Skip to main content

Posts

Showing posts from July, 2025

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

Catharsis

புரவி இலக்கியக் கூடுகையின்போது ஶ்ரீனிவாசன் எனும் வாசகர் பேசினார். அவர் தன் வாசிப்பனுபவத்தைக் குறிப்பிடுகையில் "நிழல் பொம்மை" நாவல் தன் மனத்தை வெகுவாக பாதித்துவிட்டது என்றார். நாவலை வாசித்து முடித்தபோது தான் கழிப்பறைக்குச் சென்று தனிமையில் இருந்து கதையைப் பற்றி யோசித்ததாகவும் அப்போதுதான் முன்பு பணியாற்றிய நிறுவனம் குறித்து தனக்கிருந்த அகச்சிக்கல்கள் மறைந்து மனம் தெளிவானதாகவும், வெளியே வந்த சற்று நேரத்தில் தன் மனம் மீண்டும் சஞ்சலமுற்றதாகவும் சொன்னார். என்னை இந்த அனுபவப் பகிர்வு மிகவும் கவர்ந்தது. நான் கூட்டம் முடிந்ததும் அவரிடம் உரையாடினேன். அவர் சொல்ல வந்ததென்ன? அவர் சொன்னார், "நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் இருந்து விலகினேன். நீண்ட காலமாகப் பணியாற்றிய இடம் அது. என் மீது பொய்க்குற்றம் சாட்டி விசாரித்து வெளியேற்றினார்கள். எப்போதுமே அதை நினைக்கையில் கடுங்கோபம் வரும். பார்ப்பவர்களிடம் எல்லாம் அதைப் பற்றிச் சொல்லி நிறுவனத்தைத் திட்டுவேன். இந்நாவலைப் படித்தபின்னர்தான் என் கோபம் தணிந்தது. இப்போது அவர்கள் எனக்குச் செய்தது ஒன்றும் தவறில்லை என்று தோணுகிறது....

"புரவி கூடுகையில்" நிழல் பொம்மை

விழாக்கள் ஒரு பந்தாவுக்காகவும் சமூகமாக்கலுக்காகவும் பங்குபெற ஏற்றவை. அங்கு எழுத்தாளர்களுக்கு வேறெந்த படைப்பாக்கம் சார்ந்த பயனும் கிடைக்காது. ஆனால் புரவியைப் போன்ற கூட்டங்களோ எழுத்தாளர்களுக்கு ஆன்மீக ஊக்கம் அளிப்பவை. 30-40 பேர்கள் மட்டுமே வருவார்கள். ஒவ்வொருவரும் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு வருவார்கள். புத்தகத்தைப் பற்றி தம் கருத்தை வெளிப்படையாகச் சொல்வார்கள். முகஸ்துதி, வெற்றுப் பேச்சுக்கள் இல்லை. சிலர் விரிவாக ஆழமாக அலசுவார்கள். சற்றும் எதிர்பாராத ஒரு கண்ணோட்டத்தை, வாசிப்பை முன்வைப்பார்கள். கடந்த முறை "தாயைத்தின்னி" நாவலுக்கான கூட்டம் நடந்தபோது அப்படித்தான் இருந்தது. ஒரு புத்தகத்தைப் பற்றி முப்பதுக்கும் மேற்பட்ட மூளைகள் தம் கற்பனையால் 2 மணிநேரங்களாகப் புதியபுதிய களங்களைக் கண்டடைந்து விவாதித்து முன்னகர்வது வியப்பான அனுபவமாக இருந்தது. அலங்காரப் பேச்சுக் கூட்டங்களைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போன நான் அன்று உற்சாகமாகிப் போனேன். இலக்கியத்துக்கு பெருங்கூட்டம், படோடாபம், விளம்பரம், லாபியிங் ஆகிய விசயங்களைவிட தீவிரமான விவாதங்களும், முழுக்கமுழுக்க பிரதியைக் குறித்த வினாக்களும்...

