பொதுவாக விஜய் தோன்றும் இடங்களில் பெண்கள் உணர்ச்சிப் பிரவாகமாக அவரை வரவேற்பதைக் காண்கிறோம். அரசு பெண்கள் அலுவலர்கள் கூட அவரைக் கண்டதும் வானுக்கும் பூமிக்கும் குதிப்பதாக சொல்லப்படுகிறது. தவெகவின் இன்புளவன்சர்களிலும் பெண்களே அதிகமாக தென்படுவதாக ஒரு தோற்றம் உண்டு. இது ஒருவேளை பெண்கள் அதிகமாக இம்முறை விஜய்க்கு வாக்களித்தார்களோ எனும் சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தியது. ஆனால் உண்மை மாறானது. இந்தியா டுடே இதைக் குறித்து பிரசுரித்த ஒரு தரவு அலசல் கட்டுரையைப் படித்தேன். அதில் அவர்கள் ஆண்கள் அதிகமாக வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கத் திரண்ட தொகுதிகளில் 49 இடங்களை தவெக வென்றதாகவும், திமுக 9 இடங்களை வென்றதாகவும், பெண்கள் அதிகமாகத் தோன்றிய தொகுதிகளில் திமுக அதிக இடங்களை (59) வென்றதாகவும் கூறியிருக்கிறார்கள். இதன் பொருள் பெண் வாக்காளர்கள் அதிகமாகத் திரண்ட போது விஜய்க்கு வாக்குகள் விழவில்லை என்பதல்ல, அவரால் திமுகவை நெருங்க மட்டுமே முடிந்திருக்கிறது (55-59).
இத்தரவின் படி விஜய்க்கு இவ்வளவு அதிகமான ஆண் வாக்காள ஆதரவா எனக் குழப்பம் ஏற்படுகிறது. பொதுவாக நம் கதையாடல்களில் பெண்கள் ஒரு நடிகர்-தலைவருக்கு அளிக்கும் ஆதரவே பிரதானப்படுத்தப்படும். எம்.ஜி.ஆர் மீது பெண்களுக்கு இருந்த பெரும் மயக்கம் குறித்து ஏராள்மான கதைகள் உண்டு. ஆனால் இங்கு தரவுகள் வேறு ஒரு தகவலைச் சொல்கின்றன. பெண்களில் கணிசமான விஜய் ரசிகைகள் உண்டு. ஆனால் வாக்கு என்று வந்தால் பெண்கள் மாற்றி வாக்களிக்கிறார்கள். ஒருவேளை விஜய்ண்ணா விஜய்ண்ணா என்று குதிக்கும் பெண்கள் கூட அவருக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதே போல, ஆண்கள் அவரிடம் என்ன மாதிரி "கவர்ச்சியைக்" கண்டு இவ்வளவு பலத்த ஆதரவை வாக்குச்சாவடிகளில் அள்ளி வழங்கினார்கள்? ஒருவேளை விஜய் ஒரு ஆம்பள சிலுக்குதானோ? ரொம்ப குழப்பமா இருக்கே....
கருத்துகள்