முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுகவின் எதிர்காலம் - ஜெய் ஸ்ரீராம்?


இந்த தேர்தலில் படுதோல்வி உற்றால் பாதி அதிமுக தலைவர்கள் பாஜகவுக்கு தொண்டர்களுடன் சாதி சமூக ஆதரவுடன்  இடம்பெயர்வார்கள். பாஜகவுக்கு இங்கே எந்த உள்கட்டமைப்பு வசதி, தொண்டர் படையும் இல்லாததால் இப்படி மானம் கெட்டு அவுட் சோர்ஸ் செய்வதே ஒரே வழி. ஆனால் பாஜகவுக்கு போகிற அதிமுவினர்களுக்கு கொள்கை அளவில் சிக்கல் இராது (கொள்கையே இல்லையே) என்றாலும் அங்கு அண்ணாமலை, மதுவந்தி, எஸ்.வி சேகர் போன்றோருடன் போட்டி போட வேண்டும் என்பதே கொடுமை. இது போக ரவீந்திரன் துரைசாமி, குருமூர்த்தி போன்ற புரோக்கர்களின் காலிலே விழுந்து கிடக்க வேண்டும். அதிகாரம் மிக்க ஜெயா, சசியின் கால்களில் இருந்து இந்த புரோக்கர்களின் கால்களுக்கான இடப்பெயர்வு ஒரு அசிங்கம் தானே. புதிய தலைமுறை வட்டமேஜை விவாதத்தில் மாபா பாண்டியராஜனின் முகத்தில் இப்போதே சவக்களை தெரிகிறது. 
மீதமுள்ளோர் சசியின் அணிக்கு சென்று விடுவார்கள். 

இவ்விசயத்தில் திமுகவுக்கு ஒரு பொறுப்பு உள்ளது. தமிழகத்தில் அவர்களுக்கு எதிர்த்தரப்பாக அதிமுக இருப்பதே திமுகவுக்கும் தமிழகத்துக்கும் நல்லது. ஆகையால் அதிமுக சிதறாமல் அவர்கள் பாதுகாத்து, பாஜகவின் கையில் இருந்து பாதுகாக்க முயல வேண்டும். இல்லாவிட்டால் காலியாகும் இடத்தில் பாஜகவின் பி, சி டிம்களே பெருகும். அவர்களுடன் சேர்ந்து அதிமுகவை கைப்பற்றி பாஜகவும் வந்து எதிரே உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணும்.
இன்றைய அதிமுக அமைச்சர்கள் நாளை யோகியை இங்கே அழைத்து வந்து 'மசூதியை இடிப்போம், ஜெய் ஸ்ரீராம்' என முழங்க ரொம்ப நாள் ஆகாது. அதிமுக தலைமையின் மதப்பற்றை மதவெறியாக, மாற்று மதத்தவர் மீதான வெறுப்பாக உருமாற்றுவது சுலபம்!

 உங்களுக்கே தெரியும் பார்ப்பனியம் எப்படி வந்து தாக்கும் என - அதற்கு கட்சி சார்பு இல்லை. அது நேரில் நின்று எதிர்க்காது. முன்பு காங்கிரசை அது ஆக்கிரமித்து ஆட்டம் போட்டதாலே பெரியார் வெளியேறி இங்கு திராவிட இயக்கத்தை முன்னெடுத்தார். இன்று அதே பார்ப்பனியம் பாஜகவில் இருந்து காங்கிரஸை எதிர்த்து அழிக்கிறது. ஒரு காலை பாஜகவில் வைத்தபடி இன்னொரு காலை அதிமுகவில் வைக்க எவ்வளவு நேரமாகும்? அதனால் தான் சொல்கிறேன்: இன்று கர்நாடக பாஜகவின் தேஜ்ஸ்வி தமிழ் மண்ணில் நின்று பெரியார் பற்றி சொன்னதை நாளை அதிமுக தலைவர்கள் வாயாலே சொல்ல வைப்பார்கள். 

 ஒரு மருத்துவர் நோயாளியின் உடலில் நுழைந்துள்ள கிருமிகளை அழிப்பதற்கு எப்படியான சிகிச்சை அளிப்பாரோ அதையே அதிமுகவுக்கும் நாம் செய்ய் வேண்டும். ஏனென்றால் அடிவாங்குவது அடுத்தவன் தானே என நாம் நினைத்தால் அடுத்து அது நம் உடலில் நுழையும்! திமுக தலைமை புத்திசாலி என்றால் சுதாரிக்கும்!

கருத்துகள்

'பசி'பரமசிவம் இவ்வாறு கூறியுள்ளார்…
தி.மு.க. தலைமை மட்டுமல்ல, தமிழர் நலம் நாடும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தவறாமல் வாசிக்க வேண்டிய பதிவு இது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...