முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குறைந்தபட்ச ஆதரவு விலை: ஜியின் 4 பொய்கள்




ஜி தனது வேளாண் சட்டங்களை முட்டுக்கொடுத்து எழுச்சிகரமாக ஆற்றிய உரையில்குறைந்த பட்ச ஆதரவு விலையை (MSP) நீக்க மாட்டோம், அவை தொடரும்எனக் கூறுகிறார். ஆனால் இன்னொரு பக்கம் இந்த MSP வேளாண் சட்டத்துக்குள் கொண்டு வர மாட்டேன் என பிடிவாதமாகவும் இருக்கிறார். “நீங்க வாயால் சொன்னால் போதாது, அதற்கு மதிப்பில்லை, எழுத்தில் கொடுங்க, குறைந்தது பாராளுமன்றத்தில் சொல்லுங்கஎன விவசாயிகள் கேட்கிறார்கள். இதற்கு ஒரு காரணம் ஜி ஏற்கனவே இது போல வானுயர பொய்களை ஏகத்துக்கு சொல்லி இருக்கிறார், பொய்க்கோட்டைகளை எழுப்புவதில் பலவரலாற்று சாதனைகளைப்படைத்திருக்கிறார் என்பது. இதில் () ஜியின் ஆசான் நமது முன்னாள் ஜனாதிபதி கலாம் ஜி தான் - அவர் இன்று இருந்திருந்தால் 2050இல் நாம் வல்லரசு ஆவோம் என உணர்ச்சிகரமாய் கூறியிருப்பார். 2050 வரை உயிருடன் இருந்தால் 3000இல் என மாற்றி விடலாம். இப்படித்தான் நமது ஜியும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பத்து உணர்வெழுச்சியான வாக்குறுதிகளைக் கொடுப்பார். அவர் மலைமலையாக குவிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என பிடிவாதம் வேறு பிடிப்பார், அல்லது அதைப் பற்றி பேசவே மறுத்து விடுவார். எல்லா கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டும் செய்வதை ஜி அனுதினமும் செய்வார். உணர்ச்சி தான் முக்கியம், செயல் தீவிரமோ நடைமுறை மாற்றமோ அல்ல என ஜியின் ஆதரவாளர்கள் இதற்கு முட்டுக்கொடுப்பார்கள். இவ்விசயத்தில் அடுத்து () ஜியின் அடுத்த ஆசான்கள் சுயமுன்னேற்ற எழுத்தாளர்கள் / பேச்சாளர்கள் - “எப்படி வெற்றியாளன் ஆவது? கோடீஸ்வரன் ஆவது?” என அவர்கள் பேசுவதைக் கேட்டால் நாளையே நாம் பில் கேட்ஸ் ஆகி விடுவோம் என ஒரு ஆவேசமும் போலித் திருப்தியும் கிடைக்கும்; ஆனால் அவர்கள் தாம் சொல்லும் எந்த கருத்தையும், பரிந்துரையையும் வாழ்க்கையில் செயல்படுத்தி வென்றிருக்க மாட்டார்கள், மாறாக இவற்றை நம்மை செயல்படுத்த சொல்லி கோடிக்கணக்கில் புத்தகங்களை விற்று கோடீஸ்வரர் ஆகி விடுவார்கள். ஜி இதை அரசியலில் செயல்படுத்தி வானுயர வடை சுட்டு அதை நம்மையே வாங்கித் தின்ன வைத்த ஜெகஜால கில்லாடி


குறைந்தபட்ச ஆதரவு விலை ஏன் கைவிடப்படும் என நினைக்கிறேன்?

முந்தைய அமைப்பை முழுக்க மாற்றி, அரசின் தலையீடு இன்றி கார்ப்பரேட்டுகளுக்கு வேளாண் சந்தையை திறந்து விடுவதே இந்த சட்டங்களின் குறிக்கோள். இவை நிலுவையில் வரும் போது மாநில அரசுகள் இவை வெற்றி பெற வேண்டும் என்றே விரும்பும். கார்ப்பரேட்டுக்கு முட்டுக்கட்டையாக இன்னொரு அமைப்பை வெற்றிகரமாக நடத்த முயலாது

யோசித்துப் பாருங்கள் - ஒன்றிரண்டு வருடங்களுக்குள் கார்ப்பரேட்டுகள் தாம் நிர்ணயிக்கும் விலைக்கு பொருளை விற்கும்படி விவசாயிகளை வற்புறுத்துவது நடக்கும். அப்போது ஆரோக்கியமாக அரசின் தலையீட்டுடன் கூடிய ஒரு மாற்று அமைப்பும் செயல்படுகிறது என்றால் (1) கார்ப்பரேட்டுகளால் லாபம் ஈட்ட முடியாமல் போகும்.

இன்னின்ன உணவுப்பொருட்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என கார்ப்பரேட்டுகள் நேரடியாக கோரும் நிலைமை வந்தாலே, குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு ஏற்றுமதி பண்ண முடியும். இப்போது குறைந்தபட்ச ஆதரவு விலை இருப்பதால் தம்மால் சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என கார்ப்பரேட்டுகள் புகார் சொல்லுகிரார்கள். ஆக, இந்த சட்டம் நடைமுறைப்படுத்த அரசு சந்தையில் இருந்து விலகுவது அவசியம்; அதோடு இச்சட்டத்தின் வெற்றிக்கு ஏற்றுமதி அதிகமாவது, (2) அதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து செய்யப்படுவது அவசியம்.


