காலம் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் ஒரு மழை என்று நவீன ஜென் கவிதையொன்று சொல்லும்: "மழை பெய்கிறது மழை பெய்கிறது மழை பெய்கிறது" காலத்தில் மனிதர்கள் காணாமல் போகிறார்கள். அவர்களுக்கு ஆசுவாசம் வேண்டுமெனில் அதற்கு ஒரு துவக்கமும் முடிவும் வேண்டும். புத்தாண்டு எனும் கருத்தாக்கம் காலத்தை நிறுத்தி ஆசுவாசிக்க உதவுகிறது. நம்மை காலத்தில் உணர நம் ஈகோவுக்கு அதில் ஒரு இடம் அளிக்க புத்தாண்டு உதவுகிறது. அதனாலே புத்தாண்டின்போது நம்மைப் புதிதாக உணர்கிறோம் - காலத்தை அல்ல. நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! மிகக் குறைவான துன்பத்தையும் சற்று அதிக நிறைவையும் 2026 நமக்குத் தரட்டும்.