முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெரிதாவின் விமர்சன மொழி ஏன் தர்க்கபூர்வமாய் இல்லை?




 வாசிப்பு ஒரு ஆன்மீக நிலை, அதற்கு என ஒருவித அறிவுத்தகுதி தேவையென நீங்கள் சொன்னால் அறிவைக் கொண்டு வாசிக்க முடியாது என நான் சொல்வேன். வாசிப்புக்கு அறிவு எப்போதும் ஒரு இடையூறு மட்டுமே.

 வாசிக்க மனதுக்குள் ஒரு கண் திறந்திருக்க வேண்டும். இதைப் புலப்படுத்தும் நோக்கிலேயே தெரிதா தன் விமர்சனங்களை முன்னுக்குப் பின் முரணான, மிக கவித்துவமான மொழியில் நிகழ்த்துவார். பகுத்தறிவு பூர்வமான தெளிவாக ஒன்றை நிறுவி அங்கிருந்து மற்றொன்றுக்கு வேட்டையாடும் கழுகைப் போல தாவிச் செல்லும் (சு.ராவினுடையது போன்ற) விமர்சன மொழியை அவர் வெறுத்தார். ஏனென்றால் வாசிப்பின் முதல் விரோதி தான் வாசிப்பதாய் நினைக்கும் மனமே, பிரக்ஞைபூர்வமான ஒழுங்கே என அவர் அறிந்திருந்தார்.
 ஆனால் பயிற்சியைக் கொண்டு நுட்பமாக வாசிக்கும் கண்ணைத் திறக்க முடியாது. அது இன்று திறக்கும், நாளை மூடும். நாளை மூடின நிலையில் நான் உதிக்கிற ஒரு கருத்தை நேற்று நான் தெளிவாக இருந்து விவரமாகப் பேசினேன் என்பதை வைத்து மதிப்பிட முடியாது. இப்படியான காலக்கிரமான மதிப்பிடலுக்கு வாசிப்பில் இடமில்லை. தெரிதா சொல்வதைப் போல வாசிப்பு காலம் சார்ந்த அர்த்தக் கட்டுமானங்களை முதலில் உடைக்கிறது. பண்பாடு சார்ந்த கட்டுமானங்களை நொறுக்கிறது. அர்த்தமே இல்லாத இடத்தில் ஒரு வாசகனை ஒரு நொடி நிறுத்தி வைக்கிறது. அப்போது மௌனித்திருப்பவனே நல்ல வாசகன். (பேசத்தெரியாதவன் வாசகன் என்றல்ல இதன் பொருள்) அப்படி இருக்க அவனுக்கு என்ன தகுதி தேவை, அவன் மனிதனாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர?
மேலும், வாசகத் தகுதி, அது இது என்பதெல்லாம் சாதிய மனநிலையின் ஒருவித முகமூடியிட்ட வாதமே. நம்மிடையயே இப்படி படிநிலையை உருவாக்கும் உளவியல் அழியவே அழியாது. அதற்கு முதலில் இந்த சாதிய அமைப்பு, உடல் பிம்பத்தை, பின்னணியைக் கொண்டு அகத்தை எடையிடும் போக்கு ஒழிய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...