முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசத்துரோகம்



தயாநிதி மாறன் பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராகப் பேசும் பாஜக கிறித்துவர்களை அகதிகளாக ஏற்க முடியாது என தம் தேர்தல் வாக்குறுதியில் கூறி விட்டு இப்போது அவர்களை சேர்த்துள்ளது பிரித்தாளும் சூழ்ச்சி என்றார். முதலில் இஸ்லாமியர்களை ஒழித்து விட்டு அடுத்து கிறித்துவர்களையும் நசுக்குவதும், அதன் பின் இந்தியாவை முழுமையாக ஒரு இந்து தேசமாக்குவதே அவர்களின் இலக்கு என சாடினார். இப்போது தமக்கு ஆதரவாக மசோதாவை இயற்றியுள்ள விதத்தை காணும் கிறித்துவ மக்கள் இதைசாத்தான் வேதம் ஓதுவதாகவேபார்ப்பார்கள் என்றார்.


இதைப் பற்றி ஒரு நண்பரிடன் உரையாடும் போது இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், குறிப்பாக விடுதலைக்கு முன்பான மூன்று பத்தாண்டுகளில், இந்துத்துவ கட்சிகள் நடந்து கொண்ட விதம் அவர்களின் இன்றைய நிலைப்பாட்டுடன் பொருந்திப் போகிறது என்றார். “புரியவில்லைஎன்றேன். அவர் விளக்கினார்
ஒத்துழையாமை இயக்கம் துவங்கி பல கிளர்ச்சிகளின் போது காந்திக்கு எதிராகவே இந்து மகாசபை உள்ளிட்ட இந்துத்துவ இயக்கங்கள் இருந்தன. அவர்கள் பங்கேற்கவில்லை என்று மட்டுமில்லை, அவர்கள் யு-டர்ன் எடுத்து ஆங்கிலேய அரசை ஆதரிக்கவும் கிளர்ச்சிகளை அடக்க ஆங்கிலேய அரசின் காவலர்களுக்கு துணையாகவும் நின்றனர். இதற்கு அவர்கள் அளித்த விளக்கம்காந்தியும் அவரது கட்சியினரும் இந்துப்பெரும்பான்மைக்கு எதிராக, சிறுபான்மை மதத்தவர்களுக்கு சார்பாக செயல்படுகிறார்கள், சுதந்திரம் கிடைத்தால் இந்த தேசத்தை அவர்கள் இஸ்லாமியர்களுக்கு தாரை வார்த்து விடுவார்கள்என்பது. இந்துக்களுக்கு அப்போது காந்தி மீது ஏற்பட்ட பெரு மதிப்பும் ஆகர்ஷமும் வலதுசாரிகளை கடுமையாய் அச்சுறுத்தியது. அவர்கள் செய்ய நினைத்ததை காந்தி தனதான பாணியில் பிரம்மாண்டமான அளவில் செய்தார். அத்தோடு அவர் சிறுபான்மை மதத்தவரையும் தன் அணியில் சேர்த்துக் கொண்டார். இந்து மகாசபையினர் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்களை திரட்ட நினைத்தால், அதே இந்துக்களை இந்த பிரிவினை இன்றியே காந்தி திரட்டினார். காந்தியின் இணக்க அரசியல், சமரசப் போக்கு, சமூகத்தில் அமைதியை விளைவிக்கும் என்பதைக் கண்ட இந்து மகாசபையினர் தமது செயல்திட்டம் தவிடு பொடியாகி விடும் என புரிந்து கொண்டனர். அப்போது தான் அவர்கள் ஆங்கிலேய அரசுடன் கைகோர்க்க முடிவு செய்தனர் (முழுக்க வேறு காரணங்களுக்காக பெரியாரும் அம்பேத்கரும் ஆங்கிலேய ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர் - அதையும் இதையும் குழப்பக் கூடாது).
 ஆங்கிலேய அரசின் செயல்திட்டமான பிரிவினை வன்முறையை முன்னெடுப்பதில் முஸ்லீம் லீக்குடன் இணைந்து செயல்பட்டது இந்துமகாசபையினர் தாம். இதனால் லட்சக்கணக்கான மக்கள் தம் மண்ணில் இருந்து பறித்தெறியப்பட்டனர, கொல்லப்பட்டனர், பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகி கடத்தி செல்லப்பட்டார்கள், குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டார்கள். இந்தியர்களின் மனத்தில் ஒருபோதும் ஆறாத ஆழமான அசு ஏற்பட்டது. ஆனால் இதே இந்துத்துவர்கள் தாம் இப்போது குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றும் போது பிரிவினை செய்து தேசத்தை இரண்டாக உடைத்தது காங்கிரஸ் என பழியை திருப்பி, இந்த பிரிவினையால் அதிகம் பாதிப்படைந்த கட்சி மீதே, போட்டனர். சாவார்க்கர் தொடர்ந்து பிரிவினைக்கு ஆதரவாகப் பேசி அதை கடுமையாக எதிர்த்தவர் காந்தியும் அவரது ஆதரவாளர்களுமே. ஒருவேளை தேசப்பிரிவினை நிகழ்ந்திராவிடில் இந்துத்துவாவின் எதிர்காலமே இந்தியாவில் காணமல் போயிருக்கும்.

