதை நம்முடன் இருப்பவர்களே இன்று தந்தையை அடிப்பதைப் போல, தாயைப் புணர்வதைப் போல ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகப் பார்க்கிறார்கள். ஆனால் அதற்குக் காரணம் மோடியை விமர்சிப்பவர்கள் தனது பிளவுபட்ட மனத்தின் அடக்கி வைக்கப்பட்ட குரலே என இந்த சமூகம் புரிந்து கொள்வதில்லை என்பதே. வரலாற்றில் நாம் இவ்வளவு நோயுற்று முன்பு இருந்ததில்லை. இந்த சமூகத்திடம் போய் மோடியை விமர்சித்து உரையாடுவது அதை அம்பலப்படுத்துவதற்கு சமானமானது. அது இந்த சமூகத்தை கடுமையாக சீண்டும். அப்போது இச்சமூகம் வன்மத்துடன் எதிர்வினையாற்றும். சட்டத்தின், போலீசின் கரங்களில் இருந்து தப்பிக்கிறவர்களை இச்சமூகம் இனி மென்னியை நெரிக்கும் எனத் தோன்றுகிறது. இங்கிருந்து கொண்டு இந்நூலை வெளியிடுவது ஆபத்தானது எனத் தெரிந்தே தான் நான் செய்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...