முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேலும் சில வாழ்த்துகள்

 எல்லாவற்றிற்கும் ஒரு academic discipline இருப்பது நல்ல விசயம் என நம்புகிறேன்..

அபியின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்...

- எழுத்தாளர், பதிப்பாளர் ஜீவ கரிகாலன்

ஆர். அபிலாஷுடன் நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்
உங்களில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு நாவல் உள்ளது. அந்த நாவலை உங்களால் மட்டுமே எழுத முடியும். அதை நீங்கள் எழுதாத பட்சத்தில் அது இந்த உலகத்துக்கும், உங்கள் பண்பாட்டுக்கும் ஒரு நட்டமாக மாறும். அதை எழுத நீங்கள் ஒரு எழுத்தாளனாக இருக்க அவசியம் இல்லை என்றாலும் கூட அதை எழுதுவதற்கான ஒரு அடிப்படையான பயிற்சி, எழுத்து வடிவத்தின் நுட்பங்கள் பற்றின அறிவு, வாசிப்பு, நேர நிர்வாகத் திறன், ஒழுக்கம் வேண்டும். இவை அனைவரிடமும் இருப்பதில்லை. அதே நேரம், உங்களிடம் எழுத ஆர்வம் மட்டும் உண்டெனில், மேற்சொன்ன தகுதிகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளவும் உங்கள் பெயரை நீங்கள் வாழும் காலத்திலேயே மக்கள் நினைவில் ஆழமாக பதிக்கத் தக்க நாவலொன்றை உங்களால் எழுத நிச்சயமாக முடியும். அதற்கான பயிற்சி அளிப்பதும், அந்த இடத்தை நோக்கி உங்களை அழைத்து செல்வதுமே இந்த வகுப்பின் குறிக்கோள்.
நாவலே நம் காலத்தில் அதிகம் படிக்கப்படும் கதைவடிவம். சிறுகதைகளைக் கொண்டு உங்களால் உடனடி கவனத்தைப் பெற முடியும் என்றாலும் சிறுகதைத் தொகுப்புகளை விட நாவல்களே புத்தக சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்றன. பெரும் கவனத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அரிதாகவே ஒரு சிறுகதைத் தொகுதி பரவலான வாசகர்களைப் போய் அடைகிறது. அடுத்து, நீங்கள் எதிர்காலத்தில் திரைக்கதையாளராக விரும்புபவர் என்றாலும் ஒரு பெரிய கதைக்கட்டமைப்பு, பாத்திரங்களின் பிரஞ்சத்தை உருவாக்கவும், தொடர்ச்சியாக எழுதவும், நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், புனைவின் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளவும் முக்கியமான பயிற்சியாக நாவலை எழுதிப் பார்ப்பது இருக்கும் (இரண்டின் விதிமுறைகளும் அடிப்படையில் ஒன்றுதான்.) நீங்கள் சிறுகதைகள் எழுதி பழக்கம் கொண்டவர் என்றாலோ பேஸ்புக்கில் சுவைபட எழுதும் பதிவர் என்றாலோ, அடுத்த கட்டமாக நாவலாசிரியராக விரும்பும் பட்சத்தில் உங்களுக்கு அடிப்படையான பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. இந்த வகுப்பு உங்களுக்கானதே.
இத்தகைய வகுப்புகள் ஆங்கிலத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மேலைநாடுகளில் அதிகமாகவும் (MFA in Creative Writing), தற்போது இந்தியாவில் கல்லூரிகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்படுகின்றன. தமிழில் கடந்த சில ஆண்டுகளாக் பயிற்சிப் பட்டறை வடிவிலும், காணொளி வழியாகவும் நடந்து வருகின்றன. ஆனால் கல்விப்புல முறைமையுடன் செறிவான பாடத்திட்டத்துடன் கிட்டத்தட்ட MFA போன்றே நடத்தப்படும் நாவல் எழுத்து வகுப்பாக “நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்” இருக்கும்.
“நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்” வகுப்பு பங்கேற்பாளர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் மாலை வேளையில் ஒரு மணி நேரம் எனும்படி மொத்தமாக இரண்டு மாதங்கள் (மொத்தமாக 16 மணிநேரங்கள்) இணையவழியில் (gmeet) நடத்தப்படும். இவ்வகுப்பு தொடர்ச்சியாக வருடம் தோறும் ஆறு முறைகள் நடத்தப்படும். முதல் வகுப்பு ஜூன் 10, 2023 முதல் ஆரம்பமாகும். சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மாலை 6-7 ஆன்லைன் வகுப்புகள் நடக்கும்.
இதில் எந்த வயதினர் வேண்டுமெனிலும் கலந்துகொள்ளலாம்.

- நா. சரவணன்




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...