பிரதீப் வெளியேற்றத்தின், சர்ச்சையின் திரைக்கதையை விஜய் டிவி முன்கூட்டியே எழுதி நிறைவேற்றியது என பாத்திமா பாபு பேஸ்புக் பதிவொன்றில் (வேறு மொழியில்) சொன்னது மிகக் கூர்மையான பார்வை. அந்த அத்தியாயத்தில் வெளியேற்றத்தை தவறெனக் காட்டும் விதம், கமல் வில்லனாகும் படியே காட்சிகள் தொகுக்கப்பட்டிருந்தன. இது ஒரு படமாக்கித் தொகுக்கப்பட்ட நிகழ்வு எனும் போது இதை வைத்து யாரையும் மதிப்பிடுவது அபத்தமானது. அதற்குப் பதில் எப்படியெல்லாம் மக்களைத் தூண்டி விடுகிறார்கள் என யோசிக்கலாம். ஒன்று முட்டாளாகலாம் அல்லது புத்திசாலியாகலாம். இரண்டுக்கும் நடுவே ஒன்று பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு இல்லை.
என்னுடைய கேள்வியெல்லாம் கமலுக்குத் தெரிந்தே தான் இந்நாடகம் நடக்கிறதா என்பதே. இல்லாவிடில் அவர் அனுமதிப்பாரா?
படத்தில் விக்ரமை வில்லனாக்கி விட்டு, சொத்தையாக்கி விட்டு கடைசியில் ஹீரோவாக, கெத்தாக மாற்றுவார்கள். பிக்பாஸ் வரும் வாரங்களிலும் கமல் எனும் தொகுப்பாளருக்கு அப்படி ஆகுமா? ஆம் என்பதே என் பதில்.
பிக்பாஸே திரைக்கதைப் படி மக்கள் ஒரு வீட்டுக்குள் நடப்பது எனில் அதற்கு வெளியே சமூகவலைதள வைரல் கண்டெண்டையும் இப்போது தம் விருப்பப்படி கட்டுப்படுத்த ஆரம்பித்துளார்கள். இப்படி சோஷியல் மீடியா இஞ்சினியரிங், வைரல் கண்டெண்ட் உருவாக்கத்தை துவங்கியதே பாஜக என்பதை மறந்துவிட வேண்டும். அவர்களுக்கு முன்பு இந்திரா காந்தி (போர்கள் வழி). அவருக்கு முன்னால் ஹிட்லர், முசோலினி. அன்றும் சரி இன்றும் சரி, இவர்கள் எல்லாரும் ஒரு உடலின் பல்வேறு கரங்கள் மட்டுமே.
நம் காலத்தின் வேடிக்கையும் துயரமும் இதுதான்.
கருத்துகள்