முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பார்ப்பவரும் பார்க்கப்படுபவரும்


எனது ஐந்து வருடக் கணக்கு” கட்டுரைக்கு வந்துள்ள எதிர்வினையும் அதை ஒட்டிய உரையாடலும் சுவாரஸ்யமானவை, முக்கியமானவை என்பதால் இங்கு பகிர்கிறேன்.
வணக்கம் அபிலாஷ்
//நண்பர்களேஇப்படியான சில வருட சுழற்சி உங்களது வாழ்விலும் உண்டா?//
Well written Writer. 
Yet...I almost adore these circles and their associated sadness. But u can choose ! Ur an imaginary god when u change a moment, na. It’s a high - This time and space game. Nowadays, Mine is not abt years….its mostly abt days….every day is either a revelation or a drag. And I audaciously look forward to the entertainment daily. A trick or twist. Dunno…
On the work front, I have deliberately remained pregnant for long, cos I simply enjoyed being that. Its a sick thing, to say, I must confess. But then, once ur out in the open, the private zombie-like fun is gone. Don’t publish this.
A query – Have u pondered why ur happier with new experiences or people. If we cut the excitement of man being a social animal blah blah, WHY does the mind seek new experiences every moment, anyways  ? Doesn’t it also imply that Man can never be happy ? J
I have embraced routine again, after some back-breaking work, even as I hate my chores secretly. Mundane existence is zen. U wrote abt it urself years ago. Remember ?


அன்புடன்
பூங்குழலி

அன்புள்ள பூங்குழலி
இந்த மெயில் பார்த்து விட்டு நான்கு வருடங்களாக பல்வேறு சந்தர்பங்களில் நீங்கள் அனுப்பின கடிதங்களைப் படித்துப் பார்த்து நெகிழ்ந்து போனேன்
ஆம் ஒவ்வொரு நாளையும் நிறைவான அனுபவத்திரள்களாகக் காணலாம். எனக்கு அப்படியும் தோன்றி இருக்கிறது.
ஒவ்வொரு சில வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு ஏறுமுகம் இறங்குமுகம் ஏற்படுவதையும் காண்கிறேன். அதைக் காண்பது என் அகந்தை தான். தினம் தினம் எனது வாழ்க்கை மாறுவதை உணர்வது என் நிச்சலமான அகம். ரெண்டும் வேறு வேறு.

இதைச் சொல்லும் போது எனக்கு ஜெ.கிருஷ்ணமூர்த்தி காலம் மற்றும் நினைவுகள் பற்றி சொன்னது நினைவுக்கு வருகிறது. நான் இப்படியெல்லாம் இருந்தேன் என சொல்லும் போதே அங்கு இரண்டு பேர் எனக்குள் தோன்றி விடுகிறார்கள் - ஒருவர்இருந்தவர்”, மற்றவர் இருந்ததைக்கவனித்தவர்”. இந்த பார்க்கிறவர்-பார்க்கப்படுபவர் எனும் இருமையின்றி சில விசயங்களை தனித்துவமாக, சாரமானதாக, நிஜமானதாக வாழ்க்கையில் அறிய முடியாது. ஒரு பெண் தன்னை ஒரு ஆண் கவனிப்பதாய், ரசிப்பதாக உணரும் போது அவள் தன்னை கவனிக்கப்படும் பெண்ணாகப் பார்க்கிறாள். அங்கு அவள் இரண்டாக பிரிந்து விடுகிறாள். இப்படி பிரிந்தே நாம் காலத்தை அறிவதாக, காலத்தை அறிந்து நினைவுகளைத் தொகுப்பதாக, நினைவுகளைத் தொகுத்து, அதைக் கொண்டு ஒரு உணர்வுநிலையை எடுப்பதாக, உணர்வுநிலையைக் கொண்டு நம்மை நாமே மதிப்பிடுவதாக ஜெ.கெ சொல்கிறார்
நாளொன்றுக்கு நான் ஒருவிதமாக இருக்கிறேன் என நீங்கள் சொல்லும் போதும், சில வருடங்களுக்கு ஒருமுறை நான் இப்படியாக இருந்திருக்கிறேன் என நான் தொகுக்கும் போதும்  அங்கே நாம் உருவாக்கும்சுயம்அங்கு இல்லை. என் விசயத்தில் நான் கூடுதலாகவே ஒரு சுய வரலாற்றை உண்டுபண்ணி எதிர்மறையாக மதிப்பிடுகிறேன். நீங்கள் சற்று அதிக சுதந்திரத்துடன் வாழ்கிறீர்கள் என நினைக்கிறேன்
இப்படி காலத்தை உண்டு பண்ணி நினைவைத் தொகுப்பதே காலம் நம்மை மீறிச் சென்று விடுமோ நாம் இல்லாமல் போய் விடுவோமோ என்கிற பயத்தினால், பதற்றத்தினால் தான் என ஜெ.கெ சொல்கிறார். இந்த மின்னஞ்சலை நான் எழுதுவதும் அதனால் தானோ!
அன்புடன்
ஆர். அபிலாஷ்

Hi

இப்படி பிரிந்தே நாம் காலத்தை அறிவதாக
காலத்தை அறிந்து நினைவுகளைத் தொகுப்பதாக
நினைவுகளைத் தொகுத்து
அதைக் கொண்டு ஒரு உணர்வுநிலையை எடுப்பதாக, உணர்வுநிலையைக் கொண்டு நம்மை நாமே மதிப்பிடுவதாக 
ஜெ.கெ சொல்கிறார். – BANG ON…Writer. Precisely what I attempted and precisely why when it backfired, have always been amused , when my friends have taken my hands tenderly and tried to talk me out of the confusion. Chuckled


Also,
நாளொன்றுக்கு நான் ஒருவிதமாக இருக்கிறேன் என நீங்கள் சொல்லும் போதும், சில வருடங்களுக்கு ஒருமுறை நான் இப்படியாக இருந்திருக்கிறேன் என நான் தொகுக்கும் போதும் - அங்கே நாம் உருவாக்கும் சுயம்அங்கு இல்லை. Excellent again. But isn’t it a fact that we are nothing without our tag lines. As Someones wife, as Someones assistant, as someones neighbour, as the girl sitting on the white chair, as the girl who just framed a shot etc….. Bcos, the second part o the sentence defines the first part and nullifies the “self immediately, as if in a theorem !

This also implies that “binary” doesn’t exist !  . There, the second para just cancelled the 1st one. I love this !
What got me concerned was ur anxiety in ur blog and ur last sentence in the mail. A tinge o nostalgia, the tendency to still time, a wee bit o hurt – I know u write this kinda stuff from ur heart. I thought I will reach out to u, to say….that with a few experiments, I have actually lost track of time. I only make memories, file them away, and again start playing. Am unable to do that with space. Bcos, that beautiful old house, that USED TO belong to me, and which NOW belongs to someone else, is after all STILL THERE…Same place, same grandeur. And I care a damn that I own it or not. It merely exists. But TIME - Time, that cruel lover…He is liquid ! Fuckin liquid. That’s why we want to freeze it.
Despite it, I  have no clue why after all these games, I am feeling stupidly immortal ! Although facts point otherwise and one day, I have to succumb to truth some day, I assure u, that these wonderful games with our “Selves” completely nullifies the pain. 
See, I am just an atom. But I expect  an accomplished writer like u to go on and produce more art. May u germinate a novel soon !
All my best wishes
அன்புடன்
பூங்குழலி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...