மனிதர்கள் மிகுதியாக அன்பு காட்டுகிற, சிறிது கூட அன்பை நம்பாத ஒரு காலத்தில் வாழ்கிறோம். இந்த மாற்றங்களுடன் காதலைப் பற்றின குழப்பங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வளவு ‘முற்போக்கான’, தாராளமயமான சூழலில் தான் பரஸ்பர ஐயங்களும் பயங்களும் அதிகமாக உள்ளன; யாருக்கும் யார் மீதும் வெகுசீக்கிரமாக நம்பிக்கை வருகிறது, ஆனால் வெகுசீக்கிரமாக அவநம்பிக்கையும் ஏற்படுகிறது. இரண்டுக்கும் இடையே யாரை எப்படி நம்புவது என அஞ்சிக்கொண்டிருக்கிறோம். நம்மைப் பற்றி சொல்லப்படும் இதயபூர்வமாகத் தோன்றும் சொற்களுக்குள் ஒரு இதயம் துடிக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் ஹார்ட்டின்கள் இருக்கின்றன. “லவ்” என்று சொல்லைக் கேட்டு முன்பு மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கும். இன்று அதே மனதுக்குள் சருகிலைகள் உதிர்கின்றன. லவ் என்பது டிஷ்யு பேப்பரைப் போலாகிவிட்டதால் வாழ்தலே எடையற்றதாக இருக்கிறது; சதா ஒரு பதற்றம், யாராவது “உன்னை நேசிக்கிறேன்” என சொல்ல மாட்டார்களா எனும் ஏக்கம். நேசிக்கிறேன் எனும் சொல்லுக்கு “உன்னுடன் இருக்கிறேன்” எனும் பொருள் வந்துவிட்டது. இந்த சிக்கல்களைப் பற்றியே இந்நூல் பேசுகிறது. https://www.amazon.in/dp/B0FB65SPQ9