டி.என்.ஏ - ஒருமுறை அழகி

  பம்பரத்தைச் சுற்றிவிட்டதைப் போல விர்ரென நின்றபடி ஓடும் திரைக்கதைதான் இப்படத்தின் வலிமை. இடைவேளைக்குப் பிறகு தண்ணீர் குடிக்கணும், பாத்ரூம் போகணும் எனும் நினைப்பை ஒவ்வொரு கணமும் மறக்கடித்து ஒட்டுமொத்தமாக ஒண்ணும் வேணாம் போ என உட்கார வைத்துவிடுகிறார்கள். அடுத்தடுத்த பரபரப்பான திகிலான திருப்பங்கள், பதற்றத்தின் எல்லைக்கே கொண்டு போகும்படி இழுத்துப்போகும் காட்சியமைப்புகள். அதன்பிறகு நிமிஷா சஜயனின் அபாரமான நடிப்பு. நிமிஷா இதன் துவக்கத்தில் மனநலப்பிறழ்வை கோமாளித்தனமாகக் காட்டும்போது ஏமாற்றம் ஏற்பட்டது. ஆனால் குழந்தை காணாமல் போனபிறகு அவரது நடிப்பு இன்னொரு தளத்துக்குப் போகிறது. ஒவ்வொரு நிலையிலும் ஒரு பெண்ணின் உடல்மொழியில் வரும் மாற்றங்களை அபாரமாக கண்ணாடிபோலப் பிரதிபலிக்கிறார். அவரது கண்கள், பளிச்சென்று சிரிப்புக்கு மலரும் முகம், சட்டென்ற சோர்வில் வாடும் மலரைப் போன்ற பாவனைகள், சின்னச்சின்ன மாற்றங்களை அடுத்தடுத்து காட்டும் பாங்கு - அசத்துகிறார். ஆனால் அதேநேரத்தில் "பார்ரா நான் நடிக்கிறேன்" எனும் மிகையும் உள்ளது. "உணர்ச்சிவசத்த அடக்கு, அது பக்கத்து தெருவில ஒரு தங்கச்சி தன் அண்ணனைக் ...

தக் லைப்

இவர்கள் குரல் வளையிலே மிதித்துக் கொல்லப்பார்த்த அளவுக்கு ஒன்று "தக் லைப்" மோசமான படமில்லை. கிட்டத்தட்ட திரிஷா வரும்வரை படத்தை நன்றாகவே எழுதியிருந்தார்கள். பகைவரின் மகனை வளர்த்தால் அவன் எதிர்காலத்தில் தன் பகையை உணர்ந்து தன்னை வளர்த்தவரைக் கொல்ல வந்தால் என்னவாகும் என்பதே ஒற்றைவரி. அதாவது "நாயகனில்" கேல்கர் எனும் ஒரு காவல் ஆய்வாளரை நாயக்கர் கொல்வார். அவரது மகனைத் தன் மகனைப் போல வளர்ப்பார். ஆனால் கடைசியில் அவன் கையாலே சுடப்பட்டு இறப்பார். "தக் லைப்" கேல்கரின் மகனுக்கும் நாயக்கருக்குமான உறவை இன்னொரு பின்னணியில் பேசுகிற கதை. யோசித்துப் பார்த்தால் இது சுவாரஸ்யமான வித்தியாசமான கதைதான். ஆனால் உப-கதைவரி ஒன்றையும் மணிரத்னம் எடுத்துக் கொள்கிறார். வளர்ப்பு மகனும் அப்பாவும் ஒரே பெண்ணை நேசிக்கிறார்கள். ஈடிபல் காம்பிளக்ஸ். பொதுவாக ராஜ்ஜியங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது பெண்களைக் கைப்பற்றுவது குறியீடாக மாறும். மணிரத்னம் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார். திரிஷாவின் பாத்திரமான இந்திராணி இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு அழிவதைச் சொல்கிறார். ஆனால் அப்போது கதை இந்திராணிய...

