Skip to main content

Posts

Showing posts from May, 2016

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சில நிமிட சிங்கப்பூர்

இன்று மதியம் அடையார் நோக்கி சென்று பைக்கில் கொண்டிருந்தேன். சாலை கிட்டத்தட்ட காலி. சின்னமலை சிகனலில் வழக்கமாய் வாகனங்கள் இரண்டு கிளைகளில் இருந்து ஒரே நேரம் மோதுவது போய் பாய்வார்கள். இன்று ஒரு போக்குவரத்து காவலர் மெயின் கிண்டியில் இருந்து வருகிற வாகனங்களை தடுத்தி நிறுத்தி என்னை போக அனுமதித்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது. எப்போதும் ரெண்டு பக்கத்தில் இருந்து சாலையில் பாய்கிற பொதுமக்கள், இடம் வலம் என கண்டமேனிக்கு திரும்பும் பைக்குகள் பற்றி அஞ்சிக் கொண்டே ஓட்டுவேன். இன்று யாருமே குறுக்கிட வில்லை. குறிப்பாய் அண்ணா பல்கலைக்கழக சிக்னலில் சாலை குறுக்கே பாய தயாராக தற்கொலை படை போல நிற்கும் ஐம்பது பேரை யாரோ ஒருவர் தடுத்து நிறுத்தி வைத்திருந்தார். அவர்களும் பொறுமையாய் நின்றிருந்தனர். அப்போது தான் எனக்கு தோன்றியது. என்ன இவ்வளவு ஒழுங்கது, ஒரே நாளில் நம் நாடு சிங்கப்பூர் ஆகி விட்டதா?

அப்படி ஒன்றும் இருக்காதே?

வா.மணிகண்டனின் சமீபத்தைய பதிவில் இருந்து…. “ மூன்றாம் நதி நாவலை எழுதி முடித்தவுடன் மகேஷூக்கு அனுப்பி வைத்திருந்தேன் . அவர் வாசித்துவிட்டு ‘ அபிலாஷ் , விநாயகமுருகன் , செல்லமுத்து குப்புசாமி எழுதுகிற நாவலை எல்லாம் படிக்கணும்ன்னு ஆசை .. ஆனா அது சாத்தியமேயில்லை ’ என்றார் . விழியிழந்தோர் வாசிப்பதற்கு தோதான வடிவங்களில் தமிழில் எந்தப் புத்தகமும் வெளிவருவதில்லை என்பதுதான் காரணம் . மகேஷ் வருத்தப்பட்டார் . ”

நினைவுத்திறனும் இலக்கியமும்

சினிமாவில் ஹெலன் அபிலாஷ் சார் .   வணக்கம் , எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம் . இது சிறுபிள்ளைத் தனமான சந்தேகமோ என்றெனக்கு தோன்றியதால் , உங்களிடம் இதைப் பற்றி கேட்டதேயில்லை . இதற்கு கொஞ்சம் விரிவான பதிலெழுதுங்களேன் . நான் இப்போதெல்லாம் நிறைய வாசிக்கிறேன் . படிக்கும் போது எல்லா புத்தகங்களுமே ஆர்வமாக , சுவாரஸ்யமாக இருக்கின்றன . ஆனால் சில மாதங்களுக்கு முன்போ , அல்லது போன வருடமோ வாசித்த ஒரு புத்தகத்திலிருந்து எதாவது சம்பவங்களையோ , தகவல்களையோ நினைவு படுத்திப் பார்த்தோமேயானால் , துல்லியமாக நினைவு படுத்த முடியவில்லை . அவை மேலோட்டமாக தான் நினைவில் இருக்கின்றன . நிறைய மறந்தே போய்விடுகிறது .

அந்த கடைசி வரி என் அத்தனை கேள்விகளையும் காலி பண்ணிவிட்டது - பூங்குழலி

-     (பூங்குழலி என்ற புனைப்பெயரில் கொண்ட வாசகி ஒருவர் எனது “கதை முடிவுக்கு வந்து விட்டீர்கள்” நாவலுக்கு எழுதிய விமர்சனம் இது. அவரது மின்னஞ்சலை அவரது அனுமதி பெற்று இங்கு பிரசுரிக்கிறேன்) இனி அவரது sparkling விமர்சனம்: ”நாவலின் இறுதி வரி “ உங்களுக்கு மூன்று மாதங்களுக்கு விடுப்பு அளிக்கிறோம் “ – அட்டகாசம் அபிலாஷ் ! இதில் அத்தனை   Power-play- யும் அடங்கிவிட்டது. எனக்கு ஆரம்பிதிலேர்ந்து ஒரு கோபம் ! கதாநாயகன் எதற்கு மனச்சிதைவோடு   Depict  ஆக வேண்டும் என்று ?   but,  இந்த கடைசி வரி என் அத்தனை கேள்விகளையும் காலி பண்ணிவிட்டது.   Bravo!