இந்த வரலாற்றை வைத்தே நண்பர் சொன்னார்: இந்துத்துவர்கள் எப்போதும் தாம் சொல்வதற்கு நேரெதிராகவே செயல்படுவார்கள்; இரட்டை நாக்கு அவர்களின் ஆதார சுபாவம். அண்மையில்தேசத்துரோகம்எனும் சொல்லை மிக அதிகமாய் தம் விரோதிகள் மீது ஏவிய கட்சி பாஜக. ஆனால் வரலாற்றில் மோசமான தேசத்துரோகத்தை செய்தது அக்கட்சியின் தாய்க்கழகங்கள் தாம்இது வினோதமானது - இந்திய தேசம் விடுதலை அடைவதை ஏற்காத கட்சிகள் அன்றும் இருந்தன. ஆனால் அவர்கள் அதை நேர்மையாக ஒத்துக் கொண்டனர். ஆனால் பாஜக மட்டுமே மிகத்தீவிரமாய் இந்திய விடுதலைக்கு எதிராக செயல்பட்டு விட்டு இப்போது தொடர்ந்து தேச விடுதலைப் போராட்டத்துக்காக நற்பெயரை தட்டிப் போக முயல்கிறார்கள். கிறித்துவ மதமாற்றம் குறித்து மிகையான பிரச்சாரங்களை மேலெடுத்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, இப்போது யு-டர்ன் கிறித்துவர்கள் வெளிநாட்டில் ஒடுக்கப்பட்டால் அவர்களுக்கு இந்தியா புகலிடம் அளிக்கும் எனச் சொல்லி அவர்களை தடவிக் கொடுப்பது போல பாவனையும் பண்ணுகிறது. இதைத் தான் மாறன்சாத்தான் வேதம் ஓதுகிறதுஎன்றார்

தேசத்துரோகம் என்ற சொல்லின் வரலாற்றைப் பார்த்தோமானால் ஆங்கிலேய அரசு அதை பயன்படுத்திய விதத்துக்கும் இன்று பாஜகவினர் அதை கையாள்வதற்கும் ஒரு தொடர்பு உள்ளது: சிப்பாய் கிளர்ச்சி துவங்கி தொடர்ந்து தமக்கெதிராக கிளர்ந்தவர்கள் அனைவரையும் ஆங்கிலேய அரசு தேசத்துரோகியாகக் கண்டது. அப்போது தேசம் என்பது ஆங்கிலேய அரசு எனும் பொருள் கொண்டிருந்தது. நீங்கள் இந்தியாவுக்காக போராடினாலும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராடுவதால் அது தேசத்துக்கு எதிராக செயல்படுவதாகும் என ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அர்த்தப்படுத்தினார்கள். இன்று நாம் தேசப்பிதாக்களாக கொண்டாடும் பலரும் அன்று ஆங்கிலேய அரசுக்கு தேசத்துரோகிகள் தாம். அதன் பிறகு தேசபக்தியின் பொருள் சற்று விரிவடைந்தது. தேசத்தின் வளர்ச்சிடன், அமைதியுடன் இணங்கிப் போகிறவர்கள் (ஓரளவுக்கு காங்கிரசின் அயலுறவுக் கொள்கையுடன் ஒத்துப் போகிறவர்கள்) தேசப்பற்றாளர்களள் ஆனார்கள். இப்போது பாஜக தொடர்ந்து இரண்டாம் முறை பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தேசத்துரோகத்தின் பொருளே ஆங்கிலேய ஆட்சியில் இருந்தது போல ஆகி விட்டது.

 இன்று தேசம் = பாஜக = இந்துத்துவா. (இந்துத்துவா எனும் சொல்லை நேரடியாக பயன்படுத்தத் தயங்குவதால் பாஜக அதைஇந்துக்கள்எனச் சொல்லுகிறார்கள்) இன்று யார் பாஜகவின் கொள்கைகளை எதிர்த்தாலும் அவர்கள் தேசத்துரோகிகளே. தேசத்துரோகத்தின் பொருளை இவர்கள் இப்படி தலைகீழாக மாற்றி விட்டதால் அது அரசின் விமர்சகர்களை, எதிர்ப்பாளர்களை முழுக்க குழப்பி விட்டது. தம்மை எதிர்ப்பவர்களை இந்து மதத்தை, தேசத்தை எதிர்ப்பவர்கள் என பொய்ச்சாயம் பூசி பாஜக தாக்கும் போது, வழக்குகள் தொடுத்து ஜெயிலில் தள்ளும் போதுதேசத்துரோகிகளுக்குபெரும் குழப்பம் ஏற்படுகிறது. அவர்கள் வாயை மூடிக் கொண்டு திக்குத்தெரியாமல் திகைக்கிறார்கள். (இதை ராமாயணத்தில் ராமன் வாலியை பின்னிருந்து தாக்கிக் கொன்றதுடன் ஒப்பிடலாம்.) எதிர்காலத்தில் இந்து மதத்தை பின்பற்றாதவர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் எனும் சட்டமொன்றை பாஜக இயற்றும் என்பதே என் கணிப்பு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...