வரி பயங்கரவாதம்

  இரண்டு நாட்களுக்கு முன்னொரு செய்தி படித்தேன். பெங்களூரில் உள்ள சிறுவியாபாரிகள் (4-8 லட்சம் மாத வருமானம் சம்பாதிப்பவர்கள் என்று அரசு சொல்கிறது) ஆன்லைனில் பணம் வாங்க மறுத்து ரூபாய் நோட்டுக்குத் தாவுகிறார்கள். ஏன்? இந்த வருமான வரையறைக்குள் வருவோரிடம் அரசு அதிக வரி வசூலிக்கப் போவதாக ஒரு பேச்சு நிலவியதே காரணம். அரசுத் தரப்பில் இருந்து வரி "கறவை" நிபுணர்கள் நீங்க எங்க போய் ஒளிஞ்சாலும் வரியைப் பிடித்துக் கறக்காமல் விட மாட்டோம் என அதே செய்திக் கட்டுரையில் சொல்லியிருந்தார்கள். வங்கிக் கணக்கில் போட்டால்தானே வரி போடுவீர்கள், நாங்க வீட்டிலேயே பணமா வச்சுக்கிறோம் என வியாபாரிகள் நினைக்கிறார்கள். நேற்று மடிவாலாவில் உள்ள சந்தைக்குப் போயிருந்தபோது சில கடைக்காரர்கள் "அடுத்த வாரம் இருந்தா இந்த ஸ்கேனரைத் தர மாட்டோங்க. பணமா கொண்டு வாங்க என்றார்கள்." இந்த மோதல் போக்கு ஆர்வமூட்டக் கூடியது. சிறுவியாபாரிகள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. வியாபாரம் ஒன்றும் செழிக்கவில்லை. எந்த ரிஸ்கும் எடுக்காமல் பணத்தை வரியெனும் பெயரில் பிடுங்கும் அரசும் அமைச்சர்களும் மட்டுமே சொகுசாக இருக்...

கதைத்திருட்டும் நாவலும்

  கதைத்திருட்டு எப்படி நடக்கிறது என்று தீபா ஜானகிராமன் எழுதியிருந்தார். எனக்கு இதற்கு ஒரு காரணம் ஒரு கதையின் பாதிப்பே தெரியாமல் அதில் இருந்து முற்றிலும் புதிய கதையொன்றை உருவாக்குவது எப்படி என்று தெரியாததாலே என்று தோன்றியது. (திரைக்கதையில் இதை எப்படி செய்ய வேண்டும் என பாக்கியராஜ் தன் நூலில் சொல்லியிருப்பார்.) நான் என்னுடைய நாவல் எழுதும் வகுப்பில் பாத்திரங்களை உருவாக்குவது எப்படி என விளக்கும் போது இதை சொல்லிக் கொடுத்தேன். பாத்திர அமைப்புக்கும் பாத்திர இயல்புக்குமான வித்தியாசம் என்னவென்று விளக்கிக் கொண்டிருந்தேன். ஒருவர் வேலையில்லாத இளைஞர், இன்ன வயதுக்காரர், இன்ன வர்க்கம், சாதி, மதத்தை சேர்ந்தவர், இன்னவிதமான குடும்பப் பின்னணியைக் கொண்டவர், இப்படியான தோற்றம் கொண்டவர் எல்லாம் அவரது பாத்திர அமைப்புக்கு பொருந்தும். இதை ஒரு பாத்திரத்தின் வெளிக்கூடு என்று சொல்லலாம். இவற்றை பரிசீலித்தாலே கதை சட்டென நம் கதையில் வந்து விழுந்துவிடும். என்னிடம் வகுப்பில் ஏதாவது ஒரு தேசலான ஒற்றை வரியை தம் நாவலுக்காக கொண்டு வருவோரிடம் மேற்சொன்ன கேள்விகளை நான் கேட்டதும் ரத்தமும் சதையுமான ஒரு பாத்திரம் கண்முன் தோன்ற...

நாவலுக்குள் தத்துவார்த்தம்

  ஒரு நாவலுக்குள் ஒரு தத்துவார்த்த / உளவியல் / சமூகவியல் சரடு ஓடி அது முடிவில் நிறைவை எட்டி ஒரு புரிதலை அளிக்கலாம், ஆனால் அது படைப்பாவது அப்போதல்ல, அதற்கு நிகரான ஒரு எதிர்-சரடும் அதே தீவிரத்துடன் நாவலில் ஓடி முடிவில் முடிச்சிடும் போதே. “அன்னா கரெனினாவில்” இது உண்டு - அன்னாவின் திருமணத்துக்கு வெளியிலான பிறழ் உறவு தவறு எனும் ஒழுக்கவாதம் ஒரு சரடு எனில், அதை நியாயப்படுத்த பல சம்பவங்களை தல்ஸ்யாய் அடுக்குகிறார் எனில், அதற்கு நேர்மாறாக பிறழ்வுகளில், பைத்தியகாரத்தனங்களிலே உண்மை உள்ளது, அதுவே வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது எனும் எதிர்-சரடும் நாவலில் வலுவாக உண்டு. இதனால் தான் அன்னா சாகக்கூடாது, அவள் காதல் ஜெயிக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம், ஆனால் அது எப்படி சாத்தியமாகும் எனத் தெரியாமல் தவிக்கிறோம். அதாவது இரு தல்ஸ்தாய் குரல்கள் நாவலில் உண்டு - ஒன்று தல்ஸ்தாய் உடையது, மற்றொன்று தல்ஸ்தாயை முழுக்க மறுக்கும் மற்றொரு தல்ஸ்தோயுடையது. (இருவரில் நாம் பின்னவரையே அதிகம் விரும்புகிறோம்.) தல்ஸ்தாயின் நாவல்கள் ஒரு தெளிவில் அல்ல, தீர்க்கப்படாத கேள்விகளுடனே முடிகின்றன. அதனாலே அவை திரும்பத் திரும்ப விவாத...