ஒரு விளக்கம்

  நான் ஜெயமோகனை பகடி செய்யத் தான் அக்கட்டுரை எழுதினேனா என ஒரு நண்பர் சாட்டில் வந்து கேட்கிறார். எனக்கு அப்படியான நோக்கம் ஏதும் இல்லை. (சில நேரம் கைமீறி சற்று கிண்டல் என் எழுத்தில் நுழைந்து விடுகிறது. அதற்கு துர்நோக்கம் ஒன்றுமில்லை.) புத்தக பரிந்துரைகளை எதார்த்தமாய் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா. நாம் நீண்ட காலமாய் அப்பழுக்கற்ற மதிப்பீட்டின் அடிப்படையில் பட்டியல்கள் உருவாகின்றன என நம்பி வருகிறோம். அதனால் இந்த எழுத்தாளரை ஏன் குறிப்பிடவில்லை, இவரை எப்படி பரிந்துரைக்கலாம் என சர்ச்சிக்கிறோம். எழுத்தாளர்கள் துர்பலமான மனம் கொண்டவர்கள். உணர்ச்சி அலையில் தத்தளிப்பவர்கள். அவர்களால் புத்தகங்களை தர்க்கரீதியாய் கராறாய் மதிப்பிட இயலாது. ஒரு எழுத்தாளனின் விருப்புவெறுப்புகள் அவனது பரிந்துரைகள், பட்டியல்கள், மதிப்புரைகளில் இருந்தே தீரும்.

புரட்சி வந்து விட்டது

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கறுப்பர்கள் போராட்டம் நடத்தியது நினைவிருக்கும். அப்போது அதை அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான புரட்சி என உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் எழுதினார். அமெரிக்கா அதற்கு பின் ஏகாதிபத்தியத்தை வேறறுத்து சோஷலிஸ நாடானதா என்பதை நான் தினமும் டிவியிலும் தினசரிகளிலும் தேடி வருகிறேன். மீடியா என்பது முதலாளித்துவ கூலிகளின் கூடாரம் அல்லவா. அவர்கள் நான் தேடும் அந்த செய்தியை தவிர வேறு எல்லா தறுதலை மேட்டர்களையும் வெளியிடுகிறார்கள்.  ஆறு வருடங்களுக்கு முன்பு துனிசியா, லிபியா, சிரியாவில் நடந்த போராட்டங்களையும் அரேபிய வசந்தம் என தோழர்கள் கொண்டாடினார்கள். அரபு தேசம் முழுக்க புரட்சி மலர்ந்து விட்டது என்றார்கள். ஆனால் அமெரிக்கா அப்படியே தான் இருக்கிறது. ”புரட்சி மலர்ந்த” நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. மீடியா அந்நாடுகள் இப்போது ”அரேபிய பனிக்காலத்தில்” இருப்பதாய் கூறுகின்றன.

பட்டியல் சர்ச்சைகளும் ஜெயமோகனின் மன இயல்பும்

தமிழ் ஹிந்துவில் ஜெயமோகன் தன்னை கவர்ந்துள்ள சமகால புத்தகங்களின் ஒரு பட்டியலை தந்துள்ளார். வழக்கம் போல் முகநூலில் அவரை வறுத்தெடுக்க துவங்கி விட்டார்கள். யமுனா ராஜேந்திரன் இரா.முருகவேள், லஷ்மி சரவணகுமார் பெயரையெல்லாம் குறிப்பிட்டு ஜெயமோகன் எப்படி இவர்களை தவிர்த்து ஜெயமோகன் பட்டியல் வெளியிடலாம் என சாடி உள்ளார். தொடர்ந்து ஜெயமோகனின் இந்துத்துவா, ஐ.எஸ்.ஐ.எஸ், ஏகாதிபத்திய, பாசிஸ முகங்கள் எல்லாம் இப்பட்டியல் மூலம் பட்டவர்த்தமாகி இருப்பதாய் குறிப்பிடுகிறார். பட்டியல்கள் மீதான எத்தனையாவது சர்ச்சை இது என யாருக்காவது கணக்கு இருக்கிறதா? அந்த கணக்கே ஒரு பெரும் பட்டியலாய் நீளும். எனக்கு பட்டியல் இடுவதிலோ பட்டியலை ஒட்டி வாசிப்பதிலோ நம்பிக்கையில்லை. அதை விளக்கி சில தனி கட்டுரைகளே எழுதியிருக்கிறேன். இப்போது எனக்கு வேறொரு விசயம் தோன்றுகிறது. ஒருவேளை நாம் பட்டியல்களிடம் இருந்து மிகையாய் எதிர்பார்க்கிறோமோ?

