முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"நாவல் எழுதும் கலை" - விமர்சனம் - மா. அண்ணாமலை

 நாவல் எழுதும் கலை - ஆர்.அபிலாஷ் - எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing  | panuval.com

நூலனுபவம் (28)

தான் எடுத்துக்கொண்ட களத்தை முழுவதுமாக ஆராய்ந்து எழுதுவது அபிலாஷின் பாணி. நாவல் எழுதும் கலை நூலிலும் அதனையே செய்திருக்கிறார். நாவலாசிரியரின் மனநிலை, உளவியல், நாவலின் வகைகள், நாவலின் உத்திகள், பிரசுரம் என விரிவான தலைப்புகளுடன் எழுதியுள்ளார். நாவலின் வரலாற்றையும் நாவலினை எழுதும் போதும். எழுதிய பிறகும் ஒரு நாவலாசிரியர் அடையும் உளச்சிக்கல்கள் என விரிகிறது நூல். ஒரு நாவலாசிரியராக இருப்பதன் சாதகங்களை முதலில் பேசி இருக்கிறார். உண்மைதான் ஒரு படைப்பாளியாக தன் படைப்புக்குள் நுழையும் அவன் புற உலகின் சிடுக்குகளை கவனம் கொள்வதில்லை. தன் படைப்பின் சிக்கல்களை பேசுவதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறான். அதனாலயே மிகுந்த மனமகிழ்வும் மனத்துன்பமும் அடைகிறான். இம் மனஉணர்வுகள் ஒரு படைப்பாளியால் மட்டுமே அடைய முடிபவை. பிறகு வாசகன் அதன் பலனை அனுபவிக்கிறான்.
நாவலின் அடிப்படைகளாக காலம், சொல்லடுக்குகள், நம்பகத்தன்மையான வசனங்கள், எல்லாவற்றிலும் முதன்மையாக கதையின் உண்மைத்தன்மையின் இருக்க வேண்டும் என கூறுகிறார். நூல் முழுக்கவே ஆசிரியர் வலியுறுத்தும் செய்தி, எழுதுங்கள். அதன் மூலமே அக்கதையில் நீங்கள் திருத்தம் செய்ய ஏதாவது இருக்குமென்கிறார். அதேபோல் நாவலை எழுதிய பின்பு திருத்தம் செய்வது மிக முக்கியம் என்கிறார். அது நாவலில் உள்ள தேவையற்ற பிசிறுகளை வெளியேற்றும் என்கிறார்.
எனக்கு வியப்பளித்த விஷயம் நாவல் என்றால் கதை, அதனைக் கொண்டு விரியும் கதைகளும். இறுதியாக சுபம் என்றிருந்தேன். ஆனால் நாவல் என்பதன் சுவாரசியம் கதையில் இல்லை; சிறு சிறு சம்பவங்களை தகவல்களைக் கொண்டு விரித்து எழுதுவதில் உள்ளது என்று விளக்குகிறார். அதேபோன்று கதைக்கான மொழியே வேண்டுமென்கிறார்.
போலவே சிறு சிறு சம்பவங்களை ஒன்றிலிருந்து இன்னொன்று தூண்டுவதாய் அமையாமல் ஒவ்வொன்றுக்குள்ளும் ஆழமாய் உறைய வைப்பது நாவலாசிரியரின் பணி என்கிறார்.
நூலின் வியப்பான விஷயம் அபிலாஷ் தமிழ், ஆங்கிலம் என கலந்து கட்டி எண்ணற்ற நாவல்களை வாசித்திருப்பது. 'மோகமுள்' அவருக்குள் அதீத தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அவர் நூலில் அந் நாவலை சிலாகிப்பதைக் கொண்டு உணர முடிகிறது. ஆனால் பெருமாள் முருகனின் ஒரு நாவல் கூட இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமே.
அபிலாஷிடம் எனக்குள்ள பிரச்சனை அவர் நூல்களை இருமுறை வாசிக்க வைத்து விடுகிறார். ஒரு தரமான வாசிப்பின்பத்தை அனுபவிக்க அவை தேவைதான் போலும்.
என்னதான் நாவல்களைப் பற்றி, அதை எழுதுவதைப் பற்றி பேசினாலும் புத்தகத்தின் நீளம் சற்று அதிகமோ எனப்படுகிறது. கூடவே எழுத்தாளனின் ஞாபகம் மறதி இதில் நாவலாசிரியனின் ஞாபக மறதியாக படி எடுக்கிறது.
எப்படி ஆயினும் நாவல் எழுதுவோர் எத்தனிப்போர், எழுதியோர் என எல்லோருக்குமான ஒரு நூலாக ஆசிரியர் இதை படைத்திருக்கிறார். நூலின் இறுதியில் ஆசிரியர் சொல்லி இருப்பது நாவலாசிரியர் ஆகும் எல்லோருக்கும் பயன்படும். "இன்று நாம் செய்ய வேண்டியது சோம்பித் திரியாமல் தன்னொழுக்கத்துடன், ஊக்கத்துடன் தொடர்ச்சியாக எழுதுவதும் செயல்படுவதுமே; இன்று பலருக்கும் எழுத நேரமில்லை. ஏனென்றால் நேர மேலாண்மை செய்ய தெரியவில்லை அத்திறனையும் ஒரு இளம் நாவலாசிரியர் வளர்த்துக் கொண்டால் வெற்றி படிக்கட்டுகள் அவன் முன் புலப்படுவது நிச்சயம்."

நூல் : நாவல் எழுதும் கலை
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : எழுத்து பிரசுரம்
வகை : துறைசார் நூல்
பக்கங்கள் : 324

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...