பொறாமைப் பதிவு

  எனக்கு ஒரு விசயத்தில் சினிமாக்காரர்கள் மீது பொறாமை உண்டு - நாம் ஒரு நாவலை எழுதிவிட்டு அதைச் சநதைப்படுத்த தனியாக போராடிக்கொண்டு இருக்க வேண்டும். எதாவது இலக்கிய அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்தினாலும் சிறிய வட்டத்துக்குள்தான் அது நிகழும். ஆனால் ஒரு சிறிய படமென்றாலும் அதற்கான புரொமோஷனுக்கு 30-50 லட்சங்களையாவது அவர்கள் செலவிட்டு கலாட்டா, சன் டிவி என ஏகப்பட்ட சேனல்களில் தொடர்ச்சியாக பேட்டியளிக்கிறார்கள். அனேகமாக எல்லா பத்திரிகைகளும் அதைச் சந்தைப்படுத்த உதவுகின்றன. கூடுதலாகச் சமூகவலைதளங்களிலும் சினிமா செய்திகளுக்கு கவனம் அதிகமாகக் கிடைக்கும். கூடுதலாக சொச்சம் பணமிருந்தால் யுடியூப் வாயர்களையும் விலைக்கு வாங்கலாம். இந்தச் சந்தைப்படுத்தல் செலவை பட்ஜெட்டில் இன்று உட்படுத்துவதால் பி.ஆர்.ஓ மூலம் அடுத்தடுத்து ஒருங்கிணைத்து விடுகிறார்கள். கூடுதலாக, இசை வெளியீடும், பாடல்களும் பெரிய விளம்பரம் - எப்படியெல்லாம் எல்லார் காதிலும் நுழைந்துவிடும். இதெல்லாம் நடந்து படம் ஓடினால் இலக்கிய பத்திரிகைகளும் பாராட்டி எழுதுவார்கள். இலக்கியவாதிகள் கூட்டம் நடத்தி மாலை சூட்டுவார்கள். படம் ஓடினாலும் இல்லாவிட்டாலும் இய...

பாத்திர அமைப்பும் இயல்பும்

  என் வகுப்பில் பாத்திர அமைப்புக்கும் பாத்திர இயல்புக்குமான வித்தியாசம் என்னவென்று விளக்கிக் கொண்டிருந்தேன். ஒருவர் வேலையில்லாத இளைஞர், இன்ன வயதுக்காரர், இன்ன வர்க்கம், சாதி, மதத்தை சேர்ந்தவர், இன்னவிதமான குடும்பப் பின்னணியைக் கொண்டவர், இப்படியான தோற்றம் கொண்டவர் எல்லாம் அவரது பாத்திர அமைப்புக்கு பொருந்தும். இதை ஒரு பாத்திரத்தின் வெளிக்கூடு என்று சொல்லலாம். இவற்றை பரிசீலித்தாலே கதை சட்டென நம் கதையில் வந்து விழுந்துவிடும். என்னிடம் வகுப்பில் ஏதாவது ஒரு தேசலான ஒற்றை வரியை தம் நாவலுக்காக கொண்டு வருவோரிடம் மேற்சொன்ன கேள்விகளை நான் கேட்டதும் ரத்தமும் சதையுமான ஒரு பாத்திரம் கண்முன் தோன்றுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த வெளிக்கூடு கதை ஆகாது. பாத்திரத்தின் இயல்பு என்பது தான் கதையின் மைய விசை. இது அப்பாத்திரத்தை செலுத்தும் தேவை, நோக்கம் என்ன என்பதுடன் பின்னிப் பிணைந்ததாக இருக்க வேண்டும்.

