முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காற்றுக்கென்ன வேலி?



ஜெயமோகன் வாசகர்களின் தகுதி பற்றி எழுதியதை ஒட்டி எழுந்த சில எதிர்வினைகளைப் பார்த்தேன். அந்த எதிர்வினைகள் மீதான எதிர்வினை இது:

வாசிப்பை பொருள் விளக்கம் பெறும் ஒரு நிகழ்முறையைப் பார்க்கும் ஒரு போக்கு தமிழில் உள்ளது. இது என்ன சொல்கிறது, இதைக் கொண்டு நான் என்ன அறிந்து கொள்கிறேன் என யோசிப்பது இது. நம்முடைய பகுத்தறிவு மரபுக்கு இந்த அபத்தத்தை உருவாக்கியதில் ஒரு பெரிய பங்கிருக்கிறது. ஆனால் வாசிப்பு இதற்கு நேர் எதிரான தளத்தில் அர்த்தத்தை உதறி அர்த்தமின்மை நோக்கி நம்மை மேலெடுத்து செல்வதாகும். பொருள் காண்பது, கண்டதை உரைப்பது விமர்சனம் - இந்த விமர்சனம் சுவாரஸ்யமாக ஆழமாக ஆகும் போது அது ஒரு தனி படைப்பாகிறது. அதிலும் இனிமை உண்டு, ஆனால் அது வாசிப்புக்கு மாற்று அல்ல. வாசிப்பின் நேர் எதிர் நிலை

உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு படைப்பை ஊன்றி வாசிக்கும் போது உங்கள் போத மனம் அதைப் பற்றி சிந்திக்கிறதா என கவனியுங்கள். உங்கள் பகுத்தறிவு அதை அலசி வகைப்படுத்தி லேபள் ஒட்டுகிறதா என நோக்குங்கள். நிச்சயம் இராது. யோசிக்க மறக்கும் போதே வாசிப்பு துவங்குகிறது. படைப்புக்குள் எழும் சிந்தனைகள், குறிப்பான்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு தம்மை அழிக்கும் போதே நாம் ஒரு படைப்பை வாசித்த நிலையில் சிரிக்கிறோம், அழுகிறோம், மனம் திளைக்கஆஹ்என்கிறோம், கருணையில் உருகுகிறோம், சமூகத்தை நினைத்து கோபப்படுகிறோம், இந்த நெகிழ்வுக்கு, இந்த கோபத்துக்கு அர்த்தமே இல்லை என வியக்கிறோம், கைவிடப்பட்டதாய் தவிக்கிறோம்.

 வாசிப்பு ஒரு தியானம். அது தானே அமைவது. சிலருக்கு முதல் அனுபவத்தில், பலருக்கு பல வருடங்கள் கழித்து
வாசகத் தகுதியின்மை என ஜெயமோகனும், வாசகனின் மொண்ணைத்தனம் என கார்ல் மார்க்ஸும் குறிப்பிடுவது விமர்சனத் திறனின்மையையே. வாசகனின் போதாமையை அல்ல. ஒரு அற்புதமான வாசகனுக்கு துல்லியமாக தன்னை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கலாம். அவன் முட்டாளைப் போலப் பேசலாம். ஒரு பிரதியை பற்றி அட்டகாசமாகப் பேசும் ஒருவன் அதை முழுக்க தன் மூளையைக் கொண்டு பிரமாதமாக வாசித்து தன் வாதத்திறமையால், மொழியால் உங்களை மயங்க வைக்கலாம். விமர்சனத் திறனை வைத்து, போத மனத்தின் விளையாட்டை வைத்து அபோத நிலை ஒன்றை யாரும் மதிப்பிட கூடாது. வாசகனும் விமர்சகனும் ஒன்றல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...