முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட்


Image result for india england test
மூன்றாவது டெஸ்டில் இந்தியா முதலில் மட்டையாடி 307 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் இழந்துள்ளது. இதுவரையிலும் இந்தியா தடுமாறி ரொம்ப கேவலமாய் சொதப்பி வந்துள்ளதைப் பார்த்தவர்கள் இந்த ஸ்கோரைக் கண்டு சபாஷ் என சொல்லலாம். ஆனால், இந்த ஆடுதளம் சற்றே மெத்தனமானது. இதில் முன்னூற்று சொச்சம் நல்ல ஸ்கோர் அல்ல. நாளைக் காலை இந்தியா மளமளவென விக்கெட்டுகளை தியாகம் செய்து ஆல் அவுட் ஆனால் ஆட்டத்தில் தோற்பது உறுதி. 
இந்தியா எந்தெந்த விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்?

1) ஹர்த்திக் பாண்டியா இன்னும் சரளமாய் ஆட வேண்டும். தன் இயல்பை முழுக்க மாற்றாமல் ஆட வேண்டும். அவர் இப்போதைக்கு புஜாரா பாணியில் ஆட முயல்கிறார். அதிக ரிஸ்க் எடுக்காமல் சம்பிரதாயமாய் ஆடி அரை சதம் அடித்து விட்டு ஆக்ரோசமாய் ஆடலாம் என நினைக்கிறார். ஆனால் அவருக்கு இரு சிக்கல்கள். அ) அப்படி ஆடுவதற்கான தொழில்நுட்பத் திறன் அவருக்கு இல்லை. ஆக, தன் இயல்புக்கு மாறாய் ஆடும் போது அவர் 50% குறைபட்ட வீரராக மாறுகிறார். மாறாக அவர் வந்ததுமே முதல் முப்பது பந்துகளை அடித்தாடினார் என்றால் ஒரு நல்ல பந்துக்கு அவர் வீழும் போது குறைந்தது 40-50 அடித்திருப்பார். அவர் பந்து வீச்சாளர்களுடன் அதிகமும் ஆட வேண்டி இருப்பதால் பாஸிட்டாக ஆடுவது அவசியம்.


2) இந்த டெஸ்டில் குறைந்தது 400வது அடிக்காவிட்டால் ரிஸ்க். நாளை காலை பாண்ட் அடித்தாட வேண்டும்; அல்லாவிடில் இந்தியா 330க்கு ஆல் அவுட் ஆகி விடும்.


3) இந்த ஆடுதளத்தில் ஆண்டர்ஸன் மற்றும் பிராட் தாம் வீசும் 30 பந்துகளில் 5 பந்துகளாவது விக்கெட் எடுக்கும் பந்துகளாக வீசுவார்கள். இந்த ஐந்தில் பேட்ஸ்மேன் எட்ஜ் கொடுத்து விட வாய்ப்பதிகம். ஆக இந்திய தொடர்ந்து தடுத்தாடிக் கொண்டே இருப்பது அடித்தாடுவதை விட ஆபத்தானது.


4) மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களின் போது short of the lengthஇல் பந்து சற்று தாழ்வாக வரும். அப்போது எல்.பி.டபுள்யோ, டிராக் ஆன், அண்டர் எட்ஜ் ஆகிய முறைகளில் அதிக விக்கெட்டுகள் விழும். சுழலர்களும் ஜொலிப்பார்கள். ஆக முதல் இன்னிங்ஸில் இந்தியா 330க்கு சுருண்டு விட்டால் இங்கிலாந்து அதைத் தொடர்ந்து நன்றாய் மட்டையாடி 120 லீட் பெற்று விட்டால் ரெண்டாவது இன்ங்க்ஸில் இந்தியா 270க்கு ஆல் அவுட் ஆக வாய்ப்பதிகம். இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 120-140 இலக்கை அடைய வேண்டும் எனும் நிலை வந்தால் சற்று நெருக்கடியுடன் அதை அடைந்து விடுவார்கள். ஆக, முதல் இன்னிங்ஸ் தான் இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...