விருப்பமும் தேவையும்

  ஒரு புனைவில் வரும் பாத்திரம் தத்ரூபமாக மாற எழுத்தாளர் அதன் பின்னணியை மட்டும் மாற்றினால் போதாது, விருப்பத்தையும் சற்றே மாற்ற வேண்டும். தேவை அப்படியே இருக்கலாம். வேலை தேடிச் செல்பவரின் தன்னறிதலே தேவை, ஆனால் விருப்பம் என்பது வேலையில் முன்னேற்றம், நிறைய பணம் சம்பாதிப்பது, நீதியைப் பெறுவது, உயிரைக் காப்பாற்றுவது, காதலை அடைவது, சூழ்ச்சியில் இருந்து தன்னையோ பிறரையோ பாதுகாப்பது, இயற்கை சீற்றத்தில் இருந்து தப்பிப்பது என எண்ணற்ற வகைகளில் இருக்கலாம். அது ஒரு கொலை செய்வது, நல்ல சாப்பாடு சாப்பிடுவது, உடலுறவுக்காக ஒரு இடம் தேடுவது என மிக சாதாரணமாக கூட இருக்கலாம். இந்த பட்டியல் மிக நீண்டது. ஒவ்வொரு நோக்கத்தினுள்ளும் பல மாறுபாடுகள் இருக்க முடியும். நோக்கத்துடன் பொருந்தக் கூடிய வாழ்க்கைப்பின்னணி, வர்க்கம், சாதி, மதம், வயது ஆகியவற்றை திட்டமிட்டு அமைக்க வேண்டும். அப்போதே முப்பரிமாணத் தன்மை கதைக்கு கிடைக்கும். புனைவெழுதும் உத்திகளைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோர் என் வகுப்பில் இணையலாம். தொடர்புக்கு 9790929153.

நேர்கோடற்ற கதை வடிவம்

  மிலன் குந்தெராவின் பல நாவல்கள் ஒரு திவிரமான நிகழ்ச்சியுடன் துவங்கி பல்வேறு குறுநிகழ்வுகளால் பின்னப்பட்டு வளர்த்தெடுக்கப்படும் - வாழ்வின் சாரமற்ற, காற்றைப் போன்ற தன்மையை (அவர் மொழியில் the unbearable lightness of being) சித்தரிப்பதிலேயே குந்தெராவின் ஆர்வம் இருக்கும். கதையில் பாதியில் தொங்க விட்டு விட்டு அவர் பாட்டுக்கு ஒரு விவாதத்துக்குள் சென்று விடுவார், அலுப்பேற்படாது. நகுலன் மற்றொரு உதாரணம். இது ஏன் உறுத்துவதில்லை, சுவாரஸ்யமாய் இருக்கிறதென்றால் முதல் அத்தியாயத்தில் இருந்தே இந்த பாணியை அவர்கள் நிறுவி விடுகிறார்கள். மரியா வர்க்லாஸ் லோசாவின் Aunt Julia and the Scriptwriter நாவலில் ஒரு அத்தியாயம் கதைசொல்லிக்கு தன் அத்தையுடன் ஏற்படும் காதல் உறவு எப்படியான திருப்பங்களை எடுக்கிறது என வருமானால், அதற்கு அடுத்த அத்தியாயத்தில் ஒரு சீரியல் எழுத்தாளரின் கதை அத்தியாயங்கள் வரும். இப்படி அத்தியாயங்கள் மாறி மாறி வரும். ஒரு அத்தியாயத்துக்கும் மற்றொன்றுக்கும் சம்மந்தமில்லை என்பது மட்டுமல்ல, சீரியல் எழுத்தாளரின் கதைகளுக்கு இடையில் கூட ஒரு பொருத்தப்பாடு இருக்காது, அவை ஒரு நகரத்தில், பெரும்பாலும் வி...

