அபிலாஷ் மொழிபெயர்த்து தொடர்ந்து இங்கு பதிந்துவரும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளைக் கவனித்து யாரேனும் எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. சிறப்பான மொழிபெயர்ப்பு. மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் லயத்தைப் பற்றிக்கொண்டு ஆங்கிலத்தில் அவற்றை மொழிபெயர்ப்பது ஒரு சுகானுபவம். மொழிபெயர்ப்பிலும் அவை முழுமை குன்றாத பிரதிகளாக வருவதைக் காண்பது நிறைவு. இதனால் இம்மொழிபெயர்ப்புகள் எளிதானவை எனப் பொருளாகாது. மனுஷ்யபுத்திரனின் ‘சிக்னேச்சர்’ தமிழ்ப் பதங்களுக்கு நேரான ஆங்கில வார்த்தைகளுக்காக சிலநேரம் நின்று தவமிருக்க வேண்டியிருக்கும். மனுஷ்யபுத்திரனின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் மொழிபெயர்ப்பு செம்பதிப்பாக இந்திய அளவில் கொண்டு செல்லப்படுமானால் தமிழ்க்கவிதைகளின் செறிவானதொரு பக்கத்தை இந்திய இலக்கிய உலகம் அறிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். பாராட்டுகள் அபிலாஷ்.
காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...
கருத்துகள்