செல்வகுமார்: அண்ணே, அன்றாட பணிக்கு மத்தியில் தினமும் எப்டி எழுத்தை கைகொள்கிறீர்கள்?
சில நேரத்தில் எழுத அமர்ந்து ஏதேதோ எழுதுகிறேன்..எழுதியதை மொத்தமாக அழித்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன்..சில நேரம் வாரத்தில் இரு நாள் மட்டுமே எழுதுகிறேன்..அன்றாடம் எழுத தாங்கள் என்ன உத்தி செயல்படுத்துகிறீர் அண்ணா
நான்: பழக்கமாகிவிட்டால் அது தானே நடக்கும். அதுவரை முயற்சி எடுக்க வேண்டும். திட்டமிட வேண்டும், இவ்வளவு நேரம் இன்றைக்கு என முடிவெடுத்து அதற்காக உட்கார வேண்டும். கவனச்சிதறல்களைத் தவிர்க்க வேண்டும். இலக்கை அடைந்த பின்பே தூங்க செல்ல வேண்டும். தினமும் சிறுக சிறுக எழுதினால் நிறைய எழுதிக் குவிக்கலாம்.
கடைசியாக, மனத்தடை இருக்கலாகாது.
மனதின் மொழியில், பேச்சின் மொழியில் எழுத வேண்டும், இடைவெளியை முடிந்தவரைக்கும் குறைக்க வேண்டும்.
செல்வக்குமார்: பணி நேரம் போக..சமூக வலைதளத்தில் நேரம் போகவிடுகிறேன் அண்ணா..அதைச் சரி செய்ய வேண்டும் முதலில்..வாசிப்பிலும் வேகம் குறைந்து காணப்படுகிறேன்..நீங்கள் சொல்வதை நான் செய்து பார்க்க வேண்டும் சுய பரிட்சையாக..
நான்: சமூகவலைதளத்தில் படிப்பதை குறைத்து அதிலே எழுதுங்கள்.
நேர்மையாக எழுதுங்க.
மனதுக்குப் பட்டதை மட்டும், அரசியல் சரிநிலை பார்க்காமல் எழுதுங்க.
டிரண்டுகளைப் பொருட்படுத்தாமல் அதே நேரம் சுவாரஸ்யமாக எளிமையாக எழுதப் பழகுங்கள்.
எழுதக் கிடைக்கும் எல்லா இடங்களையும் பயன்படுத்துங்க.
Always think as a writer, not as an individual, family man, friend, employee. யாராவது காறித்துப்பினால் கூட இதை எப்படி எழுத்தாக்கலாம் (கண்டெண்ட் அல்ல) என யோசியுங்கள்.
செல்வக்குமார்: ரொம்ப நன்றி அண்ணே...நீங்க ஒரு வார்த்தை சொன்னிங்க..கவிஞர்கள் சோம்பேறிகள்..அப்டினு எனக்குள்ள ஒரு கேள்வி..நாம கவிதை எழுதி எழுதிதான் பெரிய எழுத்து எழுத மனத்தடை வந்துருக்குமோனு....அதை உடைக்கும் வண்ணம் நிதமும் எழுதப்போகிறேன்..சுய பரிசோதனை செய்கிறேன்...ஒரு மாசம் கழிச்சு ரிசல்ட் சொல்கிறேன்.
தேங்யூணா!
நான்: நன்றி.
கவிஞர்கள் சோம்பேறிகள் அல்ல, ஆனால் அவர்கள் புனைவெழுதும் போது தொடர்ச்சியாக தம் உணர்வெழுச்சியை தக்க வைக்க சிரமப்படுவார்கள் என்றேன். மேலும், கவிதையில் இருந்து உரைநடைக்கு மாறுவது சிரமம். அப்படி மாறும்போது அந்த கவித்துவ அழகியலை தக்க வைத்துக் கொள்ளவும் வேண்டும்.
செல்வக்குமார்: கண்டிப்பா அண்ணா..வாசிப்பை அப்ப புத்தகத்தில் மட்டுமே வைத்துக்கொள்ளலாமா அண்ணா?
"நிறைய வாசி பிறகு எழுதலாம்" என்பதே அனைவரின் வார்த்தைகளும்..அந்த நிறைய என்பது எவ்வளவுதான் அண்ணா..இல்லை வாசிப்பையும் எழுத்தையும் ஒருங்கே செய்கையில் அது கைகூடுமா?
நான்: எதையும் வாசிக்கலாம், ஆனால் ‘அதுவே’ பிழைப்பாக இருக்கக் கூடாது. நாம் வாசகர் அல்ல எழுத்தாளர்கள்.
செல்வகுமார்: பயிற்சி என்பது பழகுதல் பற்றியதுதான அண்ணா..நீங்க எம்மாதிரி கற்றுக் கொடுக்கிறீங்க அண்ணா..டாஸ்க் மாதிரியா..இல்லை ஆர்வமுள்ளோர் எல்லாருக்கும் சொல்லித் தரிங்களாண்ணா?
நான்: என் வகுப்பில் எழுத்தின் முறைமை, உத்திகள் பற்றி பேசிவிட்டு டாஸ்குகளும் கொடுக்கிறேன்.
செல்வகுமார்: இதில் சேர என்ன விதிமுறைகள் அண்ணா?
நான்: எங்கள் பல்கலைக்கழகத்து மாணவராக இருக்க வேண்டும். அங்கு மாணவர்களில் ஆர்வமுள்ளோர் ஒரு எலக்டிவ் பாடமாக அதைத் தேர்வு பண்ணுகிறார்கள்.
செல்வகுமார்: மிக அருமை. எனக்கு அந்த வாய்ப்பில்லையே.
நான்: நன்றி. மே, ஜூன் மாதங்களில் காணொளி வழியாக ஒரு நாவல் எழுதும் கலைக்கான பயிற்சித்தொடரைத் திட்டமிட்டுள்ளேன். விரைவில் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
செல்வகுமார்: மே. ஜூன்...காத்திருக்கிறேன் அண்ணா .
நான்: நன்றி. சந்திப்போம்!
Comments