முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2019 உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை: தென்னாப்பிரிக்கா - காத்திருந்து பூத்த கண்கள்


தொண்ணூறுகளில் தென்னாப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட்டின் தலைவிதியை மாற்றிய அணியாக(மற்றொன்று இலங்கை) இருந்தது. கச்சிதமான கூர்மையான வேகப்பந்து வீச்சு, அட்டகாசமானகளத்தடுப்பு, வலுவான மத்திய வரிசை பேட்டிங் மற்றும் எண் 9 வரை அபாரமான பேட்டிங் திறமைகொண்ட ஆல்ரவுண்டர்கள். இந்த அம்சங்களில் களத்தடுப்பும் ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பும்தென்னாப்பிரிக்காவை தனித்துவமான அணி ஆக்கின.உதாரணமாய், ஆபத்தான பேட்ஸ்மேனும், பவுலருமான ஷான் பொலாக், பேட் சிம்காக்ஸ், மெக்மில்லன் மற்றும் குளூஸ்னர், தனியாக 30-40 ரன்களை தங்களது களத்தடுப்பால் சேமித்து, உள்வட்டத்தில் தனது கேட்சிங் மூலம் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஜான்டி ரோட்ஸ், தலைமை, பேட்டிங் மற்றும் மிதவேகப்பந்து வீச்சு மூலம் தொடர்ந்து பங்களித்து வெற்றியை பெற்றுத்தரும் ஹன்ஸி குரோனியே, அதிவேக பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் ... இப்படி ஏகப்பட்ட பேர்துலங்கிய அற்புத அணி அது.ஒவ்வொரு முறை உலகக்கோப்பை வரும் போதும் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு செல்லும்என எதிர்பார்ப்பார்கள்; ஆனால் தென்னாப்பிரிக்க சமூகத்தில் (வெள்ளையர் இடையே) உள்ளசுயநெருக்கடி, தனது மதிப்பு குறித்த அவநம்பிக்கை அவர்களின் கிரிக்கெட் அணியையும் பல்வேறுமுக்கியமான கட்டங்களிலும் பாதித்தது எனலாம் - தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இருந்துஇரண்டாயிரத்தின் பத்தாண்டுகள் வரை தென்னாப்பிரிக்கா மிக நன்றாய் ஆடி விட்டு நெருக்கடியானகாலிறுதி / அரை இறுதிப் போட்டிகளில் அழுத்தம் தாளாமல் சின்னச் சின்ன தவறுகள் செய்து, வெற்றியைக் கோட்டை விடுவார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த சொதப்பல்கள் காரணமாய் chokers எனும் கிண்டலான பட்டப்பெயர்அவர்களுக்கு அளிக்கப்பட்டு நிரந்தரமாகியது. இன்றும் தென்னாப்பிரிக்கா ஒரு நல்ல அணியே; ஆனாலும் அவர்களது மன உறுதியின்மை, சுய-ஐயப்பாடு காரணமாய் அவர்கள் தாமாகவேஉலகக்கோப்பையில் இருந்து வெளியேறி விடுவார்கள் என விமர்சகர்கள் நம்புகிறார்கள்.இன்றைய தென்னாப்பிரிக்க அணியைப் புரிந்து கொள்ள இரண்டாயிரத்தில் தென்னாப்பிரிக்ககிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த இரு மாற்றங்களை கவனிக்க வேண்டும். ஒன்று, அணிக்குள்கறுப்பின மக்களுக்கு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. மெல்ல மெல்ல கறுப்பின பவுலர்களும்பின்னர் கறுப்பின பேட்ஸ்மேன்களும் அணிக்குள் அறிமுகமாகி அதிக வாய்ப்புகள் தொடர்ந்துபெற்றனர். இந்த இன அடிப்படையிலான இட ஒதுக்கீடு காரணமாய் வெள்ளையின வீரர்களுக்குவாய்ப்பு குறைய சிலர் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தனர். இப்படி இங்கிலாந்து அணியில் ஆடவாய்ப்புப் பெற்று பின்னர் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக உயர்ந்தவரே கெவின் பீட்டர்ஸன்.