இப்போது அரிசி, கோதுமை போன்ற அத்திவாசியமான தானியங்களை அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எடுத்து சேமித்து வைக்கிறது. இது ரேஷன் அட்டை மூலம் நாடு முழுக்க ஆதரவற்ற மக்களுக்கு அடிப்படையான உணவுப்பொருட்களை அனுப்பி வைப்பதை சுலபமாக்குகிறது. இப்போதுள்ள கொரோனா லாக்டவுன் போன்ற எமெர்ஜென்ஸி நிலைமையில் இந்தியாவில் பட்டினி சாவுகள் பெருமளவில் நடக்காததற்கு இந்த பெரும் சேமிப்பு ஒரு முக்கிய காரணம். ஆம், இதன் விளைவாக தானியங்கள் போதுமான பராமரிப்பு இல்லாமல் அழுகுவது, அவை பின்னர் மலிவாக இறுதியில் விற்கப்படுவது நடக்கிறது. ஆனால் இந்தியா  போன்ற ஏற்றத்தாழ்வுகள் மிக்க ஒரு நாட்டில் உணவு விசயத்தில் பற்றாக்குறை மட்டுமீறிப் போய் விடாமல் இது பாதுகாக்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை ரத்து எனும் கல்லினால் வீழ்த்தப்படும் அடுத்தமாங்காய்இந்த உணவுப் பாதுகாப்பே. ஜியின் அரசு ஆரம்பத்தில் இருந்தே ஒரு ரூபாய்க்கு அரிசு கொடுப்பது போன்ற திட்டங்களை விரும்பவில்லை. அதற்குப் பதிலாக பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் போட்டு விடுவோம் என்றார்கள். ஏன்? உணவுப்பொருளின் சந்தை விநியோகத்தை அரசு தலையிட்டு கட்டுப்படுத்துவது அதை வைத்து வியாபாரிகள் வெளிச்சந்தையில் பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் சாத்தியத்தை இல்லாமல் ஆக்குகிறது. குஜராத்திகளின் புத்தி அப்படித்தானே போகும்! ஒரு பண்டத்தை நீங்கள் எந்தளவுக்கும் விலையை உயர்த்தி விற்க முடியும். ஆனால் பணத்தை விற்க முடியாது. அதனால் தான் ஜியின் மார்வாரி அரசு பண்டங்களை மலிவு விலையில் கொடுப்பதை வெறுக்கிறது. இதற்கு (3) முக்கியமான தடையாக இன்றும் இருப்பது குறைந்தபட்ச ஆதரவு விலை. ஆகையால் அதை ஒழித்துக் கட்டுவது ஜியின் அரசின் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


அடுத்து, வேளான் சட்டங்களால் விளைபொருட்களை வெளிச்சந்தையில் (open market) விற்க நேர்ந்து அதனால் விவசாயிகளுக்கு பல மடங்கு அதிக லாபம் கிடைக்கும் என ஜியின் அரசு சொல்கிறது. இந்த வெளிச்சந்தை வியாபாரத்தில் சந்தையின் தேவையைப் பொறுத்தே பொருளின் விலையும் தீர்மானிக்கப்படும். .தா., அரிசியை அரசு கொள்முதல் செய்து சேமிக்காமல் மொத்தமும் தனியார் சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படும் போது மெல்ல மெல்ல கிலோவுக்கு 1 ரூபாயில் இருந்து 40-60 ரூ வரை அரிசி கடும் வித்தியாசங்களுக்கு உட்பட்டு விற்கப்படுவது நின்று, பெரும்பாலானோர் கிலோவுக்கு 40 ரூ கொடுத்து வாங்கியாக வேண்டிய நிலை வரும்; இது ஏழைகளை மட்டுமல்ல மத்திய வர்க்கத்தையே பின்னர் பெருமளவு பாதிக்கப் போகிறது. விலை ஏன் அதிகமாகிறது எனக் கேள்வி எழுப்பினால், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது, அதனால் என பழியை அந்த பக்கம் தள்ளி விட்டு விடுவார்கள்.

 அரிசியின் உற்பத்தி அதிகமாகினால் மிச்ச அரிசியை சேமித்து வைத்து மக்களுக்கு வருடம் முழுக்க குறைந்த விலையில் அது போய் சேர விடாமல் முதலாளிகள் தம் கையிருப்பு வைத்து அதை ஒன்று ஏற்றுமதி செய்வார்கள் அல்லது அரிசி உற்பத்தியை குறைக்கும் படி முதலாளிகள் ஆணையிடுவார்கள். இந்த முறைமையினால் முதலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் சமமான நலன் இருக்கும் என ஜியின் அரசு கருதுகிறது. இதற்கு நேரெதிரான விசயம் குறைந்தபட்ச ஆதரவு விலை. அது இருந்தால் இது இருக்காது, இது இருந்தால் அது இருக்காது. கார்ப்பரேட்டுகளின் வெளிச்சந்தை வணிகமும் இருக்கும், அதில் குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்காது, அதுவே லாபமானது என்று விட்டு, (4) எது விவசாயிகளின் லாபத்துக்கு விரோதமானது என ஜியின் அரசு நினைக்கிறதோ அதையும் தக்க வைப்போம் என சொல்வது நம்பும்படியாக இல்லை, முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. அதாவது நீங்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்கிறீர்கள், அவர் நீங்கள் இன்னின்ன மருந்துகளை சாப்பிடுங்கள், மருந்து மட்டுமே உங்களைக் காப்பாற்றும், ஆனால் மருந்தில் நம்பிக்கை இல்லையென்றால் வெறுமனே யோகாவும் தியானமும் மட்டும் பண்ணுங்கள் எனக் கூறினால் அந்த மருத்துவர் ஒரு லூசு என நினைக்க மாட்டீர்கள்? அப்படித்தான் இருக்கிறது ஜி தரும் வாக்குறுதி. அவர் எது தவறு என சொல்கிறாரோ அதையே நீட்டிப்போம் என்றும் சொல்கிறார். அவர் சொல்வது பொய் என்பதற்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...