வாசக சாலை கருத்தரங்கில் என் பேச்சு

வரும் சனிக்கிழமை எக்மோர் இக்ஸா மையத்தில் நடக்கும் கூட்டத்தில் நான் சமகால இலக்கியத்தில் ஆண் மொழி பற்றி பேசுகிறேன். லஷ்மி சரவணகுமார், இமையம், என்.டி ராஜ்குமார், தேவி...

நண்பனின் முகம் கொண்ட எதிரி

   வியாசரின் மகாபாரத்தின் மொழியாக்கம் ஒன்றை படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் தன் தேரோட்டியான சால்ய மன்னர் பற்றி கர்ணன் சொல்வதாய் ஒரு அடைமொழி: ”மித்ர முக சத்ரு”. அதாவது நண்பனின் முகம் கொண்ட எதிரி. படித்ததில் இருந்து மனம் அதையே சுற்றிக் கொண்டிருக்கிறது. சால்ய மன்னர் கர்ணனோடு இருந்தாலும் அவர் மனம் பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்றே ஏங்குகிறது. அதனால் அவர் போரின் போது கர்ணனை ஊக்கம் குன்ற செய்யும் நோக்கி தொடர்ந்து மட்டம் தட்டி பேசுகிறார். அப்போது தான் கர்ணன் இவ்வாறு அவரை குறிப்பிடுகிறான்.

ராமின் சினிமா

சமீபத்தில் வெளியாகி உள்ள ராமின் “தரமணி” டீஸர் ஒரு கூர்முனை கத்தி போல் இருக்கிறது. சில விநாடிகளில் படம் எதைப்பற்றி என புரிய வைத்து விட்டார். “தங்கமீன்கள்” டீஸரை விட இது சிறப்பு. ஒரு நல்ல டீஸர் இப்படித் தான் இருக்க வேண்டும்.

அதிமுகவின் தேர்தல் வெற்றியும் சாதியும்

நேற்று ஒரு நண்பருடன் அதிமுகவின் எதிர்பாராத வெற்றி பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில் புதிதாய் இம்முறை கொங்கு வேளாள கவுண்டர்கள் ஜெயாவுக்கு கொடுத்துள்ள பெரும் ஆதரவு எப்படி இவ்வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது என குறிப்பிட்டார். இதனுடன் எப்போதும் அதிமுகவுக்கு இணக்கமான தேவர்களின் வாக்குகளும் பெருவாரியாய் சேர்ந்து கொள்கின்றன. ராமதாஸுக்கு போக வேண்டிய வன்னியர் வாக்குகளையும் ஜெயலலிதா இழுத்துக் கொள்கிறார்.

தோனியிடம் இருந்து ஒரு பாடம்

கருண் நாயர் இன்று சன் ரைசர்ஸுக்கு எதிராக அடித்த 83 நாட் அவுட் தோனியின்் பல இறுதி ஓவர் ஆட்டங்களை நினைவுபடுத்தியது. நிதானமும் பொறுமையும் இருந்தால் கடைசி பந்து வரை வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது தோனியின் தத்துவம். இன்று கருண் அதை மீண்டும் நிரூபித்து காட்டினார். கடைசி இரு பந்துகளில் 6 தேவை. பவுலரும் பீல்டர்களும் நிதானம் இழக்கும் வரை அவர் நிதானமாய் இருந்தார். கடைசியில் எதிரணி அவர் வலையில் விழுந்தது. ஒரு மோசமான பந்து, ஒரு தவறான டைவ். கருண் அப்பந்துகளை சுமாராகத் தான் அடித்திருந்தாலும் எதிரணி மிகை பதற்றத்தால் தானே தோற்றது!  

தேர்தல் முடிவுகள்: காரணங்களும் மக்களின் சேதியும்

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதற்கு முன்பான சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுக்கு கிடைத்த இடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 89 இடங்கள் (கூட்டணியாக 98 இடங்கள்) ஒரு பெரும் தாவல் என புரிந்து கொள்ள முடியும். கடந்த வருடம் டிசம்பருக்கு முன்பு திமுக அனுதாபிகள், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் மிகவும் அவநம்பிக்கையாய் இருந்தார்கள். கட்சி மிகவும் பலவீனப்பட்டு போயிருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பட்ட கடும் அடி மற்றும் கலைஞரின் மூப்பை கணக்கில் கொண்டு பலரும் திமுக அந்திம காலத்தில் இருக்கிறது என கருதினர். அழகிரியின் கலகம், அவர் வெளியேற்றப்பட்ட வேளைகளில் திமுகவை பத்திரிகைகள் ஒரு வயதான நகைச்சுவை நடிகரைப் போன்றே நடத்தின. கேலி செய்தன.

