முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தர்ம அடியின் உளவியல் என்ன?




கவிஞர் பிரான்சிஸ் கிருபா கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மரணத்துடன் போராடும் ஒருவருக்கு உதவப் போய் கொலைப்பழியை சுமந்து பின்னர் விடுதலையான கதையை அறிந்திருப்பீர்கள். அதன் பின்னர் அவர் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தில் ஒரு கண் முழுதாய் வீங்கி மூடிய நிலையில் இருந்தது. அதைக் கண்ட போது நான் காவல்துறையினரே தாக்கி இருக்க வேண்டும் என எண்ணி மிகவும் கலங்கிப் போனேன். ஆனால் நந்தன் ஶ்ரீதரன் எழுதிய பேஸ்புக் பதிவில் கிருபாவைத் தாக்கியது பேருந்து நிலையத்தில் கூடிய பொதுமக்கள் தான் என தெரிய வந்தது. இதை ஒட்டியோ அல்லது மறைமுகமாக குறிப்பிட்டோ ராஜன்குறை கிருஷ்ணன் பேஸ்புக்கில் எழுதியிருந்த பதிவு முக்கியமானது.

தர்ம அடி விழைவு ஒரு தண்டிக்கும் மனப்பான்மை எனும் போக்கில் அவர் அவதானித்திருந்திருந்தார். இதையெல்லாம் யோசிக்க எனக்கு மற்றொரு கேள்வி எழுந்தது. ஒரு ஆவேசத்தில் ஒரு மக்கள் கூட்டம் ஒரு தனிமனிதனை வளைத்துப் போட்டு சாத்தும் போது அவர்களுக்கு அதில் ஒரு கிளர்ச்சி, இன்பம் இருக்கிறதா? ஒரு கிருபாவையோ பிள்ளை பிடிக்கிறவர்கள் என நம்பி மற்றொருவரையோ கும்பல் மொத்தும் போது அவர்கள் அவரைத் தான் அடிக்கிறார்களா அல்லது அவர் வழி தமக்குள் வெளிப்படாமல் தேங்கி நிற்கும் வன்முறை ஆற்றலுக்கு வடிகால் தேடுகிறார்களா?
சுமார் இருபது வயது வரை ஊரில், கிராமத்தில், கழித்து விட்டு சென்னை வந்த எனக்கு ஒரு விசயம் அந்நேரம் சென்னை மக்களிடம் வித்தியாசமாய் பட்டது. அது அங்கே சதா வெடிக்க காத்திருக்கும் அணுகுண்டு போல ஒரு ஆத்திரம் கனன்று கொண்டிருப்பது; சின்ன சந்தர்பம் கிடைத்தாலும் மக்கள் சதா வசை பொழிவது. சாலையில் இரு வண்டிகள் உரசிக் கொண்டால் போதும் அங்கேயே பிரேக் போட்டு ரெண்டு பேரும் தம் அத்தனை வேலைகளையும் மறந்து பரஸ்பரம் ஏசுவார்கள். சூளுரைப்பார்கள்; சவால் விடுப்பார்கள். ஆனால் ஒருத்தர் கூட இறங்கி வந்து கை வைக்க மாட்டார்கள். பார்த்து விட்டு கலையும் வாகனங்களும் தலையிடாது. ஆனால் என் ஊரில், மாறாக, மக்கள் கோபத்தில் பரஸ்பரம் கன்னத்தில் அறைவது, உதைப்பது, மூக்கை உடைப்பது, தெருவில் புழுதியில் புரண்டு அடிப்பது சாதாரணம். ஊரில் அனைவரும் வீரர்கள் என கூறவில்லை. அடிதடி பற்றி ரொம்ப கவலைப்பட மாட்டார்கள். ஒருவரை அறைவது ஒருவரை தோளை அணைப்பது போல ஒரு இயல்பான காரியம். என் அப்பா ஓமப்பொடி போல இருப்பார்; அவரே தெருவில் ஒரு நண்பரை அடித்திருக்கிறார் - நான் பிறப்பதற்கு முன்பு. அதன் பின்பு ஒரு சின்ன பிரச்சனையில் அவர் அடிவாங்கி விட்டு வந்திருக்கிறார். அவர் அப்போது வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் - அதற்காக, அடி கொடுப்பதிலும் வாங்குவதிலும் நாகரிகம் பார்க மாட்டார். ரெண்டு பேரும் இதை பெரிது படுத்திக் கொண்டு போலீஸ், ரவுடி என பஞ்சாயத்துக்கு அழைத்து வர மாட்டார்கள். ஆனால் நகரங்களில் நிலைமை வேறு (என் ஊரிலும் தான் தான் இப்போது.). இன்று வன்முறை நம் வாழ்க்கையையே கலைத்து விடுமோ எனும் அச்சம் எல்லாருக்குள்ளும் உள்ளது. இந்த நகர்ப்புற கார்ப்பரேட் காந்தியம் டவுன்கள், கிராமங்களில் கூட பரவி வருகிறது. ஆகையால், கோபம் தலைக்கு மேல் ஏறினால் ஏய் ஏய் என சீறிக் கொண்டு வாலைச் சுருட்டிக் கொண்டு போய் விடுகிறோம்.

இந்த அணுகுமுறை நம்மை வன்முறை வறட்சி கொண்டவர்களாக்குகிறது. செக்ஸுக்கு இணையாக மிகப்பெரிய கிளர்ச்சி தருவது அடிதடி. அது ஒரு உச்சந்தலைக்கு ஏறும் கிக்கை அளிக்கிறது. ஆனால் நேருக்கு நேர் மோதுவது அநாகரிகம் என இன்றைய கார்ப்பரேட் அரசியல் நமக்கு கற்றுத் தருகிறது. ஒவ்வொரு சகமனிதனும் ஒரு மனித வளம், ஒரு ஏணி, அவனை பயன்படுத்தி ஏறி வாழ்க்கையில் மேலே போக வேண்டும். ஆகையால் அனைவரிடமும் ஹி ஹி என சிரித்துக் கொண்டு அம்மாஞ்சியாய் வாழ்வதே நமது கதியாகி விட்டது. கும்பலோடு கை நீட்டி சிக்கினவனை சிதைப்பதே நமக்கு பாதுகாப்பானது. அப்போது நாம் மிக பாதுகாப்பாக இருக்கிறோம், அதிகபட்ச இன்பமும் கிடைக்கிறது, நமக்குள் அணைபோட்டு வைத்திருக்கும் குரோத ஆற்றலுக்கும் வடிகால் கிடைக்கிறது, செக்ஸ் உச்சகட்டம் போல ஒரு சுகம் வாய்க்கிறது.

நம் வாழ்க்கை அநீதிகள் நிறைந்தது எனும் பரவலான எண்ணமும் இன்று எல்லா மட்டங்களிலும் உள்ளது. காரணமற்ற அதிருப்தி இதனால் விளைகிறது. அநீதி யாரால் தோன்றுகிறது என யாரும் அறியோம். ஆக, மற்றமையாய் நாம் காணும் ஒருவர் - தாடி வளர்த்து அழுக்காய் ஆடை அணிந்து தெரிகிற ஒருவர் - மாட்டினால் அவரை நம் அத்தனை கோபங்களுக்கு இலாக்காக்கிறோம்.

இதை விட மேல் நன்கு தெரிந்தவருடன் சண்டை போட்டு தெருவில் கட்டி புரள்வது.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
similar to gang rape / group sex
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
I am not sure where you're getting your information, but great topic.
I needs to spend some time learning more or understanding more.
Thanks for wonderful info I was looking for this info for my mission.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...