ஓரளவுக்கு சுமாரான மலையாளப் படங்களைக் கூட நாம் “மூன்றாம் பிறை” கிளைமேக்ஸ் கமல் போல உணர்ச்சிவசப்பட்டு கொண்டாடுகிறோம். தமிழில் அண்மையில் இந்த மலையாளப் படங்களை தூக்கி சாப்பிட்டு விடுகிற இரண்டு படங்களைக் கண்டேன். “வாழ்” மற்றும் “தேன்”. இந்த படங்களைப் பற்றி என் யுடியூப் தளத்தில் வீடியோ போடலாம் என இருக்கிறேன்.
“தேன்” ஒரு எளிமையான திரைக்கதை கொண்ட நேரடியான சமூக, அரசியல் பகடி. அந்த கடைசிக்காட்சியை கண்டு அழாமல் இருக்க முடியாது. “வாழ்” எந்த மலையாள, இந்திப் படமும் தொடாத களம், ஆழமான அரசியலைக் கொண்டது.


கருத்துகள்