எழுத்தை ஒரேயடியாக தள்ளிப் போடுவது, எழுதும் நேரத்தில் வேறு வேலைகளில் மும்முரமாக ஈடுபடுவது, ஒவ்வொரு நாளையும் குற்றவுணர்வுடன் முடிப்பது, எழுதும் ஆற்றலை அழிவாற்றலாக மாற்றி தன்னையோ பிறரையோ உள்ளார்ந்து அழிப்பது, படைப்பாற்றலை வெளிப்படுத்தாதால் எந்த வேலையையும் செய்ய விரும்பாமல் சோம்பித் திரிவது என எழுத்தாளர்களின் சிக்கல்கள் பிரத்யேகமானவை. எவ்வளவு தான் முயன்றாலும் அவர்களால் ஓரிடத்தில் அமர்ந்து படைப்பு வேலையில் ஈடுபட முடிவதில்லை. எழுதும் போதான அந்த தனிமை குறித்த பயம், படைப்பு பணியின் விளைவான எழுத்தின் மதிப்பு குறித்த அச்சம் அவர்களை எழுத்தில் இருந்தே துரத்துகிறது. இதை நேர மேலாண்மைத் திறன் கொண்டு மட்டும் சரிசெய்ய முடிவதில்லை. முதலில் நாம் எழுத்தை ஒரு சமூகப் பணியாக மாற்ற வேண்டும் (சமூக சேவை அல்ல). நாம் தனியாக இல்லை, பிறருடன் இருந்தே எழுதுகிறோம் என உணர வேண்டும். இதுவே நம் பிரச்சினைகளில் பாதியை தீர்த்து நம்மை எழுதத் தூண்டும். ஒரு படைப்பாக்க வகுப்பில் இணைந்து உங்கள் நாவல் திட்டம், ஐடியா, கனவு குறித்து விவாதிக்கும் போது, எழுதுவது ஒரு தவிர்க்க முடியாத அன்றாட பணியாகும் போது, உங்களைப் போன்றே எழுதும் இளம் படைப்பாளிகளைக் காணும் போது, அவர்களுடன் விவாதிக்கும் போது, வகுப்பின் பொருட்டு சில அத்தியாயங்களையாவது எழுதி அளிக்க நேரும் போது உங்கள் தயக்கம் விலகுகிறது, அச்சம் மறைகிறது. வகுப்பில் இணையும் போது நீங்கள் ஒரு சீரியஸான எழுத்தாளர் ஆகிறீர்கள்.
‘நாவல் எழுதக் கற்றுக் கொள்ளுங்கள்’ வகுப்பு குறித்த விபரங்களுக்கு 9790929153
Comments