காலமும் நாவலும்

  காலம் இல்லாமல் கதை சாத்தியமா? இ.எம். பாஸ்டர் சொல்வது போல காலத்துக்கு வெளியே கதை சாத்தியமில்லை தான். கதை என்பதே காரண-விளைவு சங்கிலியில் தோன்றும் ஒரு இடையூறினால், அதனால் ஏற்படும் வீழ்ச்சியினால் தோன்றுவது எனலாம். ஒரு சிறந்த ஓவியன் ஒரு சிறந்த ஓவியத்தை வரைய முயல்கிறான். வரைந்தும் விடுகிறான். காரணம் - முயற்சி; விளைவு - ஓவியம். இதில் கதையே இல்லை. ஆனால் அவனால் எவ்வளவு முயன்றும் ஒரு சிறந்த ஓவியத்தை தீட்ட முடியவில்லை எனும் போதே அது கதையாகிறது. காரணத்துக்கும் விளைவுக்கும் இடையே ஒரு தடை வருகிறது; இந்த தடை ஒரு சுபாவ பிழையினால், தவறான புரிதலினால், கோளாறான பார்வையால் (துன்பியல் வழு) வருகிறது எனும் போது இக்கதைக்கு ஆழம் கிடைக்கிறது; வாசகர்கள் உணர்வுரீதியாக கதையுடன் ஒன்றுகிறார்கள். தன் சிக்கல் என்னவென பாத்திரம் புரிந்து கொள்ளும் போது (அறிந்தேற்றம்) காலம் தாழ்ந்து விடுகிறது, ஆனால் இப்போது அவனுடைய வீழ்ச்சி இன்னும் மகத்தானதாகிறது என்கிறார் அரிஸ்டாட்டில். இந்த கதையின் வளர்ச்சியானது காலம் இல்லாமல் சாத்தியமில்லை. இது பிரதான பாத்திரத்தின் வாழ்க்கையின் வழியாகவே காட்டப்பட வேண்டும் என்பதால் அவன் (அல்லது அவள...

நாவலை சுவாரஸ்யமாக்குவது

  ஜெயமோகனின் பெரும்பாலான எதார்த்த நாவல்கள் படிக்க சுவாரஸ்யமானவை, இரண்டு மூன்று முறைகள் மீளப் படித்தாலும் அலுக்காதவை; அதற்குக் காரணம் அவரது மொழியோ விவரணையோ மட்டுமல்ல அல்ல, மாறாக அவரது வடிவ நேர்த்தியே. அவருடைய எந்த 300 பக்கங்களுக்கு உட்பட்ட நாவலை எடுத்துக் கொண்டாலும் கதை முதல் சில அத்தியாயங்களுக்குள் ஒரு தீவிரமான சம்பவத்துடன் ஆரம்பித்து வேகமெடுத்து பிறகு நிலைகொண்டு பல விசயங்களில் லயித்து, சிக்கல்களை வளர்த்து இறுதியில் மீண்டும் தீவிரமாகி ஆடிக்களைத்து பொட்டில் அடித்தாற் போல ஒரு முடிவுக்கு வரும். “ஏழாம் உலகம்”, “ரப்பர்”, “காடு” போன்றவற்றை உதாரணமாகக் காட்டலாம். இந்நாவல்களின் கிளைமேக்ஸ் காட்சிகள் மறக்க முடியாதவை! இக்காட்சிகள் - ஒரு மரணம், துரோகம், நியாயமா அநியாயமா என வரையறுக்க முடியாதபடியான ஒரு தண்டனை என - நாவலின் துவக்கத்தில் உள்ள அதே சிக்கல், தீவிரம், நாடகீயத்துடன் இருக்கும்; உணர்வுரீதியாக ஒரு அதிர்ச்சியை, வலியை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். இதற்கு மேல் என்ன என யோசிக்க வைக்கும். அதே போல ஒவ்வொரு அத்தியாயமும் சமநிலையுடன், வேகம் குன்றாமல், நாவலின் பிரதான சிக்கலில் இருந்து பிறழாமல் இருக்கு...

