முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் வாசிக்க வேண்டும்? நூல் குறித்து இளவரசன் காந்தி

ஏன் வாசிக்க வேண்டும்? - ஆர்.அபிலாஷ்
 

நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்த ஒரு புத்தகத்தை வாங்குவதற்கு புத்தகக் கடைக்குச் செல்வொம். அங்கே  நுழைந்தவுடன் நாம் என்ன புத்தகத்தை வாங்க வேண்டும் என நினைத்தோமோ அந்தப் புத்தகத்தை மறக்க வைக்குமளவுக்கு இன்னும் நிறைய புத்தகங்கள், குறிப்பாக பல புதிய வெளியீடுகள் புத்தம் புதிய அட்டைப்படத்துடன் நம்மை வெகுவாக ஈர்க்கும். பின் அட்டையில் எழுதியுள்ள முன்னுரையின் ஒரு பத்தி அப்புத்தகத்தை வாங்கியே தீர வேண்டும் என இழுக்கும். அதைப் போலவே இன்னும் பல புத்தகங்கள்.

அதையெல்லாத்தையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவோம். ஆனால் புத்தகங்களை கடையில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசம் இப்போது கொஞ்சம் வற்றிப்போயிருக்கும்.

இன்னும் கொஞ்ச நேரம் கழித்துப் படிக்கலாம், இதோ ஆபிஸ் வேலையை முடித்துவிட்டுப் படிக்கலாம், இரவில் எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகப் படிக்கலாம், அதிகாலையில் எழுந்தால் நன்கு ஊன்றிப் படிக்கலாம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருப்போம்.
நம்மேல் நமக்கே ஒரு எரிச்சல் வரும். ஏன் நம்மால் படிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை, அப்படியே படித்தாலும் சில நிமிடங்கள் கூட ஏன் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை என பல கேள்விகள்.

இக்கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கிறது இப்புத்தகம்.

ரீடர்ஸ் ப்ளாக் என்றால் என்ன, நேரங்காலம் பார்க்காமல் நம்மை எப்படி வாசிப்புக்குத் தயார்ப்படுத்துவது, வேகமாய் வாசிப்பது எப்படி,
இலக்கிய வாசிப்பில் ஒரு வாசகனுக்கு ஏற்படும் சிக்கல்கள், அதற்கான தீர்வு,
தத்துவ வாசிப்பை எதிலிருந்துத் துவங்குவது, உளவியல் வாசிப்பு என்றால் அதன் வகைகள், அதற்கான நூல்களை வாசிக்கும் தன்மை,
வாசிப்பின் மற்ற உள்ளார்ந்த பிரச்சினைகளை எப்படி சரிபண்ணுவது, 

அவ்வளவு ஏன் கழிப்பறையில் கூட தீவிரமாக வாசிக்கும் மனநிலை என்ன என்பதையும் ஒரு அறிமுக வாசகன் முதல் தேர்ந்த வாசகர்கள் வரை அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், கேள்விகள் எல்லாவற்றிற்கும் முடிந்தளவுக்கு விலாவரியாக, எளிமையாக விளக்கியுள்ளார் அபிலாஷ்.

ஏன் வாசிக்க வேண்டும், எதையெல்லாம் வாசிக்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பதைப் பற்றிய புரிதல்களுக்கான நல்ல புத்தகம்.

நன்றி 

இளவரசன் காந்தி 

Abilash Chandran #ஏன்வாசிக்கவேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...