எழுத்தாளர் ஆர். அபிலாஷ் அவர்கள் நடத்தும் நாவல் பயிற்சி வகுப்பு. முழுத் தகவல்களும் தொடர்பு மின்னஞ்சல் முகவரி, வாட்ஸாப் எண்ணும் வீடியோவில் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்/நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share
Comments