Writer's block

நாவல் எழுதுவது கடும் நெருக்கடிக்கு ஆளாக்கும் ஒரு சவாலும் தான். அதாவது எழுதும் அனுபவம் அல்ல, எழுதுவதற்கு முன்பும் பின்புமான நேரம் நாவலைக் குறித்து கவலையுறுவது, யோசிப்பது, பரிசீலிப்பது, அஞ்சுவது என. சிலர் இந்த நெருக்கடி தாளாமலே எழுதுவதை தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பார்கள். Writer’s block எனப்படும் மனத்தடைகள் ஏற்படும் போது இன்னும் அவஸ்தையாகி விடும். நான் ஒரு நாவலை எழுதும் போது பகல் வேளைகளில் மோசமான மனநிலையில் இருப்பேன். யார் மாட்டினாலும் கடித்து துப்பலாம் என நினைப்பேன். வேலைக்கு செல்லும் போது அங்கு கவனம் சிதற, வேறு விசயங்களில் ஈடுபட முடியும் என்பதால் உணர்ச்சி வடிகால்கள் இருக்கும். ஆனால் வீட்டிலோ என்னருகே இருப்பவர்கள் பாடு திண்டாட்டமே. இரவில் ஒன்றிரண்டு மணிநேரங்கள் நாவலில் வேலை பார்த்த பின் நிம்மதியாகி இனிமை திரும்பி விடும். அடுத்த நாள் விடிந்ததும் நாவல் குறித்த கவலைகள் ஆரம்பிக்கும். இப்படி ஒவ்வொரு நாவலாசிரியனுக்கும் அவனுக்கான மனச்சிக்கல்கள் எழுத்து சார்ந்து இருக்கும். ஆகையால் எந்தளவுக்கு இது மகத்தான அனுபவமோ அந்தளவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை சீரழிக்கும் அனுபவமும் தான். நான் பல்கலையில் நாவல் ...

நாவலை வடிவமைப்பது

  80 பக்க சுமாருக்கு வரும் ஒரு திரைக்கதையை செதுக்கவே மூன்று மாதங்களுக்கு மேலாக விவாதிக்கிறார்கள். ஒரு வருடம் போல எடுத்துக் கொண்டு திருத்தித் திருத்தி எழுதுகிறவர்கள் உண்டு. எனில் 300 பக்க நாவலுக்கு எவ்வளவு தயாரிப்புகள், உள்-விவாதங்கள் தேவைப்படும்? அசோகமித்திரனின் “தண்ணீர்” நாவலில் சில பக்கங்களே வரும் ஒரு மாமியின் எளிய பத்திரம் கூட நாவலின் கிளைமேக்ஸுக்கு அவசியம் - சாயா எடுக்கப் போகும் முடிவென்ன எனும் கேள்விக்கு செறிவு கூட்டுவதாக இருக்கும் - எனும் போது சின்னச்சின்ன விசயங்களைக் கூட அவ்வளவு கவனமாய் சிந்தித்து உள்ளே பொருத்த வேண்டும். இந்த நேர்த்தி சிலருக்கு இயல்பாகவும் சிலருக்கு அனுபவரீதியாகவும் அமைகிறது எனப் பார்க்கிறேன். ஆனால் கதை எழுதியே பழகாத ஒருவருக்கு இது எப்படி சாத்தியமாகும்? எல்லாராலும் ஒரு நாவலாவது எழுத முடியும் என்பது சரியா? சரி தான் - சில முதல் நாவல்களில் வடிவ ரீதியாகவே பல விசயங்கள் சரியாக அமைந்து விடுவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கிரியேட்டிவ் எடிட்டர் இருந்தால் சில எளிய பிழைகளைக் கண்டுகொண்டு திருத்தி எழுதி இன்னும் செறிவுபடுத்த முடியும். உங்கள் நாவலை எப்படி எழுதுவது, எப்படி வட...

Focalization

  “அவன் தன் வெள்ளைப் புரவி மீதிருந்து குன்றின் கீழ் பெருங்கூட்டமாய் மேயும் ஆநிரைகளை பார்வையிட்டான். அவற்றுக்கு அப்பால் சிவப்பாய் வளைந்து ஓடிய நெடிய ஆற்றின் மீது சூரிய ஒளி பட்டுத்தெறிக்கும் பாங்கு ஒரு ரத்தம் தோய்ந்த, மெல்ல நடுங்கும் கூரிய வாளைப் போலத் தோன்றியது.” இது second personஇல் ஒரு வீரனின் கண்ணோட்டத்தில் விரியும் காட்சி. இதன் மத்தியில் நிச்சயமாய் அந்த வீரனின் இளமைக்காலத்தைப் பற்றின விவரணை வந்தால் உறுத்தலாக இருக்கும் தான், ஆனால் அத்தியாயங்களுக்கு இடையே இந்த கதைகூறல் நோக்கு மாறிமாறி வரலாம் - தல்ஸ்தாயின் “அன்னா கரெனினாவில்” இந்த second person focalization பல இடங்களில் வரும், ஆனால் அவ்வப்போது தல்ஸ்தாயும் உள்ளே வந்து தன் பார்வையை வைப்பார், அது பெரிதாய் உறுத்தாமல் அவர் சமாளித்திருப்பார். கதையை யார் கண்ணோட்டத்தில் சொல்வது என்பது ஒரு கலை. அதை என்னிடம் இருந்து கற்றுக்கொள்ள என் ஆன்லைன் நாவல் வகுப்பில் இணையுங்கள். தொடர்புக்கு 9790929153.