Difference between idealogy politics and hero-worship politics

Is there a difference between the two? Basically both are same – one worships individual and the other ideology. But there are a few important differences. In an ideology politics-dominated state, people appear more politically aware and active. But it is a façade. In reality they are tutored in a particular discourse, which they parrot about in varying hues and shapes. In ideology-politics, there is less focus on development but more emphasis on culture, freedom and conceptual sword fights. Ideology politics is more cultural than material in approach. This applies to both Hindutva and leftism. Bengal and Kerala are prime examples -- people there are politically active but are lacking in basic facilities and are concerned less about development and wealth creation and more about settling ideological scores. In this sense ideology politics is very vedhic in approach – celebrating the abstract and forsaking the concrete. Let me give two examples. West Bengal has the largest Red...

தேர்தல் முடிவுகள்: ஏமாற்றமும் எதார்த்தமும்

இத்தேர்தல் பற்றி ஒரு மாதத்திற்கு முன்பு என்னிடம் கேட்டிருந்தால் போட்டி கடுமையாக இருக்கும். அதிமுக சராசரியான வெற்றி பெறும். திமுக போதுமான இடங்கள் பெற்று எதிர்க்கட்சியாக மாறும் என கூறியிருப்பேன். ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பு சட்டென ஒரு எதிர்-அதிமுக அலை கிளம்புவதை கவனித்தேன். எல்லா பத்திரிகை நண்பர்களும் திமுக தான் வெல்லும் என்றார்கள். Exit poll முடிவுகளும் அதையே உறுதிப்படுத்தின. ஆனால் நேற்று எனக்கு சற்று குழப்பமாய் இருந்தது. என் ஊகம் தவறாகுமோ என பட்டது. காரணம் அதிமுகவின் மௌனம். தேர்தலுக்கு முன்பாக இருநாட்களில் அவர்கள் நடத்திய பெரும் பணப்பட்டுவாடா. நேற்றிரவு ஒரு ஊடக நண்பரிடம் பேசினேன். (அவர் ஒரு செய்தி சேனலில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்.) ”என்ன நினைக்கிறீர்கள்?” அவர் சொன்னார் “அதிமுக வெற்றி பெறும். தேர்தலுக்கு சற்றும் முன்பு அவர்கள் விநியோகித்த பெருமள்வு பணம் மக்களின் முடிவை திசைதிருப்பி இருக்க கூடும். ஆனால் திமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாய் வெளிவரும்.” அதன் பிறகு அவர் மற்றொரு விசயத்தை ஊகித்தார். அது பா.ம.க ஒரு சிறிய வெற்றியை அடையும் என்பது. அன்புமணி நிறைய இளம் வாக்காளர்களை வசீகரிக்க...

அடுத்தவர்களை பாராட்டலாமா?

ஒரு எழுத்தாள நண்பரிடம் கேட்டேன் “நீங்கள் அரசியல் தலைவர்கள் பலரையும் என்கவுண்டர் செய்கிறீர்கள். ஆனால் ஏன் சக எழுத்தாளர்களை விமர்சிப்பதில்லை?” அவர் சொன்னார் “ஒரு முக்கியமான காரணம் உண்டு. நான் எந்த எழுத்தாளனையாவது கடுமையாய் திட்டினால் அவர் மீது எனக்கு பிரியம் அதிகமாகி விடுகிறது. அவர்களும் என்னை பதிலுக்கு திட்டுவார்கள். ஆனால் நேரில் பார்த்தால் நண்பர்களை விட அதிக பிரியத்துடன் என்னை அணைத்துக் கொள்கிறார்கள். இந்த அன்புத் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவே நான் எந்த எழுத்தாளனையும் இப்போது விமர்சிப்பதில்லை”.

Exit poll முடிவுகள்: தமிழகம் எனும் கோல் போஸ்ட்

நான்கு Exit poll முடிவுகள் தி.மு.கவே வெல்லும் என கூறியிருப்பது இன்றைய தந்தி டி.வியில் விவாதப்பொருள். பாண்டே முகம் தொங்கிப் போயிருந்தது. அவரது உடல்மொழியின் சோர்வு சிறப்பு விருந்தினர்களையும் தொற்றிக் கொள்ள மொத்த ஷோவின் மூடுமே இழவு விழுந்தாற் போல் ஆகி விட்டது. இந்த exit poll செல்லுபடியாகாது என்று பல குரல்களிலாய் எல்லாரும் ஒன்றாய் சொன்னார்கள். பணப்பட்டுவாடாவுக்கு முன்பான ஆய்வு என்பதால் இதை நம்ப முடியாது என்றார் மாலன். பணப்பட்டுவாடா தான் தீர்மானிக்கும் காரணி என்றால் அ.தி.மு.க தானே 234 தொகுதிகளையும் அள்ளிக் கொள்ள வேண்டும்? அப்படி இல்லை என்று தானே Exit poll முடிவுகள் சொல்லுகின்றன.