இந்தக் காலகட்டத்தில்தான் தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் அசுர பலம் பெறுகிறது.உலகத்தர ஆல்ரவுண்டர் காலிஸ் தென்னாப்பிரிக்காவின் சச்சின் என போற்றத்தக்க  பிடிவில்லியர்ஸ், தலைவர் கிரேம் ஸ்மித், கீப்பர் பேட்ஸ்மேன் மார்க் புச்சர் போன்றோர் ஒரு பக்கம்ஸ்டெயின், மோர்கல் சகோதரர்கள், மாகாநாய நிடினி ஆகிய வேக வீச்சாளர்கள் இன்னொரு பக்கம்என ஒரு தரமான அணி உருவானது. இந்த அணி தனது ஆல்ரவுண்ட் திறமையையும் களத்தடுப்பையும்மட்டுமே கொண்டு வெல்லாமல், அபாரமான பேட்டிங் திறமை மற்றும் மிரட்டும் வேகவீச்சைக்கொண்டு அதிரடியாக ஆடியது. ஆனாலும் சற்றே சம்பிரதாயமான மனநிலையும், தவறு செய்துவிடுவோமோ எனும் அச்சமும் தென்னாப்பிரிக்காவை பெரிய ஆட்டத்தொடர்களில் காலை வாரிவிட்டன.இதன் பின்னர் கடந்த பத்தாண்டுகளில், குறிப்பாய் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு, தென்னாப்பிரிக்கா மெல்ல மெல்ல தனது துர்க்காதேவி உக்கிர வடிவில் இருந்து மாரியம்மாவாகசாந்தரூபம் எடுத்துள்ளது. டிவில்லியர்ஸ் காயம் காரணமாய் அடிக்கடி ஆடாமல் இப்போது முழுக்கஅணியில் இருந்து ஓய்வு பெற்றது, கறுப்பினர் வீரர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமை பிறரிடம்ஏற்படுத்திய பிளவு, மட்டையாட்டத்தில் உள்ள பலவீனம், டெஸ்ட் அளவுக்கு ஒருநாள் ஆட்டங்களில்கவனம் காட்டாமை என தென்னாப்பிரிக்கா தனது இரண்டாம் இடத்தை உலக அளவில்இந்தியாவுக்கு விட்டு கொடுத்தது. ஆனால் யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள் - இந்தபலவீனமான நிலையிலும் தென்னாப்பிரிக்கா எந்த சிறந்த அணியையும் முறியடிக்கும் தரத்துடன்வலிமையுடன்தான் உள்ளது.

அடுத்து 2019 உலகக்கோப்பைக்கான அணியின் பலம் மற்றும் பலவீனத்தை பார்ப்போம்.இந்த அணியில்  ஒரு வித்தியாசமான அம்சம் 34-36 வயதுக்கு உட்பட்ட பல வீரர்களும், இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் புதிய இளம் வீரர்களும் இணைந்திருப்பது. இந்த இளம்வீரர்கள் கடந்த சில ஆண்டுகளாய் தொடர்ந்து ஆடி அணியில் நிலைப்பட்டவர்கள் அல்ல. இதுபொருந்தா வயது வித்தியாசம் அணியின் இணக்கத்தை, புரிந்துணர்வைப் பாதிக்குமா எனும் கேள்விஎழுந்துள்ளது.
ஃபஃப் டூபிளெஸி (அணித்தலைவர்)டூ பிளெஸி கடந்த சில ஆண்டுகளாய் மிகச்சிறந்த ஆட்ட நிலையில் இல்லை. இந்த .பி.எல்லிலும்அவர் பெரிதாக சோபிக்கவில்லை. ஆனால் நல்ல தடுப்பாட்டமும் புத்திசாலித்தனமும் கொண்டஇவரது ஆட்டம் சிக்கலான தடுமாற்றமான கட்டங்களில் அணிக்கு நிச்சயம் உதவும். ஓர் அணித்தலைவராகவும் டூ பிளெஸி அபாரமானவர்
ஹஷிம் ஆம்லா
திராவிட், அசாருதீன், லஷ்மண் ஆகிய மூவரின் கலவைதான் ஆம்லா.சில வீரர்களுக்கு வயதாக ஆக ஆட்டம் மெருகேறும். ஆம்லா அப்படியானவர். உலக கிரிக்கெட்வரலாற்றிலேயே இவர் ஒரு சாதனை வீரர். ஒருநாள் கிரிக்கெட்டில் துவக்க ஆட்டமாடி 27 சதங்கள்மற்றும் 37 அரைசதங்கள். தடுப்பாட்டம், வேக வீச்சை எதிர்கொள்ளல், ஸ்பின்னை தெறிக்க விடுதல்என ஆம்லா ஒரு முழுமையான மேதை. இந்த உலகக்கோப்பையில் இவர் தொடர்ந்து ரன் குவித்தால்தென்னாப்பிரிக்கா நிச்சயம் அரை இறுதியைக் கடக்கும்.
டி காக் (கீப்பர்)
இன்று உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யாரென்று பட்டியல் எடுத்தால் டி காக்முதலிடம் பெறுவார்; ஆனாலும் ஒருவேளை முதலிடம் அதிகமோ என உங்களை ஐயப்படவைக்கும்படியாய் அவரது ஏற்ற இறக்கமான ஆட்டம் இருக்கும். இன்று ஜொலிப்பவர் நாளைஇருளடைந்து தெரிவார். ஆனால் டி காக் தன்னம்பிக்கையுடன் ஆடத் துவங்கினால் தன்னந்தனியாய்தென்னாப்பிரிக்காவை இறுதிப் போட்டிக்கு அழைத்து செல்லும் திறமை கொண்டவர். ஆனால் 106 ஆட்டங்களில் அவர் இதுவரை தன் அணியை இறுதிப்போட்டி வரை இட்டுச் சென்றதாய்தெரியவில்லை.

மேலும் படிக்க: https://tamil.asiavillenews.com/article/worldcup-2019-team-review-south-africa-6680

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...