துன்பியல் நாவல்களை எழுதுவது

துன்பியல் வடிவத்தில் தஸ்தாவஸ்கியின் பெரும்பாலான நாவல்கள் வீழ்ச்சியின் விளிம்பில் நாயகனைக் கொண்டு போய் விட்டு அவன் தன் குற்றத்தை உணர வாய்ப்பளித்து அவனைக் காப்பாற்றி விடக் கூடியவை. “குற்றமும் தண்டனையும்” இதற்கு சிறந்த உதாரணம் - ரஸ்கோல்நிக்கோவ் தன் முன் நிகழ்கிற சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை, அதனால் ஏற்படும் அநீதிகளுக்கு தீர்வு என்ன என்று யோசிக்கிறான். பணம் படைத்த கெட்டவர்களை அழித்தால் என்ன என்று யோசிக்கிறான்? அவன் களங்கமற்ற, லட்சியவாத இளைஞனே. அதுவே அவனுடைய உயர்ந்த குணம். (அதுவே அவன் வீழ்ச்சியடையும் போது நமக்கு அவன் மீது நமக்கு பச்சாதாபம் தோன்றக் காரணம்.) ஆனால் அவனுடைய வாழ்க்கைப் பார்வையின் பிறழ்வு அவனை வீழ்ச்சிக்கு இட்டு செல்கிறது. அதே நேரம் சோனியா எனும் பதின்வயது பாலியல் தொழிலாளியின் கருணை மிக்க சுபாவம் அவனை மீட்கிறது, தன்னுடைய துன்பியல் வழுவை உணர்ந்து அவன் தன்னை காவல் துறையிடம் ஒப்புக்கொடுக்கிறான்; தான் செய்த கொலையைப் பற்றி வாக்குமூலம் அளித்து தன் குற்றவுணர்வில் இருந்து மீள்வதற்காக ஒரு புனித பயணம் போல சைபீரிய சிறைக்கு செல்கிறான். அத்துடன் நாவல் முடிகிறது. நாவலின் நுணுக்கங்களைத் தெரிந்த...

இங்கிலாந்தின் Bazballஐ முறியடிக்கும் வியூகம்

  இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடும் பாணி 50 ஓவர் ஆட்டத்துக்கு உரியது. நான் மட்டையாட்டத்தைச் சொல்லவில்லை. வியூகத்தைச் சொல்கிறேன். தட்டையான ஆடுதளத்தில் ஐம்பது ஓவர் போட்டியை வெல்ல சிறந்த வழி இரண்டாவதாக மட்டையாடுவதுதான். ஸ்டோக்ஸும் அதனால்தான் பெரும்பாலும் முதலில் பந்துவீசவே விரும்புகிறார். ஆடுதளம் மிகத் தட்டையாக இருக்கும். ஆனாலும் அவருக்கு கவலையில்லை. ஏனென்றால் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்காக அவர் மெனெக்கெடப் போவதில்லை. இன்றைய மட்டையாளர்கள் எப்படி ஆடினாலும் ஒன்றரை - இரண்டு நாட்களுக்கு மேல் ஆடப் போவதில்லை. அதனால் ஸ்டோக்ஸ் அவர்களது ரன் ரேட்டை மட்டுமே கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்களைக் கேட்கிறார். இப்போது நிகழ்ந்து வரும் போட்டித்தொடரில் முதல் டெஸ்டில் (ஹெடிங்லி) இந்தியா முதலில் மட்டையாடி நானூற்று சொச்சம் ரன்களை அடித்தாலும் அவர்களது ரன்ரேட் 4தான். ஆனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆடியபோது 4.5 ரன்ரேட்டில் ஆடி அந்த ஸ்கோருக்கு நெருங்கி வந்தார்கள். அடுத்து இந்தியா மட்டையாடியபோது ஸ்டோக்ஸ் இந்தியாவின் ரன் ரேட்டைக் குறைக்கவே பிரயத்தனப்பட்டார், விக்கெட் எடுக்க அல்ல. குறைநீளத்தில், காலுக்கு ...